மார்க்க கேள்வி பதில்கள்

🌼Question no: 171🌼

     Oru kanavaan, manaivi idam sandai potu kondu irukumothu, avar kovathil “talak, talak, talak” indru 3 tadavai voray neratil solli vittaal, athu 3 talak aha ahividuma? Illai athu 1st talak taan ahuma?

Talak solvathu patri vilakam sollunggal…

🌼கேள்வி எண்:171🌼

    ஒரு கணவன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கும்போது அவர் கோபத்தில் “தலாக், தலாக், தலாக்”என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால் அது மூன்று தலாக்காக ஆகிவிடுமா?
இல்லை அது முதல் தலாக்தான் ஆகுமா?

தலாக் சொல்வதின் சட்டம் என்ன?

🍂பதில்🍂

       கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான். அது உடனுக்குடன் சரியாகிவிடும்.
அதுபோலல்லாமல் பிரச்சனைகள் தீர்க்க முடியாத முற்றிய  நிலைமைக்கு போய் அது தொடந்து கொண்டேயிருந்து வாழ  முடியாத சூழ்நிலை வரும்போது இஸ்லாம் நமக்கு காட்டிதந்த வழிதான் “தலாக்” எனும் விவாகரத்து.

இந்த தலாக்கினால் கணவன், மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகள், பெற்றோர்கள் என மொத்த குடும்பமே பாதிப்புள்ளாகுவதால்,
இஸ்லாம் நான்கு படித்தரங்களை வைத்துள்ளது.

தலாக் கூறுவதற்கு முன்

கணவன் மனைவிக்கு அறிவுரை கூறியோ, அல்லது கணவன் மீது தவறிருக்குமாயின் மனைவி கணவனுக்கு அறிவுரை கூறியோ அவர்களுக்குள்ளாகவே பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும்.

அடுத்து கணவன் மனைவியை இலேசான தண்டனைகள் கொடுத்து பிரச்சனைகளை தீர்க்க முயலலாம்.

கணவன் மனைவியை படுக்கையிலிருந்து தள்ளி வைக்கலாம்.

இது எதுவுமே சரிவராத பட்சத்தில் இருவீட்டாரிடமிருந்து நடுவர்கள் வந்து பிரச்சனைகளை பேசி தீர்த்துவைக்க வேண்டும்.

மேற்கூறிய நான்கு விஷயங்களை கையாண்டும் வாழமுடியாது என யாரேனும் ஒருவர் முடிவெடுத்தாலும் தலாக் கூறிவிட இஸ்லாம் அனுமதித்துள்ளது.

_இரண்டு சாட்சிகளை வைத்து “தலாக்” உன்னோடு வாழ விரும்பவில்லை, என்று கூறினால் முதல் தலாக் நிறைவடைகிறது_

_அதற்கு பின் மூன்று மாதவிடாய் காலம் கழிந்து மீண்டும் மேற்கூறியது போல் இரண்டாம் தலாக் கூறவேண்டும்._

முதல் தலாக் அல்லது இரண்டாம் தலாக் கூறுனாலும் இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்தால் தாராளமாக மீண்டும் இணைந்து வாழலாம்.

கணவன், மனைவி பிரச்சனைகள் பிரிந்திருக்கும் சமயத்தில் ஒன்றுமில்லாதது போல் இருக்கும் என்பதாலும், இதன் பாதிப்பை ஒருவருக்கொருவர் பிரிந்திருக்கும்போது அறியக்கூடும் என்பதாலும் இஸ்லாம் இப்படி அழகான ஒரு சலுகையை அளித்துள்ளது.

_இரண்டு முறை தலாக் கூறிய பின்னரும் வாழ விருப்பமில்லை எனில் மூன்றாம் தலாக் கூறி நிரந்தரமாக பிரிந்து விட வேண்டும்._

இதற்கு பிறகு சேர்ந்து வாழ முடியாது.
ஒருவேளை மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து, அந்த கணவனை விவாகரத்து செய்ய வேண்டும்.
விவாகரத்து ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இதே சட்டம்தான் ஆனால் அவர்களுக்கு மஹர் தொகை ஆண்கள் அளிப்பதால் அதை இஸ்லாம் சட்ட அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும்.
இதுதான் தலாக்கின் சட்டம்.

அதை விடுத்து *ஒரே தடவையில் தலாக்,தலாக், தலாக், என மூன்று முறை ஏன்? முன்னூறு முறை கூறினாலும் அது முதல் தலாக் தான்*

*அதேபோல் கோபத்தில் போதிய சாட்சிகள் இல்லாமல் தலாக் கூறினால் அது தலாக் ஆகாது*

*போதிய சாட்சிகளுடன் வாழவிரும்பவில்லை என்று கூறினால்தான் அது “தலாக்”ஆகும்*

📚📖 ஆதாரங்கள்:

📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 2932, 2933, 2934

📙
الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ  ﴿2:229﴾

2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் – பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.

📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறுசெய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்றார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.

நூல் : புகாரி 5273, 5275, 5277

**********************************

🌸Question no: 172🌸

      Kuliyalaraiyil siruneer kalikkalama?

🌸கேள்வி எண்:172🌸

    குளியலறையில் சிறுநீர் கழிக்கலாமா?

💦பதில்💦

       சிறுநீர் கழிக்கும் இடத்தில் குளிக்கவோ, குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவோ இஸ்லாம் நமக்கு தடை செய்கிறது.

இப்போதுள்ள வீடுகளில் குளியலறையும், சிறுநீர் கழிக்கும் தொட்டியும் இணைத்தே கட்டப்படுகிறது.
அதற்குரிய இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, குளிக்கும் பகுதியில் குளிப்பது குற்றமாகாது. ஏனெனில் அது இணைத்து கட்டப் பட்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல்தான் இருக்கும். அசுத்தம் கலக்காது.
ஆனால் அப்படி இல்லாத அமைப்பில் இருந்தால் குளிக்குமறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.

ஏதேனும் நிர்பந்தமான நிலை இருக்குமானால் விதிவிலக்கு உள்ளது. இப்படி நிர்பந்தம் ஏற்படும்போது நன்றாக சுத்தம் செய்துவிட்டு குளிக்கலாம்
ஏனெனில் சுத்தம் என்பது ஈமானில் ஒரு பகுதி.

பொதுவான அடிப்படையில் *குளியலறையில் சிறுநீர் கழிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.*

📚📖ஆதாரங்கள்:

📔அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தான் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவும் பிறகு அதில் குளிக்கவும் வேண்டாம். பிறகு அதில் உலூ செய்யவும் வேண்டாம். ஏனெனில் அதில் தான் பெருமளவு வஸ்வாஸ் (மனக்குழப்பம்) உள்ளது என்று அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரளி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸை திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரும் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.)

📔அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுரைரா (ரளி) அவர்கள் தோழமை கொண்டது தோழமை கொண்ட நபித்தோழர் ஒருவரை நான் சந்தித்தேன். எங்களில் ஒருவர் தினந்தோறும் தலைவாரிக் கொள்வதையும் தான் குளிக்குமிடத்தில் சிறுநீர் கழிப்பதையும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர் என்று அவர் அறிவித்தார் என ஹுமைத் அல் ஹிம்யரி என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இந்த ஹதீஸை நஸயீ அவர்களும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.)

📔4842. உக்பா இப்னு ஸுஹ்பான்(ரஹ்) கூறினார்
குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். (நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

🐐Question no:173🐐

Kurbani, akkeka, ulhiya ithai patri sariyana wilakkam thewai and intha wahai kariyil ewwaru pangu kuduknum athil naam ewlawu edukalam? Wilakkam thewai

🐐கேள்வி எண்:173🐐

குர்பானி,அகீகா,உல்ஹியா இதைப்பற்றி விளக்கம் தேவை.
இந்த வகை இறைச்சிகளின் பங்கீடு பற்றிய விளக்கம் தேவை.

🐄பதில்🐄

*குர்பானி பற்றிய முழுமையான விளக்கம்*

இப்ராஹீம்(அலை)நபி அவர்களின் மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும். இதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.

பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னரே பலிபிராணியை அறுக்க வேண்டும்.

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

நபி (ஸல்) அவர்கள் பயனத்திலும் ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள். இந்த நடைமுறை அதன் அவசியத்தை உணர்த்துகிறது.

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானதாகும்.

கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும். மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மார்க்கம் உபதேசிக்கிறது.

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.

குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார்.

ஒட்டகம்,ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

சில ஊர்களில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.

குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.

கால்நடைகளை முறையாக ஒரு பக்கமாகப் படுக்கவைத்து அவை எழாமல் இருப்பதற்காக அவற்றின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பலிப்பிராணியை அறுக்கும் போது அது துள்ளி பூரணமாக அறுப்பதைத் தடுத்துவிடும். இதற்காக நபி (ஸல்) அவர்கள் இம்முறையைக் கடைப்பிடித்துள்ளார்கள்.

ஒட்டகத்தைப் பொறுத்தவரை நிற்க வைத்து அதன் ஒரு காலை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு அறுக்க வேண்டும். ஒட்டகம் என்பது ஆட்டைப் போன்றதல்ல. ஆட்டை அறுப்பதைப் போன்று படுக்க வைத்து அதை அறுக்க இயலாது. ஆகையால் ஒட்டகத்தில் இம்முறையைக் கடைபிடிக்க வேண்டும்.

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள்.

மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக உள்ளது.

அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி குர்பானி கொடுத்து நமது இறையச்சத்தை அதிகப்படுத்துவோமாக! இன்ஷா அல்லாஹ்

📚📖 ஆதாரங்கள்:

📕அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் (22 : 37)

📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : புகாரி (955)

📕குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (5546)

📕யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (954)

📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)

நூல் : முஸ்லிம் (3649)

📕நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அறவிப்பவர் பராஃ (ரலி)

நூல் புகாரி (951)

📕நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (7288)

📕எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

(அல்குர்ஆன் 2 : 286)

📕கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (3498)

📕நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

📕தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)

நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

📕நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.

நூல் : நஸயீ (4301)

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

📕பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!” என (முஹம்மதே!) கேட்பீராக! ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் (6 : 143)

📕நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)

📕எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)

📕நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)

📕தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)

நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)

📕அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

அல்குர்ஆன் (22 : 36)

📕நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2137)

📕குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி)

நூல் : முஸ்லிம் (3643)

📕ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : அலீ(ரலி)

நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)

📕ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

முஸ்லிம் : (3799)

📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)

நூல் : முஸ்லிம் (3649)

“”””””‘”””””””””””””””””””””””””””””””””””””””””””””””

*உல்ஹியா*

     உல்கியா என்றால் சிலர் தொழுகைக்கு முன் அறுக்கும் பலிப்பிராணி என்றும் தொழுகைக்கு பின் அறுக்கும் பலிப்பிராணி குர்பானி என்றும் கூறிவருகின்றனர்.
இது பலவீனமான செய்தியாகும்.
ஏனெனில், தொழுகைக்கு முன் பலிப்பிராணிகளை அறுப்பதை நபி(ஸல்)அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
*உல்ஹியா என்பதும் குர்பானி என்பதும் ஒன்றே ஆகும்*

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

👬Question no: 174👬

Muhammad nabi(sal) avargal “oru nanbanai evvaaru thervu seyvadhu, nanbanodu evvaaru bazhaguvadhu” endru solli irukkiraargal. Hadees adhaarathodu badhil thara vendum.

👬கேள்வி எண்:174👬
முஹம்மது நபி (ஸல்.) அவர்கள் “ஒரு நண்பனை எவ்வாறு தெரிவு செய்வது, நண்பனோடு எவ்வாறு பழகுவது.!”இது பற்றி என்ன சொல்லியிருக்கார்.ஹதீஸ் ஆதாரத்தோடு பதில் வேண்டும்.!

👭பதில்👭

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று நண்பர்களையும் நட்பு வட்டாரத்தையும் கொண்டிருப்பார்கள். நண்பர்கள் இல்லாத மக்கள் இல்லை என்ற சொல்லும் அளவிற்கு எல்லோருக்கும் அவரவர்கள் தகுதிக்கேற்ப நட்பு வட்டாரங்கள் அமைந்து இருக்கும்.
  ஒருத்தருடைய கண்ணியத்தையும் நடத்தையையும் அவரின் நண்பர்களைக் கொண்டே கணித்து விடும் அளவுக்கு நண்பர்கள் கூட்டம்.

  நண்பர்களில் சிலர் தன் நண்பனின் துயர் துடைப்பவராகவும்,கஷ்டமான காலங்களில் கை கொடுப்பவராகவும் இருப்பதையும் காணலாம். அதே வேளை சிலர், தங்களுடைய நண்பர்களின் தவறான செயல்களினால் தங்களின் பொன்னான நேரத்தையும் வாழ்வையும் சீரழித்துக் கொள்வதையும் காண முடிகிறது.

  இஸ்லாமும் நண்பர்கள் வைத்துக் கொள்வதை தடை செய்யாமல் ஊக்கப்படுத்துகிறது. நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்டுகிறது. ஆனால் அந்த நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்றும் வரைமுறையை ஏற்படுத்தித் தந்துள்ளது.அதன் அடிப்படையில் நமது நண்பர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அழகிய நட்பு நம்மை படைத்த இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரக்கூடியதாக உள்ளதால் நாம் தேர்வு செய்யும் நண்பன் நாம் பின்பற்றும் இஸ்லாமியக் கொள்கை பிடிப்புள்ளவனா? என்பதை பார்க்க வேண்டும்.எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை.

  அதேபோல் நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால் நம்முடைய குணத்திற்கும் பழக்க வழக்கத்திற்கும் ஒத்துப் போகுமா? என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

தீயவர்களுடைய நட்பு இவ்வுலக வாழ்க்கையை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் நாசப்படுத்தி விடும் என்பதை உணர வேண்டும். அதே போல் நல்லவர்கள், நேர்மையானவர்கள் உடைய நட்பு இவ்வுலக வாழ்வை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் சந்தோசமாக அமைத்து விடும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுமாறு கூறினார்கள்.

முஸ்லிமாக இருக்கக் கூடியவர் ஒருத்தரை நண்பராக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த தேர்வு அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இவ்வுலகில் கிடைக்கும் சொற்ப லாபங்களுக்காக நண்பர்களை தேர்வு செய்வதை விட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

  நண்பர்கள் என்ற பெயரில் இன்றைய தினங்களில் நம் நண்பர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நம்மை அல்லாஹ்விற்காக நேசிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்களா? என்பதை கவனிக்க வேண்டும். அல்லாஹ்விற்காக நேசித்தால், நண்பர்களை ஆக்கிக் கொண்டால் அந்த நண்பர்கள்  மூலமாக அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், நேசமும் கிடைக்கும் என்பதை அழகாக படம் பிடித்துக் காண்பிக்கிறது.

  மேலும் நல்ல நண்பர்கள் கிடைத்து விட்டால், யார் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் மறுமை நாளில் கவலைப்பட மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நண்பர்களில் பெரும்பாலோர் நம்மிடம் இருக்கும் பொருளாதாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும், நம்முடைய அந்தஸ்திற்காகவும், பதவி பகட்டுக்காகவும் இருப்பதை காணலாம். செல்வம் இருக்கும் போது நட்பு கொண்டாடும் நண்பர்கள் வட்டாரம், கஷ்டங்கள் வரும் போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவதை சர்வ சாதாரணமாக காணலாம்.

  நல்ல நண்பர்களையும் உலக ஆதாயத்திற்காக பழகும் நண்பர்களையும் அறிந்து கொள்வதற்கு நாம் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்களும் சோதனைகளும் அளவுகோலாக அமைந்து விடுகிறது. புயல் காற்று வரும்போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்பது விளங்குவதுபோல், சோதனைகள் நண்பர்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

 உண்மையான நட்பு என்பது, நம் உடலில் இருந்து ஆடை விலகும்போது, எப்படி கை விரைந்துச் சென்று ஆடையை பிடித்து மானத்தை காப்பாற்றுகிறதோ, அதேபோல் நண்பன் கஷ்டப்படும்போது அவனின் கஷ்டத்தை தீர்த்து வைப்பவனே உண்மையான நண்பன் ஆவான்.

இவ்வுலகில் ஒரு சிலரை நல்ல நண்பர்களாக உற்ற தோழர்களாக எண்ணியிருப்போம். ஆனால் அந்த உற்ற நண்பனே நம்மை ஏமாற்றியிருப்பான். நம்மை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றுவான். நம்பிக் கொடுத்த பொருளில் மோசடி செய்வான். சில நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்கள், தங்களின் உயிர் நண்பன் என்று சொல்லக் கூடியவனின் மனைவியையே தடடிச் சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இப்படிப்பட்ட நட்பையும் இஸ்லாம் அங்கிகரிக்கவில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள சூழலில் பள்ளி,கல்லூரிகள்,அலுவலகங்கள், அண்டைவீட்டார் என மாற்று மதத்தவர்கள் உள்ளதால் அவர்களுடன் நட்பு வைத்து கொள்வது தவறல்ல. ஆனால் அந்த நட்பு அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்து கொண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் பல மாற்று மதத்தவர்களிடம் நல்ல முறையில் பழகியுள்ளார்கள்.
அவர்களுடன் பழகுவது நம் மார்க்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நம் மார்க்கத்தை அவர்கள் அறிந்து கொள்ளவும், ஓரிறைக் கொள்கையை எத்தி வைக்கவும் அது ஏதுவாக அமையும்.
மாற்றுமத நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

  நண்பர்கள் தவறு செய்யும்போது அந்த தவறுகளை திருத்துபவர்களாக நண்பர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை நாடுபவர்களாக நண்பர்கள் இருக்க வேண்டும். அவ்வாறு தவறுகளை தடுக்கும்போது சிலர் எடுத்தெறிந்து பேசி விடுவார்கள். அந்த நேரங்களில் அவர்களை கோபித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆகவே நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவர்கள் இஸ்லாம் காட்டிய முறைப்படியும் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் அமைத்துக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கிருபை செய்வானாக!

📚📖ஆதாரங்கள்:

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதி (1867)

📓உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று(குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (ஆயிஷா(ரலி) புகாரி 3336)

📓  நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். (அபூமூசா (ரலி) புகாரி 3336)

📓குற்றவாளியிடம், உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (அல்குர்ஆன்: 74 : 40-45)

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் தான் ஈமானை புரணப்படுத்திக் கொண்டவர் (அபூஉமாமா(ரலி) அபூதாவூத் 4061)

📓  
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில், இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்தபோது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை சந்திக்கச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டார். அதற்கு இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் எனக் கூறினார்.

(அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் 4656)

📓  அல்லாஹ் கூறுவதாக, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக் கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும், என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகி விட்டது. (முஆத் (ரலி) அஹ்மத்(21114)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்றுக் கூறுவான் (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் 4655)

📓அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த  பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அபூதாவூத் 3060)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆக முடியாது.

(அனஸ் (ரலி) புகாரி 13)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான்,அவனை கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரின்  மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ் நீக்குகிறான். எவர் ஒருவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான். (அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) புகாரி 2442

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

மார்க்க கேள்வி பதில்கள்

🌹Question no:161🌹

    Nalla aangalukku, manaivi amaivadhillai. Nalla pengalukku kanavan sariyaaga amaivadhillai. Ellaam vidhippadi dhaan.
Aanaal idhil iraivan sollum kotpaadu enna? Vilakkam thevai

🌹கேள்வி எண்:161🌹

    நல்ல  ஆண்களுக்கு ,மனைவி சரியாக அமைவதில்லை ,,நல்ல பெண்களுக்கு  கணவன் சரியாக அமைவதில்லை  எல்லாம் விதிப்படிதான் எல்லாம்,ஆனால் இதில் இறைவன் சொல்லும் கோட்பாடு  என்ன? விளக்கம்  தாருங்கள்?

🌿பதில்🌿

   கணவன்,மனைவி உறவில் நல்ல ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரியான மனவாழ்க்கை அமைவதில்லை என்று கூற இயலாது. சில இடங்களில் இவ்வாறாக அமையலாம். இது அடிப்படையிலேயே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

   கணவன், மனைவி உறவை பொறுத்தவரை இஸ்லாம் வகுத்த வரையறைக்குள் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தேர்ந்தெடுக்கலாம்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது அந்த பெண்ணோ? ஆணோ? அழகுக்காகவோ,செல்வத்துக்காகவோ,குலத்திற்காகவோ இல்லாமல் மார்க்கப்பற்றுள்ளவர்களை தேர்ந்தெடுத்தாலே பெரும்பாலான குடும்பப்பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி தேர்ந்தெடுத்தாலே ஒருவருகொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து புரிதலில் விரிசல் இல்லாது பார்த்துக்கொள்ளலாம்.

ஆனாலும் ஒரு ஆணின் விலா எலும்பிலிருந்துதான் அல்லாஹ் அவன் மனைவியை படைக்கிறான்.
இது விதியின் அடிப்படையில் தான் நடக்கிறது.
இதில் இருவரும் விட்டுக்கொடுத்து, ஒருவர் மற்றொருவரை புரிந்தாலே வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதையும் மீறி நல்ல கணவனோ, மனைவியோ அமையவில்லை எனில் இதில்தான்  அல்லாஹ் சோதனை வைத்திருக்ககூடும். அந்த சோதனையை பொறுமையாக வென்றால் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறலாம். *எனவே, பொறுமை காப்பது அவசியம். வாழ்வு இறுதிவரை அப்படியே இருந்துவிடாது. பொறுமையின் காரணம் நிச்சயம் நல்ல மாற்றத்தை நாளடைவில் ஏற்படுத்தும்*

பொறுக்கமுடியாத சோதனையாக மணவாழ்க்கை அமைந்தால்,அல்லாஹ் அதற்கும் ஒரு வழி கற்றுத்தந்துள்ளான்.
அவர்களை விலக்கும் உரிமை உண்டு. இறுதுவரை இன்னல்பட்டுக் கொண்டே வாழ அவசியமில்லை. விலகி வந்து நமக்கு பிடித்த இன்னொரு வாழ்க்கயை இஸ்லாம் கூறிய வரையறைக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

விதியை பொறுத்தவரை அல்லாஹ்தான் ஏற்படுத்தினான் ஆனாலும் வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் விதியின் மீது பழிபோட்டு உட்காரமுடியாது.

உதாரணமாக, ஒரு ஆசிரியர் மாணவருக்கு எல்லாம் கற்றுத்தருகிறார். நன்றாக படிக்கும் மாணவன் தேர்வில் வெற்றிபெற்று அடுத்த வகுப்புக்கு போவான் என அந்த ஆசிரியருக்கு நன்றாக தெரியும்.
அதேபோல் நன்றாக படிக்காத மாணவன் தோல்வி அடைவான் என்றும் அவருக்கு தெரியும்.
ஆனாலும் அவன் தேர்வெழுதிதான் தீரவேண்டும்.

அதுபோல்தான் அல்லாஹ் அனைத்தையும் கற்றுத்தந்துள்ளான். அவன் ஏற்கனவே விதித்தும் விட்டான், “யார் நேர்வழி பெற்றவர்கள் என்று” அவர்கள் அதை அடைவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள்.

விதியை பொறுத்த வரை பல ஆராய்ச்சிகள் பல அறிஞர்களிடம் நடந்து கொண்டுதான் இருக்கும். நமக்கு கொடுக்கப்பட்ட அறிவில் பெரிய அளவில் இதை கூற முடியாது. இறைவனிடம் உள்ள மறைவான ஞானங்களில் இதுவும் ஒன்று.
*விதியை பற்றிய அறிவு முழுமையாக மனிதர்களுக்கு கொடுக்கப்படவில்லை.*

*இது போன்ற சோதனைகளுக்கு வாழ்வில் விரக்தியோ, வெறுப்போ அடையாமல்  தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்து,* *பொறுமையை கடைபிடித்து, கிடைக்காதவற்றை* *எண்ணி வருந்தாமல*்
*கிடைத்தவற்றில் நிம்மதி அடைந்து,அடுத்தவர்களை ஒப்பிடாமல் இருந்து விட்டுக்கொடுத்து,* *அல்லாஹ்விடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டாலே இப்படியான எண்ணங்கள் வராமல் தடுக்கலாம்*

📚📖ஆதாரங்கள்

📓

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

📓

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ ۚ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ ۚ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا  ﴿4:34﴾
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்…..

📓இம்ரான்பின்ஹுஸைன் (ரலி)  அவர்கள்கூறுகிறார்கள் :

ஒருமனிதர் “அல்லாஹ்வின்தூதரே!சொர்க்கவாசிகள்யார்?நரகவாசிகள்யார்? என்று(முன்பேஅல்லாஹ்வுக்குத்)தெரியுமா?” எனக்கேட்டார். நபி(ஸல்) அவர்கள் “ஆம் (தெரியும்)”என்றுசொன்னார்கள். அவர்”அவ்வாறாயின்ஏன்நற்செயல்புரிகின்றவர்கள்நற்செயல்புரியவேண்டும்?” என்றுகேட்டார். நபி (ஸல்)அவர்கள் “ஒவ்வொருவரும்”எ(தைஅடைவ)தற்காகப்படைக்கப்பட்டார்களோ’ அல்லது”எ(தைஅடைவ)தற்குவாய்ப்பளிக்கப்பட்டார்களோ’அதற்காகச்செயல்படுகிறார்கள்”என்றுபதிலளித்தார்கள்.

நூல் : புகாரி (6596)

📓மனிதர்களுடையஅநீதியின்காரணமாகஅவர்களைஅல்லாஹ்தண்டிப்பதாகஇருந்தால்பூமியில்எந்தஉயிரினத்தையும்அவன்விட்டுவைக்கமாட்டான்.மாறாககுறிப்பிட்டகாலக்கெடுவரைஅவர்களைப்பிற்படுத்தியிருக்கிறான்.அவர்களின்கெடுவந்ததும்சிறிதுநேரம்பிந்தவும்மாட்டார்கள்.முந்தவும்மாட்டார்கள்.

அல்குர்ஆன்16 : 61)

📙 وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًا

20. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, சிலருக்குச் சோதனையாக484 ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன்  25:20

••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🕌Question no:162🕌

        Pengal thozhumbodhu kaalurai poduvadhu kattaayama?

🕌கேள்வி எண்:162🕌

தொழும்போது காலுறை அணிவது கட்டாயமா?

🔷பதில்🔷

    தொழும்போது பெண்கள் முகம்,முன்னங்கை தவிர ஏனைய இடங்களை மறைத்தல் மஹரமில்லாத ஆண்கள் இருக்குமிடத்தில் இருப்பது கட்டாயம் என்பது நாம் அறிந்ததே!

அதே போல்தான் தொழும்போதும் முகம்,முன்னங்கை தவிர ஏனைய இடங்களை மறைக்க வேண்டும்.

காலுறை அணிய வேண்டியது கட்டாய சட்டம் கிடையாது. இஸ்லாம் கூறிய முறையில் ஆடை இருப்பதே போதுமானது.

ஆனாலும்,பொது இடங்களிலும்,பள்ளியில் தொழும்போதும் காலுறை அணிவது பேணுதலாக இருக்கும் எனில் அணிவது தவறு கிடையாது.

சில குளிர்பிரதேசங்களில் காலுறை அணியாமல் இருக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் மஸஹ் செய்யும் முறைமையை நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள்

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பயணத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் காலுறை அணிந்திருந்தார்கள்.
எனவே,இது பெண்களுக்கு மட்டுமல்ல நம் சூழலை பொறுத்து அனைவருமெ அணிந்து கொள்ளலாம்.

எனவே, *பெண்களுக்கு காலுறை அணிவது என்பது கட்டாயமல்ல. ஆனாலும் அணிவது தவறல்ல*

📚📖ஆதாரங்கள்

📓நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், ‘அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்’ என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள். 

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)

📓காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், ‘அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்’ என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். ‘பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்’ என்று அலீ (ரலி) விடையளித்தார்கள். 

அறிவிப்பவர்: ஷுரைஹ்

நூல்: முஸ்லிம் 414 

📓நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். 

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471

📓நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். 

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 140, அஹ்மத் 699 

📓நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.  

அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி)

நூல்: புகாரீ 205 

📓இக்ரிமா (ரஹ்) அவர்கள், ஒரு பெண் ஒரே ஆடையில் தன் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டாலும் போதுமானதாகும். என்று கூறினார்கள்.

372 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள் அப்போது இறை நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) கலந்து கொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறிய மாட்டார்கள்.

============================

🌺Question no: 163🌺

kootu duaa sariyaa?thavaraa?
Thavarendraal karanathai vilakkavum

🌺கேள்வி எண்:163🌺

    கூட்டு துஆ சரியா? தவறா?
தவறென்றால் காரணத்தை விளக்கவும்.

🍃பதில்🍃

ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.

இந்த சுன்னத்தான வழிமுறைக்கு மாற்றமாகவே தொழுகைக்குப்பின் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு இந்த மாதிரியான அமைப்பில் துஆக்களை உருவாக்கிக் கொண்டு ஓதிவருகிறார்கள். தொழுகை நடாத்தக் கூடிய இமாம் அந்த துஆக்களை ஓத மற்றவர்கள் கிளிப் பிள்ளைபோல் “ஆமீன்” சொல்லி விட்டு போகிறார்கள். அது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் இந்த் மாதிரி -இந்த பள்ளி இமாம் ஓதுகிறமாதிரி- துஆ ஓத சஹாபாக்கள் ஆமீன் சொன்னாரகளா? ஏன்பதை கூட விளங்குவதில்லை.

இமாம் என்ன துஆ ஓதுகிறார். எதைப் பற்றி அவர் துஆ கேட்கிறார். அதன் பொருள் என்ன? யாருடைய நிலையை அறிந்து யாருக்காக துஆ கேட்கிறார். அவருடைய கஷ்டத்தை மனதில் வைத்து துஆ கேட்கிறாரா? பள்ளிக்கு வருகை தந்த ஒவ்வொருவருடைய மனநிலையை அறிந்து புரிந்து துஆ கேட்கிறாரா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் மக்களும் “ஆமீன்! ஆமீன்!” என்று சொல்லிவிட்டு வருகிறார்கள்.

தொழுகை முடிந்தபின் இமாம், சுப்ஹா னல்லாஹ்(33), அல்ஹம்துலில்லாஹ்(33) அல்லாஹு அக்பர்(34) என்ற எண்ணிக் கையில் திக்ருகளை மாத்திரம் சொல்லுவார். மக்களும் அதனை சொல்லிக் கொண்டிருப்பர். இமாம் திக்ருகள் சொல்லி முடிந்ததும் சப்தமிட்டு துஆ ஓத ஆரம்பித்து விடுவார். உடனே மக்களும் செய்கின்ற திக்ருகளை இடைநடுவில் நிறுத்திவிட்டு இமாமின் துஆவிற்கு ஆமீன் சொல்ல ஆரம்பித்து விடுவர்.

தனிமையாக இருந்து உள்ளம் உருகி தங்களுடைய கஷ்டங்களை தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டுமே தவிர மற்றவர்களுடைய தேவைகள் என்னவென்று தெரியாத ஒருவர் (இமாம்) தயாரித்து வைத்த துஆவுக்கு ஆமீன் சொல்வது அறிவுள்ள செயலாகுமா?

தொழுகை நடத்தக் கூடிய இமாமின் பிரச்சினைகள் என்னவென்று தொழ வரக் கூடிய மக்களுக்குத் தெரியாது. தொழுகைக்கு வந்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்று இமாமுக்கும் தெரியாது. இந்நிலையில் இமாம் ஒருசில வசனங்களை அரபியில் எழுதி தயார்படுத்தி பாடமாக்கி கூற, அதற்கு மற்றவர்கள் ஆமீன் சொலலவேண்டும் என்பது அறிவீனமில்லையா?

பணத்தை பறிகொடுத்து..
பிள்ளையை பறிகொடுத்து..
மனைவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து..
தொழிலை இழந்து..
சொத்தையிழந்து..
அனியாயத்திற்கு ஆளாகி..
வறுமையில் தள்ளாடி..
சோற்றுக்கு வழியின்றி..
ஏழ்மையில் உழன்று..
குடும்ப பிரச்சனையில் சிக்குண்டு..
சமூக பிரச்சனையில் அல்லல்பட்டு..

என பலரும் பல பிரச்சனைகளுடன் பள்ளிக்கு வருபவர். இந்நிலையில் இவர்கள் தயாரித்து வைத்திருக்கும் துஆவிற்கு ஆமீன் சொல்வது பொறுத்தமா? அல்லது தானாக தன்னுடைய பிரச்சனைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு தனது மனதில் உள்ள பாரத்தை இறக்கி விடுவது பொறுத்தமா

உதாரணமாக நாம் நம் அதிகாரியிடம் ஏதேனும் கோரிக்கை வைக்க வேண்டும் எனில்,நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ,அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.

எனவே,அல்லாஹ்விடத்தில் அமைதியுடனும்,பணிவுடனும்,உள்ளச்சத்துடன் கேட்கும் துஆவில் உள்ளது நிச்சயமாக கூட்டுதுஆவில் கிடைப்பதற்கு சாத்தியமில்லை.

ஒன்றிரண்டு கூட்டுதுஆ பற்றிய செய்திகள் அனைத்தும் மிக மிக பலவீனமானவையாகும்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னதுபோலோ,செய்தது போலோ ஒரு ஹதீஸும் இல்லை. அறிவிப்பாளர்கள் தாமே சொன்னது போலுள்ள செய்திகள் தான் உள்ளது.

*பிரார்த்தனை என்பது ஒரு வணக்க வழிபாடாகும்*        *இத்தகைய வணக்க வழிபாட்டை*
*நபி(ஸல்) அவர்கள் சஜ்தாவிலும்,அத்தஹியாத்திலும் பிரார்த்தனை செய்ய வழிகாட்டியுள்ளார்கள்* *உளப்பூர்வமாக, தனிமையில் பணிவுடன் பிரார்த்தனை புரிய மட்டுமே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தத்துள்ளார்கள்*
  *எனவே, ஒருவர் பிரார்த்திக்க அவருக்கு பின்னுள்ளவர்கள் ஆமீன் சொல்வது மார்க்கத்தில் இல்லாத*
*விஷயமாகும். எனவே,இது தவறான ஒன்றாகும்*

📚📖ஆதாரங்கள்

📘துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

📘உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்  (திருக்குர்ஆன் 7:55

📘உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர் (திருக்குர்ஆன் 7:205)

”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

🌪Question no: 164🌪

Oru Muslim” yaa Allah enakku maranathai kodu” endru dua ketkalaamaa?

🌪கேள்வி எண்:164🌪

ஒரு முஸ்லீம் “யா அல்லாஹ்  எனக்கு  மரணத்தை கொடு ” என்று துஆ. கேட்கலாமா.?
ப்ளீஸ் பதில் தாங்க அட்மின் ஸிஸ்டஸ்.,

💨பதில்💨

  தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந்து கொள்ள முடியாது.

இவருக்கு இப்போது மரணம் வராது என்று கருதும் அளவுக்கு இளமையாகவும், உடல் நலத்துடனும் கவலை ஏதுமின்றி காணப்படும் எத்தனையோ பேர் யாரும் எதிர்பாராத வகையிலும்,விபத்துக்களிலும் திடீரென்று மரணித்து விடுகின்றனர். இத்தகையோர் மிகவும் அரிதாகவே உள்ளனர்.

பெரும்பாலானவர்கள் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்து படிப்படியாகத் தளர்ச்சி அடைந்து மரணிக்கின்றனர். தமக்கு மரணம் விரைவில் வந்து விடும் என்பதை இவர்கள் அன்றாடம் உணரக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றனர்.

திடீரென மரணிப்பவர்களுக்குக் கிடைக்காத நல்ல வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கின்றது. மரணம் நெருங்கி விட்டதை இவர்கள் உணர்வதால் கடந்த காலங்களில் செய்யத் தவறிய காரியங்களைச் செய்து முடிக்கவும்,கடந்த காலத் தவறுகளைச் சரி செய்யவும் இவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

ஏதேனும் துன்பத்தில் வாழ்வில் விரக்தி ஏற்படும்போதும்,மரணத்தின் அறிகுறிகளைக் காணும் போதும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள்.

முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி,சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள்.இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு! என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

*நமக்கு துன்பங்கள் அளிக்கப்படுவதே நம் சோதனைக்காகத்தான்*
அதை பொறுமையாக வென்றால் அல்லாஹ்விடத்தில் அளப்பரிய கூலி உள்ளது.
அதற்காக மரணத்தை நிச்சயமாக வேண்டுதல் கூடாது.

இன்னும் சிலர் இறைவனிடத்தில் இவ்வுலகிலகத்திலேயே துன்பத்தை தந்துவிடு,மறுமையில் கொடுக்க உள்ளதை இங்கேயே அனுபவித்து விட்டால் மறுமையில் நிம்மதியாக இருக்கலாம் என்று பிரார்த்திக்கிறார்கள்.
இதுவும் தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

ஒரு மூஃமீன் இம்மையிலும், மறுமையிலும் என்னை தண்டித்து விடாதே! என்றுதான் பிரார்த்திக்க வேண்டும்.

*எனவே நோய் நொடி, முதுமை,குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்*

📚📖ஆதாரங்கள்

📕தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5671, 6351

📕ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதீ 2319

📕இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும்,தமது பிள்ளைகள் விஷயத்திலும்,தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத்7521, 9435

📕பறவைக் குஞ்சு போல் மெலிந்து போன ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நீ ஏதாவது பிரார்த்தனை செய்து வந்தாயா?என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம்! இறைவா,மறுமையில் நீ எனக்கு என்ன தண்டனை கொடுக்க உள்ளாயோ அதை இவ்வுலகிலேயே எனக்கு முன்கூட்டியே வழங்கி விடு என்று பிரார்த்தித்து வந்தேன்என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்சுப்ஹானல்லாஹ்! இதை நீ தாங்க மாட்டாய்என்று கூறிவிட்டுஇறைவா இவ்வுலகிலும் எனக்கு நல்லதைத் தா! மறுமையிலும் நல்லதைத் தா! மேலும் நரகத்தின் வேதனையிலிருந்து என்னைக் காப்பாற்று எனக் கூறியிருக்க மாட்டாயா?என்று அறிவுரை கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவரைக் குணப்படுத்தினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4853

=============================

🌺🌺🌺கேள்வி எண்:165🌺🌺🌺

இஸ்லாமிய தலைப்புகளில் ஏதேனும் உரை இருந்தால் அனுப்பவும்!

🍓🍓🍓பதில்🍓🍓🍓

கீழ்கண்ட ஆடியோக்களை கேட்கவும்..

*தலைப்பு-இனிய இல்லறம்*
_சகோதரி நூரி(25:11)_

*குர்ஆன் வசனமும்,ஹதீஸும்*
_சகோதரி பாத்திமா(10:41)_

*தலைப்பு-தொழுகை*
_சகோதரி ஹுஸ்னா(25:28)_

*காதலால் சீரழியும் இஸ்லாமிய பெண்கள்*
_இலங்கை சகோதரி(22:23)_

=============================

💵Question 166💵

  Naan veliyooril irukkayil en nanbaridam oruvarukku avar zakath kodukkumaarum,naan oorukku thirumbiyavudan panathai thiruppi tharuvadhaagavum koorinen.2naal kalithu oor thirumbiyavudan nanbaridam panathai thiruppi kodukkalama sendraal avar arave vaanga maruthuvittar.

Adhanaal enakku  faaidha illaamal poivittadha?

💵கேள்வி எண்:166💵

    நான் வெளியூரில் இருக்கும்போது எண் நண்பரிடம் ஒருவரை குறிப்பிட்டு அவர்க்கு ஸகாத் கொடுக்குமாறும், ஊருக்கு திரும்பியதும் திரும்ப அந்த பணத்தை அளிக்குமாறும் கூறினேன். ஊர் திரும்பியவுடன் பணத்தை நண்பருக்கு திரும்ப அளிக்கயில் அதை அறவே வாங்க மறுத்துவிட்டார்.
அதனால் எனக்கு கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விட்டதா?

💶பதில்💶

   *எந்த ஒரு மனிதனும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமேதான் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அடிப்படை கொள்கை*

*ஒருவர் நனமை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை இஸ்லாம் தெளிவாக பிரகடனப் படுத்துகிறது.*

நீங்கள் வெளியூரில் இருந்த காரணத்தால் அவரிடம் ஸகாத் கொடுக்க சொன்னது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்குரிய பணத்தை அவரிடம் கட்டாயம் ஒப்படைத்து விட வேண்டும். இல்லையெனில் இறைவன் நாடிய படி ஏவிய  நன்மை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
நிச்சயமாக முழுமையான நன்மை பெற முடியாது.
அது அவருக்குத்தான் சேரும்.

இதுவே,நம்முடைய பொறுப்பு தாரர்கள் உதாரணமாக நம் தந்தையோ,கணவனோ கொடுத்திருந்தால் அவர்களுக்கு நாம் திரும்ப அளிக்க தேவையில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி எண்ணத்திற்கும், கொடுத்ததற்கும்,சம்பாத்தியதற்கு அனைத்திற்கும் அல்லாஹ் கூலி வைத்துள்ளான்.

ஆனால்,இவர் நண்பர் எனும் காரணத்தால் நிச்சயமாக அந்த பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். இல்லையெனில் *அதற்கான முழுமையான கூலி நமக்கு கிடைக்காமல் போய்விடும்*

எனவே,கட்டாயப்படுத்தி அந்த தொகையை கொடுத்துவிட வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் நாம் நேரிடையாக அவர்களுக்கு ஸகாத் கொடுத்தல் நலம். ரமலானில்தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. நாம் பிறகு கூட கொடுத்து கொள்ளலாம். ரமலானில் செய்யும் அமல்களுக்கு கூடுதல் நன்மை ஆதலால் இந்த மாதத்தில் தர்மம் செய்ய போட்டி போடுகிறோம்.

ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் அமல்களில் எது ஏற்று கொள்ளப்படும் எனில், _தன் தாயோ,தந்தையோ இயலாமலோ,உயிருடனோ இல்லாத சமயத்தில் அவர்கள் நாடியதை_ _பிள்ளைகளோ,பொறுப்புதாரர்களோ செய்தால் அந்த அமல்கள் அந்த தாய்க்கோ,தந்தைக்கோ  இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப் படும்_
இது அல்லாஹ் அனுமதித்த ஒன்று. ஆனால் இதை தவிர ஏனைய அமல்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

ஏதோ ஒரு சூழ்நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொண்டாலும் நாம் செய்வதுதான் நமக்கு. அடுத்தவரின் அமல்கள் நம் கணக்கில் சேராது.

📚📖ஆதாரங்கள்

📓எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

📓அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:134

📓எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.

திருக்குர்ஆன் 2:286

📓(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 6.164

📓நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

திருக்குர்ஆன் 17:15

📓ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது.

திருக்குர்ஆன் 35:18

📓ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 39:7

📓ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தாய் திடீரென இறந்து விட்டார்; அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்; எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்குக் கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1388, 2760

📓ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா?’என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்’என அவர் கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2756, 2762, 2770

📓
مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا  ﴿4:85﴾
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🐠Question :167🐠

Dam or lake meen alladhu sila pannai meengalukku avai edai kooda iraichiyai theeniyaga tharugiraargalaam.andha iraichi halal/haram aanadha enbadhu namakku theriyadhu.

Adhe pol kadalil meengal alukku ,irandha pira meengal,sila nerangalil manidhargalin pinangal kooda unnum.

Innilayil( meen saapittu valarndha porutkal haram/halal endra knowledge illadha )dam/lake meengalai saapidalama??

Sapiduvadhu harama? Halala?

🐠கேள்வி எண்:167🐠

     அணைக்கட்டுகளிலும், ஏரி,குளம் ஆகியவற்றில் வளரும் மீன்களுக்கு இறைச்சியை இரையாக கொடுக்கிறார்கள். அந்த இறைச்சி ஹலாலா?ஹராமா? என்று நமக்கு தெரியாது.

அதுபோல் கடலில் வாழும் மீன்களும் இறந்த மீன்களை, சில சமயம் பிணங்களை கூட உண்ணும்.

இந்த நிலையில் இப்படியான மீன்களை நாம் சாப்பிடலாமா?
இது ஹராமா? ஹலாலா?

🐋பதில்🐋

  அல்லாஹ் தன் திருமறையில் கடலை நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான் எனும் செய்தியிலிருந்து கடல்வாழ் உயிரினங்கள் நமக்கு அனுமதிக்கப்பட்டதே என தெளிவாக அறிய முடிகிறது.

   கடல் மீன்கள்,உயிருடன் இருக்கும் நிலையிலும், இறந்த நிலையிலும் நமக்கு அனுமதிக்கப்பட்டதே.

கடல் பிராணிகள் எந்த உணவை சாப்பிட்ட போதிலும் நமக்கு அல்லாஹ் அனுமதியளித்த காரணத்தினால் அதை நாம் எவ்வித தயக்கமுமின்றி அதை உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாம் தடை செய்யத் தேவையில்லை.

கோரைப்பல் கொண்ட பிராணிகளை உண்பதை அல்லாஹ் தடுத்துள்ளான், ஆனாலும் கடலில் வாழும் சுரா மீனை அல்லாஹ் அனுமதித்துள்ளான்.

அது போல் அனைத்து நீர்நிலைகளில் இருக்கும் மீன்களை உண்ணுவதிலும் தவறில்லை . ஆனால்… ஏரி,குளம், குட்டை போன்றவைகளில் அந்த நீர்நிலை அசுத்தமாக இருப்பின் நன்மைகருதி அதை உண்ணாமல் விட்டுவிடுவதே சிறந்தது.

எதில் நமக்கு சந்தேகம் உள்ளதோ அதை தவிர்த்து விடுதல் நல்லது. இது போன்று நீர் தேக்கங்களில் தொழிற்சாலை கழிவுகள் தேங்கும் நிலை ஏற்படலாம். அதை அந்த மீன்கள் தின்று நச்சுத் தன்மை அடைய வாய்ப்புள்ளது. எனவே, அதை மனித அறிவுக்குட்படுத்தி அதை தவிர்த்தல் நலம்.

மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது  உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும். 

வளர்க்கப்படும் மீன்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் நமக்கு மீன் ஹலால்தான். ஏனெனில் ஹலால்,ஹராம் எனும் விதி மனிதர்களுக்கே தவிர மற்ற உயிரிணங்களுக்கு கிடையாது.

ஆகவே *கடல் மீன்கள் எப்படியிருப்பினும் அது ஹலால்தான். அதனால் எவ்வித பாதிப்பும் கிடையாது. மற்ற நீர்நிலை மீன்கள்  ஹலால் எனும்போதிலும் அது நச்சுத்தன்மை நிறைந்ததாக வளரும்,வளர்க்கப்படும் சூழ்லை பொறுத்து அது உடலுக்கு தீங்கு தரும் என சந்தேகித்தால் அதை தவிர்த்தல் சிறந்தது.*

📚📖ஆதாரங்கள்

📕
وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ  ﴿16:14﴾
16:14. நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.

📕
وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ ۖ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا ۖ وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ  ﴿35:12﴾
35:12. இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் – இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!

📕உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன் 2:195)

📕கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூற்கள்: திர்மிதீ 64, அபூதாவூத் 76, இப்னு மாஜா 380, நஸயீ 59, 330, 4275 அஹ்மத் 6935, 8380, 8557, 8737, 14481, 22017 முஅத்தா)

📕விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: புகாரி 5781, 5530)
***********************************

🍒Question no: 168🍒

  Parents alive a irukum pothey  avangalukaga Quran recite panuvathu, darood Sharif oothuvadhu, zikir seithu avargalukaga hadhiya seiyalama? Seithal andha nanmai avargaluku serum a?

🍒கேள்வி எண்:168🍒

     பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்காக குரான் ஓதுவது, திக்ரு செய்வது, தர்மம் செய்வது போன்றவை மார்க்கத்தில் கூடுமா?
நாம் செய்யும் இந்த விஷயங்கள் அவர்களுக்கு சேருமா?

☘பதில்☘

      பொதுவாக குரான் ஓதுதல்,திக்ரு செய்தல் ஆகியவை உயிருடன் இருக்கும் பெற்றோர்களுக்கும் சரி, மரணித்த பெற்றோக இருப்பினும் சரி அவர்களை சென்றடையாது. நாம் ஓதினால் அந்த நன்மை நமக்குத்தான் கிடைக்கும்.

அவர்கள் உடல்நிலை சரியில்லாத,இயலாத சூழ்நிலையில் அவர்கள் கேட்கும் வண்ணம் குரானை ஒலிக்கச் செய்யலாம். அது அவர்களுடைய எண்ணத்தை பொறுத்து கவனித்த நன்மை அல்லாஹ் நாடினால் கிடைக்குமே தவிர நாம் ஓதினால் நமக்குத்தான் அந்த நன்மை கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு சூழலிலும் ஒருவருக்காக மற்றவர் குரான் ஓதுதலை ஊக்குவிக்கவில்லை.

அவர்கள் உயிருடனிருக்கும் நிலையில் அவர்களுக்கு நாம் கற்று கொடுக்கலாம். மிகவும் வயதான நிலையில் உள்ளவர்களுக்கும் கேட்கும் திறன் இருப்பின் சிறிய சூராக்கள் கற்றுக்கொடுக்கலாம். ஓதத்தெரியவில்லையெனினினும் திக்ருகள் சொல்லித்தரலாம். அல்லது கேட்கச்செய்யலாம்.

தர்மத்தை பொறுத்தவரை பெற்றவர்களுக்கு அவர்களுடைய பொறுப்புத்தாரர்கள் தர்மம் செய்யலாம். அவர்கள் தர்மம் செய்ய நாடியிருந்தால் நிச்சயமாக அதை நாம் நிறைவேற்ற வேண்டும்.

*பெற்றவர்கள் மரணித்திருந்தாலோ அல்லது உயிருடன் இருந்து இயலாத போது, அவர்களுடைய நோன்பு, தர்மம், கடன், ஹஜ் ஆகியவைகளை பிள்ளைகள் அதை நிறைவேற்றினால் பெற்றவர்களை இந்த நன்மை சென்றடையும். ஆனால் குரான் ஓதுவது, திக்ரு போன்றவை அவர்களை சென்றடையாது*

📖📚ஆதாரங்கள்

📗ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”ஆம் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­) நூல்: புகாரி (1953)

📗எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

📗அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்துகொண்டிருந்த போது”கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்!’ என்றார்கள். இது “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.

புகாரி (1513)

📗புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். அப்பெண்மணி, “என் தாயார்மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். அப்பெண்மணி, “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

============================

🌺Question no: 169🌺

    Akkavin maganuku soozhnilai karanamaga orumurai mattum thangai thaippal koduppadhal ,

Thangayin magalai akkavin magan thirumanam seyyalama? Koodadha?

🌺கேள்வி எண்:169🌺

      அக்காவின் மகனுக்கு சூழ்நிலை காரணமாக ஒருமுறை மட்டும் தங்கை தாய்பால் கொடுப்பதால்,
தங்கையின் மகளை அக்காவின் மகன் திருமணம் செய்யலாமா? கூடாதா?

🍃பதில்🍃

       அல்லாஹ் தன் திருமறையில் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களை மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.

அதில் சகோதரிகளின் பிள்ளைகள் திருமணமுடிக்க ஆகுமானவர்களே!
ஆனால் அந்த தாயிடம் பெற்ற குழந்தைகளாயினும் பெறாத குழந்தைகளாயினும் பால் குடித்திருந்தால் அந்த  குழந்தைகள் பால்குடி சகோதர, சகோதரிகளாகிவிடுவார்

நீங்கள் குறிப்பிட்ட அக்கா மகனுக்கு அவர்கள் சகோதரி பால் கொடுத்த காரணத்தினால் அந்த குழந்தைகள் பால்குடி சகோதர, சகோதரிகளாகி விட்டனர்.
இவ்வளவு முறை குடித்தால் தான் சகோதர உறவு என்று எந்த வரைமுறையும் கிடையாது.
அது சூழ்நிலை காரணமாக ஒருமுறை மட்டுமே கொடுத்திருந்தாலும் அது பால்குடி சகோதர முறை ஆகிவிடும்.

மார்க்கத்தில் பால்குடி சகோதரிகள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களாவர்.
*எனவே இவர்கள் திருமணம் செய்ய கூடாது.*

📚📖ஆதாரங்கள்

📘
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا  ﴿4:23﴾
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது – இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

📘நபி(ஸல்) அவர்களிடம் ‘தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்” என்று கூறினார்கள. (புகாரி,5100)

**********************************

🌊 Question no: 170 🌊

  “Unakku pin saandraaga iruppadharkaga unnai un udaludan indru paadhugappom”(10:92)

Indha vasanathin moolam Firoun uyirodu ulladhaaga koorugiraargal. Indha vasanathai eppadi purindhu kolvadhu?

🌊 கேள்வி எண்: 170 🌊

فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ

92. உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

திருக்குர்ஆன்  10:92

இந்த குர்ஆன் வசனத்தின் மூலம் பிர்அவ்ன் உயிரோடு உள்ளதாக கூறுகிறார்கள்? இந்த வசனத்தை எப்படி புரிந்து கொள்வது?

🛳 பதில் 🛳

    ஃபிர் அவ்னின் உடல் பாதுகாக்கப்பட்டது பற்றி உலகெங்கும் பல்வேறு தரப்பினர் பல்வேறு வகையான கருத்துக்களை கொண்டுள்ளனர்.

    அதில் ஒரு பிரிவினர் எகிப்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள உடல் ஃபிர்அவ்னின் உடல் என்றும்,
“உன்னை உன் உடலுடன் பாதுகாக்கப்படும்”என்றுள்ளதால் அவன் உயிருடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்றும்,
பின்வரும் சந்ததியினருக்கு இது எடுத்துக்காட்டாக இருப்பதால் அது நம் சமுதாயம் என்றும்,
இல்லை அது ஃபிர்அவ்னின் சமுதாயம் என்றும்  இன்னும்பலவகையான மிகுந்த கருத்துவேறுபாடுகள் நிலவுகிறது.

இந்த வசனத்தை நாம்  கவனித்தால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

அதாவது ஃபிர் அவ்னுக்கு பின்னால் வரும் சமுதாயத்திற்கு உன் உடலுடன் பாதுகாப்போம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறியுள்ளான்.
உயிருடன் பாதுகாப்போம் என்று குறிப்பிடப்படவில்லை.

அதுவும் அவன் கடலில் மூழ்கி அழிக்கப்பட்டான் என்று அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிட்டுள்ளான். எனவே *அவன் இன்று உயிரோடு இருக்கிறான் என்ற கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை.*

அடுத்த விஷயமாக 1898ல் கண்டெடுக்கப்பட்ட உடல் ஃபிர் அவ்னுடையது என்னும் நம்பிக்கை உள்ளது. அது ஒரு பள்ளத்தாக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டு இரு ஃபிர்அவ்னாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது கணிப்புதானே தவிர 100% உறுதியானதில்லை. இது ஃபிர்அவ்னுடைய உடலாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்
ஏனெனில் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஒரு உடல் இப்படி காய்ந்த நிலையில் இருக்குமா? எனும் ஐயமும் ஏற்படுகிறது.
அதுவும் அந்த சமயத்தில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. அந்த நூற்றாண்டில் பல உடல்கள் கண்டுக்கப்பட்டது.
மற்ற உடல்கள் போல் உள்ளுறுப்புகள் அகற்றப்படாமல் இருந்ததாலும் இது 3000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள உடல் என்பதாலும் இது ஃபிர்அவ்ன் உடல் என்று கணித்துள்ளார்கள்.
ஆனால் மற்ற மதக்காரர்கள் இதில் பல சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

அல்லாஹ் பாதுகாத்த உடலில் இப்படியான சந்தேகங்கள் எழ வாய்ப்பில்லை என்பதால் *இது ஃபிர் அவ்னின் உடல் என உறுதியாக கூறமுடியவில்லை*

அப்படியே இருந்தாலும் இறைவன் கூறிய முன்னறிவிப்பு இது ஆகாது.

✒இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்
“இன்றைய தினம் உன் உடலை பாதுகாப்போம்” என அல்லாஹ் கூறியது அன்றுள்ள மக்களுக்காக.
ஏனெனில், அன்றைய மக்களில் பெரும்பாலோர் அவனை கடவுளாக கருதி வந்தனர். அவன் மற்றவர்கள் போல் மரணித்திருந்தால் மக்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் கடலில் மூழ்கடிக்கப்பட்டதால் அன்றைய மக்களுக்கு படிப்பினைக்காக அல்லாஹ் பாதுகாத்தான் என தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

இது “இன்றைய தினம்” படிப்பினை என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
இது அன்றுள்ள மக்களுக்குத்தான். ஏனெனில் இப்போதுள்ளது போல் ஒரு செய்தி உலகம் முழுதும் பரவும் தொலை தொடர்பு வசதிகள் அன்றில்லை. அவர்கள் நேரில் கண்ட விஷயங்கள் தான் மக்களிடையே பரவும். ஆகையால் அவர்க்ளுக்குத்தான் படிப்பினை மிகவும் தேவைப்பட்டது.

நமக்கு அடுத்தடுத்த நபிமார்களின் வருகை மிக அதிக படிப்பினை உள்ளது.
வெறும் காய்ந்துபோன
உடல் படிப்பினை என எடுத்துக்கொள்ள இயலாது.
அப்படி பிற்கால சந்ததிகளுக்கு படிப்பினை என வைத்துக்கொண்டாலும் இது 18ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது.அதற்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இந்த ஆதாரம் தேவையில்லையா? என ஐயம் ஏற்படுகிறது.

அல்லாஹ் ஒரு விஷயத்தை ஆதாரமாக்கினால் அது முழுமையானதாக இருக்கும்.
சந்தேகம் வராது.
அதுவுமின்றி இந்த உடல் கியாமத் நாள்வரை பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்படவில்லை.
குரானில் கூறப்பட்ட ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறிலேயே பல படிப்பினைகள் நமக்குள்ளது. இந்த உடலை வைத்துதான் ஈமான் உறுதியாக வேண்டும் என்றில்லை.

அல்லாஹ் நமக்களித்த பலப்பல ஆதாரங்கள் இறையச்சத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. சந்தேகத்திற்குரிய ஒன்றை எடுத்து அதில்தான் படிப்பினை பெற வேண்டும் என்ற நிலை நமக்கில்லை.
அவன் அழிக்கப்பட்ட வரலாறு தெள்ளத் தெளிவாக அல்குரானில் உள்ளது.
அவனுடைய அத்தாட்சிகள் பல நமக்குள்ளது.

எனவே, இறைவனின் மறைவான விஷயங்களில் இத்தனை ஆராய்ச்சிகள் தேவையில்லை என்பது நம் கருத்தாகும்

📖📚ஆதாரங்கள்:

📙

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ  ﴿2:50﴾
2:50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).

📙
كَدَأْبِ آلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا بِآيَاتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَاهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوا ظَالِمِينَ  ﴿8:54﴾
8:54. ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் – ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் – அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.

📙
فَحَشَرَ فَنَادَىٰ

23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.

திருக்குர்ஆன்  79:23

فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ

24. ”நானே உங்களின் மிகப் பெரிய இறைவன்’’ என்றான்.

திருக்குர்ஆன்  79:24

📙
فَأَرَادَ أَن يَسْتَفِزَّهُم مِّنَ الْأَرْضِ فَأَغْرَقْنَاهُ وَمَن مَّعَهُ جَمِيعًا

103. அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான். அவனையும், அவனுடன் இருந்த அனைவரையும் மூழ்கடித்தோம்.

திருக்குர்ஆன்  17:103

📙
فَلَمَّا آسَفُونَا انتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ

55. அவர்கள் நம்மைக் கோபப்படுத்திய போது அவர்களைத் தண்டித்தோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

திருக்குர்ஆன்  43:55

📙
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا ۖ حَتَّىٰ إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ

90. இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறினான்.
(திருக்குர்ஆன்  10:90)

📙
آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ

91. இப்போதுதானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய்.384
(திருக்குர்ஆன்  10:91)

📙
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ

92. உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று பாதுகாப்போம்.217 (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

திருக்குர்ஆன்  10:92

📙
فَأَرَادَ أَن يَسْتَفِزَّهُم مِّنَ الْأَرْضِ فَأَغْرَقْنَاهُ وَمَن مَّعَهُ جَمِيعًا

103. அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான். அவனையும், அவனுடன் இருந்த அனைவரையும் மூழ்கடித்தோம்.
(திருக்குர்ஆன்  17:103)

📙
فَلَمَّا آسَفُونَا انتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ

55. அவர்கள் நம்மைக் கோபப்படுத்திய போது அவர்களைத் தண்டித்தோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
(திருக்குர்ஆன்  43:55)

📙

وَقِيلَ مَنْ ۜ رَاقٍ

26, 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக்குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும்.26

திருக்குர்ஆன்  75:27

***********************************

மார்க்க கேள்வி பதில்கள்

💉Question no:151💉

Acupuncture or acupressure treatment nonbu notrirukum nerathil seidhukollalama

💉கேள்வி எண்:151💉

   அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் சிகிச்சையை நோன்பு நோற்றிருக்கும்போது செய்து கொள்ளலாமா?

♦பதில்♦

    ✒இதை பற்றி அக்குபஞ்சர் துறையில் முன்னணி டாக்டரான  டாக்டர்.சலீம் பதிலளித்துள்ளார்👇👇

அக்குபிரஷர், அக்குபஞ்சர் ஆகிய சிகிச்சை முறைகள் எல்லாம் மருந்தில்லா மருத்துவமாகும். எனவே,எந்த நோயாக இருந்தாலும் மருந்தை உட்கொள்ள தேவையில்லை.

ஆனால் அக்குபஞ்சர் எனும் சிகிச்சையில்  புள்ளிகளில் ஊசி குத்த வேண்டி இருக்கும். அவற்றில் சில புள்ளிகளில் குத்தும்போது பசியுடன் இருந்தால் சில சமயம் மயக்க நிலை அடைய கூடும். ஆனால் இது சிகிச்சையின் போது மட்டுமே,  சிகிச்சை முடிந்தவுடன் சகஜ நிலையை அடைந்து கொள்ளலாம்.

நோயாளிகள் நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்தால் நோன்பு நோற்றிருப்பதை கூறினால் அதற்கு தகுந்தாற்போல் உட்கார்ந்த நிலையில் அல்லாமல் படுத்த நிலையிலும், அதற்கு ஏற்றாற்போல் உள்ள ஊசியில் சிகிச்சை அளிப்பார்கள்.  எனவே,நோன்பின்போது இத்தகையான சிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால் நோன்பு முறியாது

ஆனாலும் இஸ்லாம் நோயாளிகளுக்கு பல சலுகை வழங்கியுள்ளது.
ஆனால் தாங்கி கொள்ளக்கூடிய நோய் இருக்கும்போது,நோன்பு வைக்க முடியும் எனும் சூழ்நிலையில்

*அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்ற சிகிச்சைகள் நோன்பு வைத்திருக்கும் நிலையிலேயே மேற்கொள்ளலாம்*

📚📖ஆதாரம்

📙
اَيَّامًا مَّعْدُوْدٰتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ  وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
(அல்குர்ஆன் : 2:184)

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌖Question no:152🌖

  Matra  nadugalil nonbu mundhaya naaley thudangivittathu namaku aduthanal than thudangukinrathu. Ipadi  irukaiyil lailathul kathir  nonbin  kadaisi 10 natkalil otrai piraigalil nigalum allava?  For example 27 kilamai angey  lailathul kathiraga irunthal namaku athu  26 kilamaiyaga thaney irukum ? But lailathul kathir  orumuraithane nigalum? I want clarification?

🌖கேள்வி எண்:152🌖

   மற்ற நாடுகளில் நோன்பு முந்தைய நாள் தொடங்கி விட்டது. இந்த நிலையில் லைலத்துல் கத்ர் இரவு மாறுபடும். லைலத்துல் கத்ர் இரவு என்பது இறுதி பத்தின் ஒற்றை படை. இதை எவ்வாறு கணக்கிடுவது. விளக்கவும்.

🌙பதில்🌙

முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளுக்கான காலத்தைத் தீர்மானிப்பதில் பிறை முக்கியமான பங்கு வகிக்கின்றது. இஸ்லாமிய மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறையையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளது.

இந்த அவசியத்தை முஸ்லிம் சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. ஆயினும் முதல் பிறையைத் தீர்மானிப்பதில் நபித்தோழர்கள் காலம் முதல் இன்று வரை கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக இந்த நவீன யுகத்தில் புதுப்புது வாதங்கள் எழுப்பப்படுவதால் அந்த வேறுபாடுகள் அதிகரித்து விட்டதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலிலும் எந்தக் குழப்பமும், முரண்பாடும் இல்லை; இருக்காது என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

யார் பிறையை காண்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.
எனவே,நம் ஊரில் பிறை காணும்போது நாம் நோன்பு ஆரம்பிக்க வேண்டும்.

பூமி சுழற்சியின் படி நாட்டிற்கு நாடு இது வேறுபடும்.

ஆனால் பிறை பற்றிய கருத்துக்கள் பல்வேறு சாராரிடம் பல்வேறு மாற்று கறுத்துக்கள் நிலவுகிறது.    இது இப்பொழுது மட்டுமல்ல பல அறிஞர்கள் பல ஆண்டுகளாக பல கருத்துக்களை பிறை பற்றி கூறிவருகின்றனர்.

அது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

*நமக்கு வரும் ஒற்றை படை இரவைத்தான் லைலத்துல் கத்ர் இரவாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்* இருப்பினும்
*இறுதி பத்தில் வரும் அனைத்து நாட்களிலும் இரவில் நின்று வணங்கி அல்லாஹ்வின் அருளை பெறுவோம்*இன்ஷா அல்லாஹ்.

📚📖ஆதாரங்கள்

📘அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக்களமாகவும்,சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

திருக்குர்ஆன் : 3:96

📘ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும்,சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

திருக்குர்ஆன் : 10:5

📘தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.

திருக்குர்ஆன் : 14:33

📘அவனே இரவையும், பகலையும்,சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.

திருக்குர்ஆன் : 21:33

📘சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.

திருக்குர்ஆன் :36:38, 39, 40

📘சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.

திருக்குர்ஆன் : 55:5

📘பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்”எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் : 2:189

📘வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.

திருக்குர்ஆன் : 9:36

📘இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.

திருக்குர்ஆன் :17:12

📘வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதிலே விளக்கையும்,ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.

திருக்குர்ஆன் : 25:61

📘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

📘பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1906

📘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1907

📘நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

📘உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்”என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்”என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம்

📘1984. அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் ”பத்னு நக்லா” எனுமிடத்தில் தங்கியிருந்தபோதுஇ பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர்இ ”அது மூன்றாவது பிறை” என்று கூறினர். வேறுசிலர்இ ”(அல்ல) அது இரண்டாவது பிறை” என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோதுஇ ”நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் ”அது மூன்றாவது பிறை” என்றனர். வேறுசிலர் ”அது இரண்டாவது பிறை” என்று கூறினர்” என்று சொன்னோம். அதற்கு  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்இ ”எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்குஇ ”இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்” என்று பதிலளித்தோம். அப்போதுஇ ”பார்ப்பதற்காகவே  பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச் செய்கிறான். ஆகவேஇ அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு

📘குறைப்:
“உம்முள் பல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருக்கும் முஆவியா அவர்களிடம் என்னை அனுப்பினார். நான் சிரியாவிலிருக்கும் போது ரமளானின் முதல் பிறை எனக்கு தென்ப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையை பார்த்தேன். பின்னர் அம்மாத இறுதியில் மதீனா வந்தேன்.
இப்னு அப்பாஸ் அவர்கள் பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தப்பேச்சை எடுத்தார்கள்.
இப்னு அப்பாஸ் :
“நீங்கள் எப்போது பிறையை பார்த்தீர்கள் ?.
குறைப்:
நாங்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தோம்.
இப்னு அப்பாஸ் :
நீயே பிறையை பார்த்தாயா?
குறைப் : .
ஆம், மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியாவும் நோன்பு பிடித்தார்கள்.
இப்னு அப்பாஸ்:
நாங்கள் சனிக்கிழமை தான் பிறை பார்த்தோம் , ஆகவே, மறு பிறை பார்க்கும் வரை, அல்லது முப்பதாக பூர்த்தி செய்யும் வரை நோன்பு வைதுக்கொண்டிருப்போம்.
குறைப் :
ஏன்?, முஆவியா அவர்கள் பார்த்ததும், நோன்பு வைத்ததும் உங்களுக்கு போதாதா?
இப்னு அப்பாஸ்:
“போதாது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : குறைப்
நூல் : முஸ்லிம்

📘சந்தேகத்திற்குரிய நாளில் (ஷாபான் 30 இல்) யார் நோன்பு வைக்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.
அறிவிப்பவர் : அம்மார் (ரலி)
நூல் : ஹாக்கிம்.

📘1963. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள். (மறு)பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால்இ அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு

***********************************

🌺Question no:153🌺

     Paal kudi Thai marhaluku nonbu awasiyam pidika venduma?
Appadi pidikatha batchathil enna seiya vendum

🌺கேள்வி எண்:153🌺

   பால் குடி தாய் மார்களுக்கு நோன்பு அவசியம் பிடிக்க வேண்டுமா? பிடிக்காத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

🍃பதில்🍃

     குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் நோன்பு பிடிப்பது அவரவர்களின் உடல் நிலையை பொறுத்தது.

கர்ப்பிணிகள் நோன்பு வைப்பதால் தன் கற்பத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றோ, பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் வற்றிவிடும் என்றோ அஞ்சினால் நோன்பு பிடிக்க தேவையில்லை.

அல்லாஹ் அதில் சலுகை வழங்கியுள்ளான்.
ஆனால் உடல் நலம் நன்றாக இருக்கும்பட்சத்தில் நோன்பு நோற்பதே சிறந்தது.

நோன்பின் பலனை அறிந்தால் நோன்பு நோற்பதுதான் நல்லது என நாம் உணர்வோம் என அல்லாஹ் தன் திருமறையில் கூறியுள்ளான்.

ஆனாலும் நம் மார்க்கம்,  எளிமையான மார்க்கம். எந்த ஒரு ஆத்மாவையும் அது தன் சக்திக்கு மீறி நிர்பந்திக்காது.

எனவே, *பால் குடி தாய்மார்களுக்கு நோன்பு என்பதை உடல்நிலையை பொறுத்தது தவிர கட்டாயம் கிடையாது*

*நோன்பு பிடிக்காத பட்சத்தில் விடுபட்ட நோன்பை பின்வரும் நாட்களில் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு வேளை அதுவும் முடியாமல் பலவீனமாக இருந்தாலோ அல்லது அதற்குள் அடுத்த குழந்தை உருவாகி விட்டது எனும் சூழலில் ஏழைக்கு நாம் சாப்பிடுவது போன்ற நல்ல உணவை அளிக்க வேண்டும்.*

📚📖ஆதாரங்கள்

📙’கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகையளித்தனர்”
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூற்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

📙
اَيَّامًا مَّعْدُوْدٰتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ  وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
(அல்குர்ஆன் : 2:184)

📙 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பயணத்தில் உள்ளவருக்கு நோன்பையும் தொழுகையில் பாதியையும் இறைவன் தளர்த்தியுள்ளான். மேலும் பாலூட்டும் பெண்ணுக்கும் கர்ப்பிணிக்கும் (நோன்பு நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான்.)
நூல் : நஸாயீ (2276)

************************************

🕌Question no:154🕌

   Perunal tholugai pengalukku kadamayillai ena. .oru book la irundhathu? …Adhu unmaya. .?Irundhaal aadharam?

🕌கேள்வி எண்:154🕌

    பெருநாள் தொழுகை பெண்களுக்கு கடமை இல்லை என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.. இது உண்மையா?இருந்தால் ஆதாரம் தரவும்.

◽பதில்◽

      தொழுகைகளில் நமக்குக் கடமையாக்கப் பட்டது ஐவேளை தொழுகைதான். மற்றுமுள்ள ஏனைய தொழுகைகள் அனைத்தும் சுன்னத்தானவையே.

  ஆண்களுக்கும் சரி,பெண்களுக்கும் சரி பெருநாள் தொழுகை என்பது கடமை கிடையாது எனினும் நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப் பட்ட கட்டாய தொழுகையாகும்.

கடமையான சில வணக்க வழிபாடுகளை தவிர,சில சுன்னத்தான வணக்க வழிபாடுகளை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உதாரணமாக இரவுத்தொழுகை, வித்ருத் தொழுகை, நோன்பில் ரமலான் மாத கடமையான நோன்பை தவிர அரஃபா நோன்பு,அஷூரா நோன்பு ஆகிய சுன்னத்தான நோன்புகளை வலியுறுத்தி உள்ளார்கள்.

அதுபோல் தான் பெருநாள் தொழுகை சுன்னத்தான தொழுகையெனினும் பருவமடைந்த ஆண்களுக்கும், *பெண்களுக்கும்* இந்த தொழுகையை தொழுவதற்கு மிக மிக வலியுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற கூட்டுத்தொழுகைகளில் பெண்கள் பங்கெடுக்க முடியாத சூழலில் வீட்டில் தொழ சலுகையளித்துள்ள இஸ்லாம் கண்டிப்பாக இந்த தொழுகையை தொழுவதற்காகத்தான் மாதவிடாய் பெண்களும் கட்டாயம் திடலுக்கு வர வலியுறுத்தியுள்ளது.

பெண்களுக்கு ஆடையில்லை இல்லையெனும் பட்சத்தில் இரவல் பெற்றாவது வர நபி(ஸல்) கூறியுள்ளார்கள். சில பள்ளிகளில் பெண்கள் தொழுவதற்கான வசதி இல்லாத காரணத்தினாலும், குளிப்பு கடமையான பெண்கள் பள்ளிக்கு வர இயலாது எனும் காரணத்தினால் தான் திடலில் தொழுகை நடத்த நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என அறிந்து கொள்ளலாம்.

*எனவே, பருவமடந்த ஆண்களுக்கும்  பெண்களுக்கும் சரி  இது நபி(ஸல்) காட்டிதந்த வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான  அமல்களில் மிகச்சிறந்த ஒன்று*

✒இது பெண்களுக்கு கட்டாயமல்ல என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.

நபி(ஸல்) காட்டித்தந்த வழியை பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.

📚📖ஆதாரங்கள்

📕நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். இதனை செவியுற்ற நபி நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்க அபூதாவூத், பைஹகீ, நஸயீ என்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

📕351. இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும்இ அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும்இ தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்” என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் ”இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?” எனக் கேட்டதற்குஇ ”அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்” என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

📕ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி)அவர்கள் மீது சாய்ந்து கொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, ”தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ”அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி)  அவர்களின் ஆடையில் போட்டனர்.
ஸஹீஹ் முஸ்லிம்
1607:
அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை

***********************************

🌷Question no:155🌷

    Indhukkalaga irundhu islaathai thazhuviyavargal than petrorgal indhukkalaga irukkum  batchathil  avargal illathil thozhugai,nonbu pondravatrai merkollalaama?

🌷கேள்வி எண்:155🌷

கேள்வி எண் 155 :  இந்துக்களாக இருந்து இஸ்லாத்தை தலுவியவர்கள் தனது பெற்றோர்கள் இந்துக்களாக இருக்கும் பட்ச்சத்தில் அவர்கள் இல்லத்தில் தொழுகை நோம்பு போன்றவற்றை மேற்க்கொள்ளளாமா? இதற்க்கு இஸ்லாம் என்ன கூறுகிறது?

🌿பதில்🌿

     அல்லாஹ் பூமி முழுவதும் தொழும் இடமாக ஆக்கியுள்ளான். விதிவிலக்காக சில இடங்களை தொழுவதற்கு தடை செய்துள்ளான். உதாரணத்திற்கு மாட்டுத்தொழுவம்,அடக்கஸ்தலம்,அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் இடங்கள்,கழிவறை போன்றவை.

  பெற்றோர்கள் இந்துக்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வீடுகளில் நாம் தொழுவதற்கு எந்த தடையும் கிடையாது. ஆனால் அந்த இடத்தில் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் விஷயங்கள் ஏதும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம் உள்ளத்தை நன்கறிபவன். எனவே, *இது போலுள்ள சூழ்நிலையில் நாம் தொழுவது, நோன்பு வைப்பதில் எந்த தவறும் கிடையாது* ஆனால் அங்கு சிலைகள் இல்லாமலும்,சுத்தமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் இஸ்லாத்தை மறுஅறிமுகம் செய்த போது அனைவரும் காஃபிராகத்தான் இருந்தார்கள். சிறிது சிறிதாக இஸ்லாத்தை மக்கள் ஏற்க தொடங்கிய போது ஒரு குடும்பத்தில் ஒருவர் அதை ஏற்றிருப்பார். இன்னொருவர் ஏற்காத சூழல் பல காணப்பட்டது. ஆனாலும் இதை நபி(ஸல்) அவர்கள் அவரவர் வீட்டில் செய்யும் நல்லமல்களை தடுக்கவில்லை. மாறாக வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்வழியை எத்தி வைக்கும்படி கூறினார்.

எனவே, நீங்களும் உங்களால் இயன்ற வரை அவர்களுக்கு இஸ்லாத்தின் போதனையை எடுத்துரையுங்கள். இன்ஷா அல்லாஹ்,

📚📖ஆதாரங்கள்

📓நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!” (அஹ்மத்)

📓நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர”. (இப்னு ஹிப்பான்)

***********************************

🎤🎤🎤🎤

💤 சிந்தியுங்கள்!!
செயல்படுங்கள் 🏃 ..

இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு ✉ எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!!!

முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு திருக்குர்ஆன் 📓 தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும்..

தொடர்புக்கு
+919047401353 📞
+919791235785 (whats app)
__________________________________

🌸Question no:156🌸

Muslim peoples Hindu or Christian other religions people marriage cheyyalama?

🌸கேள்வி எண்:156🌸

    முஸ்லிம்கள் இந்து, கிறிஸ்தவர் அல்லது வேறு மதத்தவரை திருமணம் செய்யலாமா?

🍂பதில்🍂

     இஸ்லாம் என்பது இறைவன் ஒருவனே என்ற உறுதியான கொள்கை உடையது.

இறைவன் தன் திருமறையில் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ஓரிறைக் கொள்கையை ஏற்கும் வரை திருமணம் செய்ய கூடாது என மிகத்தெளிவாகக் கூறியுள்ளான்.

இதில் இந்து,கிறித்தவர் என மதங்களை குறிப்பிடவில்லை. எந்த கொள்கையை உடையவராக இருந்தாலும் (அல்லாஹ்வை) ஏக இறைவனை ஏற்கும் வரை அவர்களை மணமுடிக்க எந்த ஒரு முஸ்லுமுக்கும் அனுமதி கிடையாது.

இதில் சிலர் மத நல்லிணக்கம் ஏற்படும் என வாதிடுகின்றனர். இது கொள்கை ரீதுயாகவும்,நடை முறையிலும் முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. மாறாக இப்படியான திருமணங்கள் சமுதாயத்தை சீர்குலைப்பதாக மட்டும்தான் இருக்கும். உலகில்
இப்படியான திருமணங்களில் சந்தோஷத்தை காட்டிலும் வாழ்க்கை முழுதும் அல்லல்படும் நிகழ்வுகளைத்தான் காண்கிறோம். இப்படி செய்யும்போது நாம் இஸ்லாம் எனும் அடிப்படை கொள்கையிலிருந்து மாறுபடுகிறோம். அடுத்த தலைமுறயினர் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாம் இஸ்லாமிய கொள்கையிலிருந்து மாறுபடுவதால் மறுமையிலும் மிகப்பெரிய தண்டணைக்கு ஆளாக்கப்படுவோம்.

எந்த சூழ்நிலையை காரணம் காட்டினாலும்  *வேறு மதத்தினரை திருமணம் செய்ய  ஒருபோதும் இஸ்லாம் அனும்திக்காது*

📚📖ஆதாரம்:

📘அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை – நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.  இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.  அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்.  (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.  ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

••••••••••••••••••••••••••••••••••••••••••••••

📖Question no:157📖

Quran odhuvadharkku group vaithu Alhamdhulillah anuppugirom. Solar idhu groupirkaaga Quran odhuvadhu pol ulladhu endru koorugiraargal. Naam eppadiyum Quran odha ninaikirom. Groupil odhuvadhu manidhargalukku seiyvadhu pol ulladhu enru kooruvadhu sariyaa? thavaraa? Vilakkam tharavum.

📖 கேள்வி எண் : 157 📖

குர்ஆன் ஓதுவதற்க்கு குரூப் வைத்து தினமும் ஓதி விட்டு அல்ஹம்துலில்லாஹ் அனுப்புகிறோம். சிலர் இது குரூப்பிற்க்காக குர்ஆன் ஓதுவது போல் உள்ளது என்று கூறுகிறார்கள். நாம் எப்படியும் குர்ஆன் ஓதவேண்டும் என நினைக்கிறோம். குரூப்பில் ஓதுவது மனிதர்களுக்கு செய்வது போல் உள்ளது என்று சிலர் கூறுகிறார்கள் இது தவறா ? விளக்கம் தரவும்.

📖பதில்📖

   நிச்சயமாக குரான் ஓதுவது, தொழுவது,தர்மம் செய்வது இன்ன பிற நல்லமல்கள் செய்வது அனைத்துமே அல்லாஹ்விற்காக மட்டும்தான்.

இது போன்று குரூப்கள் நடத்தி நாம் மற்றவர்களை ஓதச்செய்வது மற்றவர்களை ஆர்வமூட்டவே தவிர அவர்களுக்காக கிடையாது.

நாம் தனியே இது ஓதும்போது நமக்கு சில சமயங்களில் சோம்பலின் காரணமாக பின்னர் ஓதிக்கொள்ளலாம் என நினைக்கலாம் அல்லது ஓதும் சமங்களில் மற்ற பணிகள் நினைவுக்கு வந்து பின்னர் ஓதலாம் என தள்ளி வைக்கலாம்.
இது போன்ற சமயங்களில் மற்றவர்கள் முடித்து விட்டார்கள் எனும்போது நாமும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருவதற்கே இது போன்ற குழுமங்கள் ஆரம்பிக்கப்படுகிறது

உதாரணத்திற்கு நாம் பரீட்சைக்கு படிக்கிறோம். அப்பொழுது நாம் தனியாக படித்தால் சாதாரணமாக படிப்போம். ஆனால் நம் வகுப்பில் சிலர் படித்து முடித்தார்கள் எனில் நமக்கு ஆர்வம் அதிகரித்து வேகமாக படித்து விடுவோம். இதன் மதிப்பெண்கள் யார் மூலமாக வந்தாலும் மதிப்பெண் கிடைக்கபோவது நமக்குத்தான்.

அதேபோல்தான் நாம் குரான் ஓத ஆர்வமூட்ட இது போன்ற குரூப்கள் நடத்தினாலும்  அல்லாஹ்விடத்தில் நமக்குத்தான் நன்மை கிடைக்கும்.

அல்லாஹ் தன் திருமறையில் யாரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதற்குறிய நன்மை அவர்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளான்.

  குழுமம் நடத்துபவர்கள் அல்ஹம்துலில்லாஹ் சொல்ல சொல்வது அதை முடித்துவிட்டார்களா? என அறிவதற்காக அல்லது ஆர்வமூட்டுவதற்காக பரிசுகள் அளிக்கவும் தான்.
மற்றவர்களுக்கு காட்டுவதற்காக அல்ல.

அது மட்டுமின்றி என்ன நாட்டத்தில் நாம் ஓதுகிறோமோ? அதன் பலன் நமக்கு கிடைக்கும்.
மற்றவர்களின் பாராட்டிற்காக ஓதுகிறோமா? அல்லாஹ்வின் நன்மையை பெற ஓதுகிறோமா? என நம் உள்ளத்திற்குத்தான் தெரியும்.

ஆனால் இது போல குழுமம் நடத்துபவர்கள் இதை ஓதினால் சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல கூடாது. இது தவறான அணுகுமுறைதாகும். ஆனால் அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் நன்மை கிடைக்க பிரார்த்திக்கலாம்.

எனவே, *இது போன்ற விஷயங்களில் நாம் பங்கெடுப்பது அல்லாஹ்விற்காக தவிர மனிதரளுக்காக அல்ல*

📚📖ஆதாரம்:

📕
مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا  ﴿4:85﴾
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
……………………………………………………

🏡Question no:158🏡

   Vaadagai veetil iruppavargal veettai kaali seyyumbodhu vellaiyadithu kodukka vendum alladhu adharkuriya thogai kodukka venduma?
Idhu sariyaa?thavaraa?
Sari endraal muzhu thogaiyaa? Paadhi thogaiyaa?

🏡கேள்வி எண்:158🏡

வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டை காலி செய்யும் போது  வெள்ளையடித்து கொடுக்கவேண்டும் அல்லது அதற்குரிய தொகை கொடுக்க வேண்டும் என்பது சரியா? தவறா?
சரி என்றால்
முழுதொகையா? அல்லது பாதி தொகையா?
விளக்கம் வேண்டும்.

🏠பதில்🏠

ஒரு வாடகைதாரர் அந்த வீட்டிற்கு குடிபோவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் வாடகை ஒப்பந்த பத்திரம்.

இதில் பெரும்பாலான முரண்பாடுகள் தீர்க்கப் படும். அதாவது வாடகை, பராமரிப்புத் தொகை, மின்கட்டணம், *வெள்ளையடித்தல்*,முன் தொகை ஆகியவை பற்றி தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும்.

இப்படி குறிப்பிடாத பட்சத்தில் இருவருக்கும் ஒத்து வராத நிலையில் பல முரண்பாடுகள் ஏற்படக்கூடும்.

நாம் வாடகை வீட்டில் குடியேறும்போது அந்த வீட்டில் வெள்ளையடித்து கொடுத்திருந்தால், நாம் சில வருடங்கள் குடியிருந்து அது அசுத்தம் செய்திருந்தால் நாம் வெள்ளையடித்து கொடுக்கவோ, அதற்குரிய தொகை கொடுத்தலோ வேண்டும். அப்படி அசுத்தம் ஏதும் ஏற்படவில்லை, சில மாதங்கள் மட்டுமே இருந்தோம் எனில் கொடுக்க தேவையில்லை.

இது இந்திய வாடகை சட்டத்தை காட்டிலும் தனி நபரை பொறுத்தே அமைகிறது.

*இது முற்றிலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். ஏற்கனவே நாம் ஒப்பந்தில் கொடுக்க வேண்டியதை பதிந்திருந்தால் நாம் அதற்குரிய தொகையை கொடுத்தால் போதுமானது. அவ்வாறு ஒப்பந்தம் ஏதும் இல்லையெனில் நாம் குடியேறிய வருடங்களை கணக்கிட்டு நாம் ஏற்படித்திய சேதத்தின் அடிப்படையில் நாம் முழுதும் கொடுக்க வேண்டுமா? அல்லது பாதி கொடுக்க வேண்டுமா? என்பதை சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டும்.*

தற்போது நடைமுறையில் வாடகை வீட்டை காலி செய்பவர்கள், வெள்ளையடித்து கொடுப்பது மற்றும் அதற்குரிய பணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் அவர்கள் அநியாயமான முறையில் நடந்தாலோ, ஒப்பந்தத்திற்கு மாற்றமாக நடந்தாலோ பாதிக்கப்பட்ட நாம் நீதிமன்றத்தில் சிறுவழக்கு தொடுக்க சட்டத்தில் அனுமதி உள்ளது.

மார்க்கத்தின் அடிப்படையில் இதை நோக்கினாலும் ஒருவர் செய்யும் அநியாயத்திற்கு அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் குற்றம்பிடிக்க படுவார். அது வீட்டின் சொந்தக்காரர்களாக இருந்தாலும் சரி, வாடகைதாரர்களாக இருந்தாலும் சரி.
எனவே, யாராக இருந்தாலும் அநியாயம் செய்வதிலிருந்து தவிர்ந்து அல்லாஹ்வின் உதவியை பெறுவோம். இன்ஷா அல்லாஹ்

===========================

🌺🌺🌺கேள்வி எண் 159🌺🌺🌺

வேதக்காரர்கள் உணவு பற்றி!

💤💤
💤💤

📕137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு

இவ்வசனத்தில் (5:5) குறிப்பிடப்பட்டுள்ள வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு என்பது அறுத்து உண்ணப்படும் பிராணிகளைக் குறிக்காது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். 

அறுத்து உண்ணப்படாத உணவுகளைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப்படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவை தாம். அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம். 

வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட்டுள்ளனர். அவர்களைக் கொல்வதற்காக ஆட்டிறைச்சியில் விஷம் வைத்துக் கொடுத்தனர் என்று ஏற்கத்தக்க ஹதீஸ்கள் உள்ளன (நூல்: புகாரி 2617) 

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்ணுங்கள் என்பதிலிருந்து யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் அறுத்தவை விதிவிலக்குப் பெறுகின்றன என்பதே சரியானதாகும். 

மேலும் இது மாற்றப்பட்டு விட்டது என்றும் கருத முடியாது. ஏனெனில் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிக் கட்டத்தில் இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். (நூல்: நஸஈ 2434) 

எனவே நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களை வேதக்காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக் கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர். 

இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது. 

பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர் களுக்காகவே வழங்கப்பட்டன. 

(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6) 

இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. 

(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6) 

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர் களுக்காகக் கொடுக்கப்படவில்லை. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனை வருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ணலாகாது. 

அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 27, 138 ஆகிய குறிப்புகளைக் காண்க! 

📕138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது

இவ்வசனம் (திருக்குர்ஆன் 5:5) வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எல்லா யூத, கிறித்தவப் பெண்களையும் அவர்கள் யூத கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்ய இவ்வசனம் அனுமதிப்பதாகப் பலரும் கருதுகின்றனர். இது தவறாகும். 

ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார் களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோரில் சேர மாட்டார்கள். 

இஸ்ரவேல் சமுதாயப் பெண்களை மணக்கலாம் என்பதே இதன் பொருளாகும். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவப் பெண்களை மணக்க அனுமதி இல்லை. 

அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 27, 137 ஆகிய குறிப்புகளைக் காண்க! 

📕27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்?

“வேதம் கொடுக்கப்பட்டோர்” என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையும் மட்டுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது. 

அனைத்து யூதர்களும், கிறித்தவர்களும் வேதக்காரர்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இது தவறாகும். ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட ஏனைய நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர் களுக்காகவே வழங்கப்பட்டன. 

(பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17, 32:23, 40:53, 43:59, 61:6) 

இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6) 

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் கிறித்தவர்களாக மாறியிருந்தாலும் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர் களாக முடியாது. ஏனெனில் இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் மட்டுமே அனுப்பப்பட்டார்கள். 

“மூஸா நபியவர்கள், இஸ்ரவேலர்களுக்கு மட்டும் அனுப்பபப்படவில்லை; மாறாக, இஸ்ரவேல் அல்லாத ஃபிர்அவ்ன் கூட்டத்தினருக்கும் அனுப்பப்பட்டார்கள். எனவே மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் உரியது அல்ல; வேதம் கொடுக்கப்பட்டோர் என்பது இஸ்ரவேலர்களை மட்டும் குறிக்காது” என்று சிலர் வாதிடுகின்றனர். 

இந்த அடிப்படையில் இன்றைய கிறித்தவர்களும் யூதர்களும் இஸ்ரவேலர்களாக இல்லாவிட்டாலும் அவர்களின் பெண்களை முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம் என்றும் கூறுகின்றனர். 

மூஸா நபியவர்கள் ஆரம்பத்தில் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமின்றி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது உண்மையே! 

ஆனால் ஃபிர்அவ்னும், அவனது கூட்டத்தினரும் அழிக்கப்படும் வரை மூஸா நபியவர்களுக்கு தவ்ராத் வேதம் அருளப்படவில்லை. ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட பின்பே தவ்ராத் வேதத்தை அல்லாஹ் அருளினான். அவ்வாறு அருளும் போது, தவ்ராத் இஸ்ரவேலர்களுக்கு உரியது என்று கூறியே அருளினான். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 

மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுடன் கொடுத்து அனுப்பவில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான். 

மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. 

அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை. 

இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர். 

அப்போதும் வேதம் அருளப்படவில்லை. 

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கனமழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை. 

பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான். 

அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை. 

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான். 

ஏழாவது அத்தியாயம் 103 முதல் 150 வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம். 

103வது வசனம் முதல் 141வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்ன் அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை அவருக்கு வேதம் வழங்கப்பட்டதை அல்லாஹ் கூறுகின்றான். 

எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர். 

மூஸா நபிக்கு தவ்ராத் வழங்கப் படுவதற்கு முன் அவர்கள் இஸ்ரவேலருக்காகவும், இஸ்ரவேலர் அல்லாத ஃபிர்அவ்ன் சமுதாயத்துக்காகவும் தூதராக அனுப்பப்பட்டாலும் ஃபிர் அவன் அழிக்கப்பட்டு தவ்ராத் வழங்கப்பட்ட போது அது இஸ்ரவேலர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பதைப் பல்வேறு வசனங்களில் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. 

இதே போன்று ஈஸா நபிக்கு அருளப்பட்ட இஞ்சீல் வேதமும் இஸ்ரவேலர்களுக்காகவே அருளப்பட்டது என்பதையும் திருக்குர்ஆன் கூறுகின்றது. 

(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6) 

இஸ்ரவேல் அல்லாத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. 

எனவே “வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம்” என்ற சட்டம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்ரவேலர்கள் அல்லாத யூத, கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற பட்டியலில் இடம் பெற மாட்டார்கள். 

(மேலும் விபரங்களுக்கு இதே பகுதியில் 137, 138 ஆகிய குறிப்புகளைக் காண்க). 

✒மேற்கூறிய விளக்கத்தில் இருந்து ஒருபோதும் ஓரிறை கொள்கையை உடையவர்களை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய இயலாது என அறிந்து கொள்ளலாம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

👩🏻 Question no: 160👩🏻

   Pengal veetil iqthikab iruppadhan ozungu enna?

👩🏻 கேள்வி எண்: 160👩🏻

   பெண்கள் வீட்டில் இஃதிகாப் இருப்பதன் ஒழுங்கு என்ன??

🏡பதில்🏡

     இஃதிகாஃ.ப் என்ற சொல்லுக்குதங்குதல் என்று பொருள்.

பள்ளிவாசலில் தங்கி வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதையேஇஃதிகாஃப் என்று குா்ஆனும்,ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன.

நபியவர்களும் அவர்களைப்பின்பற்றி ஸஹாபாக்களும்பள்ளிவாசலில் மட்டுமே இஃதிகாப்இருந்துள்ளார்கள். வீடுகளில்இஃதிகாப் இருக்கும் வழிமுறையைநபியவர்கள் கற்றுத்தரவில்லை.

பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்நபியவர்களுடன் பேசுவதற்காகநபியின் மனைவி வீட்டிலிருந்துவருவார்கள். இறுதியில் தமதுமனைவியை பள்ளியின் வாசல்வரை வந்து விட்டுச் செல்வார்கள்என்று ஹதீஸ்களில் உள்ளது.

இஃதிகாஃப், பள்ளியில் தான்இருக்க வேண்டும் என்பதினால்தான் அவசியத் தேவையைத் தவிரவேறு எதற்காகவும் பள்ளியைவிட்டு வெளியில் வரக்கூடாதுஎன்ற ஒழுங்கை நபியவர்கள்கற்றுத் தந்துள்ளார்கள்.

ஏராளமானசெய்திகள் பள்ளியில் தான்இஃதிகாப் இருக்க வேண்டும்என்பதைத் தெளிவாகஉணர்த்துகின்றன.

மேலும் இஃதிகாபின் போதுவீணான பேச்சுகளும்செயல்களும்  மனைவியுடன்கூடுதலும் தடுக்கப்பட்டுள்ளது. முழுக்க வணக்க வழிபாடுகளில்ஈடுபட வேண்டும். இவை தான்இஃதிகாபின் நோக்கமாகும்.

வீட்டில் இஃதிகாப் இருக்கும் போதுஇவை சாத்தியமில்லைஎன்பதாலும் வீடுகளில் இஃதிகாப்என்பது கிடையாது.

ஒரு சிலர் குறிப்பாக  *பெண்கள்மார்க்கத்தை அறியாமல் வீடுகளில்இஃதிகாப் இருக்கிறார்கள். இதுமார்க்கத்தில் இல்லாததும்நபியவர்கள் கற்றுத் தராததுமாகும்*

ஆனால் *தூய்மையான நிலையிலும்,பெண்கள் தங்குவதற்கான அமைப்பிலுள்ள பள்ளிகளிலும் இஃதிகாப் இருக்கலாம்* அதற்கு எந்த தடையும் இல்லை.

📚📖ஆதாரங்கள்

📕பள்ளிவாசல்களில் இஃதிகாஃப்இருக்கும் போது மனைவியருடன்கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின்வரம்புகள். எனவே அதைநெருங்காதீர்கள்! (தன்னை)அஞ்சுவதற்காக அல்லாஹ் தனதுவசனங்களை மக்களுக்குஇவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன் 2:187)

📕ஸபிய்யா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமலானில்கடைசி பத்து நாட்களில் பள்ளியில்இஃதிகாப் இருக்கும்போதுஅவர்களிடம் நான் செல்வேன்.சற்று நேரம் அவர்களுடன்பேசிவிட்டு எழுவேன். அப்போதுநபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்என்னுடன் எழுந்து பள்ளியின்வாசல் வரை வருவார்கள்.

(ஹதீஸின் சுருக்கம். புகாரி2035)

📕ஆயிஷா ரலி கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்பள்ளியில் இஃதிகாப்இருக்கும்போது தமது தலையைவீட்டிலிருக்கும் என் பக்கம்நீட்டுவார்கள் அதை நான்வாரிவிடுவேன். தேவைப்பட்டால்தவிர இஃதிகாப் இருக்கும் போதுவீட்டிற்குள் வர மாட்டார்கள்.

நூல்: புகாரி 2029

📕2033. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டுஇ ”இவை என்ன?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள்இ ”இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டுவிட்டுஇ அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 33. இஃதிகாஃப்

📕நோயாளியை விசாரிக்கச் செல்லாமலும் ஜனாஸாவில் கலந்து கொள்ளாமலும் மனைவியை தொடாமலும் அவளிடத்தில் இல்லறத்தில் ஈடுபடாமலும் அவசிய தேவைக்காக தவிர மற்றவைகளுக்கு வெளியே வராமல் இருப்பது இஃதிகாப் இருப்பவர் மீது  சுன்னத்தாகும் இன்னும் நோன்பு இல்லாமல் இஃதிகாப் இல்லை தொழுகைக்காக மக்கள் கூடுகின்ற (பெரிய) பள்ளியைத் தவிர மற்ற பள்ளியில் இஃதிகாப் இல்லை என்று 
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

(நூல் அபூதாவூத் 2115)

**********************************

மார்க்க கேள்வி பதில்கள்

👁Question no:141👁

Udal urupuhal thaanam alika islathil idam unda?

👁கேள்வி எண்:141👁

உடல் உறுப்பு தானம் அளிக்க இஸ்லாத்தில் இடமுண்டா?

❤பதில்❤

அல்லாஹ்தான் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். அவன் கொடுத்த ஒவ்வொன்றும் அமானிதம். இதில் சிந்திப்பவர்களுக்கு பலப்பல அத்தாட்சிகள் வைத்துள்ளான். அவன் படைத்த ஒவ்வொன்றும் வீணுக்காக படைக்கவில்லை.

இதுபோன்ற விஷயங்களிலிருந்து உறுப்புகளும் வீணாக படைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்கு குறிப்பிட்ட தவணை இருப்பதால்தான் அதன் தவணை முடியும் காலம் இறந்த பின்பும் நீட்டிக்கப்படுகிறது.

எவர் மற்ற ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ்வைத்தவர் ஆவார். இஸ்லாம் அடுத்தவர் மீது இரக்கம் காட்ட சொல்லும் மார்க்கம் ஆகும். இத்தகைய ஆதாரங்களிலிருந்து நாம் உறுப்பு தானம் செய்வதை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் உயிரோடு இருப்பவர்கள் உறுப்புகளை தானம் செய்வதற்காக தன்னை அழித்து கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. அவரது உயிருக்கு ஊறு விளையுமானால் அதனை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் உதவ நாடுவோர் வரம்பு மீறி தன்னை அழித்து உதவ இஸ்லாம் கூறவில்லை.

இருப்பினும் ஒரு உறுப்பை தானம் செய்வதன் மூலம் அவருக்கு ஊனம் ஏற்படாமல் இருவரும் உயிரோடு இருப்பார் எனில் உறுப்பு தானம் தவறில்லை. ஆனால் இவர் தானம் செய்தால் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு வரும் என சந்தேகம் இருக்கும் நிலையில் அவ்வாறு செய்யக் கூடாது.

ஆனால் அல்லாஹ் அளித்த அமானிதத்தை பணத்திற்காகவோ,மருத்துவ கல்விக்காகவோ விலை பேசுவதற்கு நமக்கு உரிமை கிடையாது.

நபி(ஸல்) அவர்கள் மரணித்தவரின் உடல் எலும்பை முறிப்பது உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போலாகும் என்று கூறியுள்ளார். எனவே உடலை சிதைக்காமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மனிதாபிமான அடிப்படையில் கொடுப்பது இஸ்லாத்தில் கூடும்.

ஒரு சிலர் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் ஊனமாக எழுப்பப்படுவோம் என்று வாதிடுகிறார்கள். ஆனால் கண் இல்லாதவர்கள் குருடர்களாக எழுப்பப்பட மாட்டார்கள் மாறாக அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவர்கள் குருடர்களாக,செவிடர்களாக எழுப்பப்படுவர்.

இன்னும் சிலர் உடல் அல்லாஹ்விற்கு சொந்தமான ஒன்று அதனால் தானம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் உடல்,பொருள், உயிர் அனைத்தும் அவனுக்கு சொந்தமானது. செல்வத்தை தேவையுடோருக்கு கொடுப்பதை அல்லாஹ் வலியுறுத்தும் அடிப்படையில் இருந்து உறுப்பும் தேவையுடையவருக்கு கொடுக்கலாம். அதன் தவணை முடிந்தவுடன் அதுவும் மண்ணில் தான் சேரும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும்.

கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.

சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.

அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.  ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல.  உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. 

மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன.  கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாக்க் காணும் நிலை ஏற்படும்.

மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.

எனவே, நாம் உயிருடன் இருக்கும்போதும்,இறந்த பின்பும் ஒரு உயிரை வாழவைக்கும் நோக்கில் உறுப்பு தானம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

📚📖ஆதாரங்கள்

📗….. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.(அல் குரான்/ 5:17)

📗

أَلَا إِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ قَدْ يَعْلَمُ مَا أَنتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ  ﴿24:64﴾
24:64. வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் – மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.

📗2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;

📗
أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً ۗ وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُّنِيرٍ  ﴿31:20﴾
31:20. நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.

📗(5:2)….இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்…

📗
وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ۚ ذَٰلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا ۚ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ  ﴿38:27﴾
38:27. மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.

📗
أَوَلَمْ يَتَفَكَّرُوا فِي أَنفُسِهِم ۗ مَّا خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى ۗ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ لَكَافِرُونَ  ﴿30:8﴾
30:8. அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.

📗
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ  ﴿67:2﴾
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

📗
وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ  ﴿2:195﴾
2:195. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

📗17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்…

📗
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ 
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 20:124)

📗மேலும் மறுமையில் நாம் எழுப்பப்படும் போது அனைத்து ஆண்களும் சுன்னத் செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவோம் – புகாரி 3349, 3447, 4635, 4740, 6524

சுன்னத் மூலம்  அப்புறப்படுத்திய பகுதிகளையும் சேர்த்து இறைவன் எழுப்புவான் என்பது எதை உணர்த்துகிறது!!

📗
يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ   فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ 
அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 3:106)

📗உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு,உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயத்தின்பால் சென்றுவிடு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

📗9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற அடிப்படையில் விலைக்கு வாங்கி கொண்டான்…..

📗பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுவோருக்கு வானில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)

நூற்கள்: புகாரி,அஹமது

📗3467. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போதுஇ பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனேஇ அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

*************************************

🍼Question no: 142🍼

Pen Kuzhandhaigalukkaana thaipall kodukkum wayadh enna?

🍼 கேள்வி எண்:142🍼

*பெண் குழந்தைகளுக்கு தாய்ப்பால் எத்தனை வயது வரை கொடுக்கலாம்?*

⚪பதில்⚪

    பால்குடி சட்டத்தை பொறுத்தவரை இஸ்லாத்தில் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகளுக்கு என்று தனித் தனி சட்டம் கிடையாது.

குழந்த்தைகளுக்கு முழுமையாக *இரண்டு ஆண்டுகள்*பால் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் வசனம் 31:14 ல் பால்குடியை மறப்பது இரண்டு ஆண்டுகள் என்றும், 46:15 ல் சுமப்பதும்,பால்குடி மறப்பதும் சேர்த்து 30 மாதங்கள் என கூறியுள்ளான்.

இந்த கணக்குப்படி கர்ப்பகாலம் 10 மாதத்தை கழிதால் பால்குடி மறத்தல் 20 மாதங்கள் தான் ஆகின்றன.

பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதும் 20 மாதங்கள் என்பதும் முரணாக தோன்றலாம்.

ஆனால் கருவில் சுமார் 10 மாதங்கள் குழந்தை இருந்தாலும் அது மனிதன் என்ற தன்மையை பெற நான்கு மாதங்கள் ஆகின்றன.
எனவே மனித நிலையை அடைந்த காலத்திலிருந்து கணக்கிட்டால் சுமார் ஆறுமாத காலமும்,  இரண்டு ஆண்டுகளும் சேர்த்து 30 மாதங்கள் பூர்த்தியாகிறது. எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று முரணல்ல.

இதிலிருந்து ஆண் குழந்தையாக இருந்தாலும்,பெண் குழந்தைதாக இருந்தாலும் பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்

📓
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ  ﴿31:14﴾
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

📓

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ  ﴿46:15﴾
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.

📓233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்….

📓பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். (திருக்குர்ஆன் 23:14) 

××××××××××××××××××××××××××××××

🌺Question: 143🌺

Gay(aravanigal) yaar.?aanaa?pen ah ?alladhu avargal sollikolvadhu pol oru thani gender ah?alladhu oru psychological problem ah? Islaam idhai patri enna solgiradhu

🌺 *அரவாணிகள் என்பவர்கள் யார்? ஆணா? பெண்ணா? அல்லது ஒரு தனி பாலினமா? அல்லது மனநோய் உள்ளவர்களா? மார்க்கம் இவர்களை பற்றி கூறுவது என்ன?*

🍃பதில்🍃

  இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.

ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர்.

இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.

இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அதேபோல் பெண் உடலமைப்பை கொண்டவர்கள் ஆணின் குணாதிசியத்தை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கும் சிகிச்சை அளிதால் குணமாகும் எனும் சூழ்நிலையில் சரி செய்ய முயற்சிக்கலாம்.

ஆனால் சரிசெய்ய முடியாத சூழ்நிலையில் அவர்களின் உருவத்தின் அமைப்பை கொண்டு அவர்கள் அதுவாகத்தான் பாவிக்க வேண்டும்.

எதிர்பாலினமாக ஒப்பனை செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.
ஆண் தோற்றம் கொண்டவர்கள் பெண்களாக மாறாமல் ஆணின் சட்டத்தையும்,பெண் தோற்றம் கொண்வர்கள் பெண்ணின் சட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

மாறாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தன்னை ஆண் அரவாணிகள் பெண்கள் போன்றும், பெண் அரவாணிகள் ஆண்கள் போன்றும் வேடமிட கூடாதும்.

இது ஒரு மிகப்பெரிய சோதனையாயினும் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

இது அவர்களுக்கு உடலும்,மனமும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம்.
இஸ்லாமியர்களாகிய நாம் அவர்களை ஒதுக்காது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் தவறான பல வழிகளை தேர்ந்தெடுக்கக் கூடும்.

தீய நடத்தை கொண்ட அரவாணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

📚📖ஆதாரங்கள்

📕அவர்களை வழி கெடுப்பேன்;அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்;அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 119)

📕நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் .

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (5885)

📕நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும்,ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், “அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரைரை வெளியேற்றினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி

நூல் : புகாரி (5886)

📕என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்) “அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும்,பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) 

நூல் : புகாரி (4324)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🕌Question no:144🕌

  Palliyil irandaam jamaathil thozhudhaal mudhal jamaathil thozhudha nanmai kidaikkumaa?

🕌கேள்வி எண்:144🕌

*பள்ளியில் இரண்டாம் ஜமாத்தில் தொழுதால் முதல் ஜமாத்தில் கிடைக்கும் நன்மை கிடைக்குமா?*

🌟பதில்🌟
   
  தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதுதான் சிறப்பு என நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்துயுள்ளார்கள்.
எனவே,நாம் முதல் ஜமாத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஆனாலும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் தொழுகை தவறவிடப்பட்டால் தனியாக தொழுவதைவிட ஜமாத்தாக தொழுவதற்கு நன்மை ஆதலால் இரண்டாம் ஜமாத் தொழுது கொள்ளலாம்.

ஆனாலும் அதைவிட மிக மிக சிறந்தது தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது.

பிறகுள்ள ஜமாத்தை காட்டிலும் அதன் நேரத்தில் தொழுவதுதான் சிறந்தது.
அது அல்லாஹ்விற்கு மிக விருப்பமான செயலாதலால் அதற்கு முக்கிதத்துவம் அளிக்க வேண்டும்.

அல்லாஹ் நம் உள்ளத்தை நன்கறிபவன். நம்முடைய சூழ்நிலை பொறுத்து இவ்வாறு தொழ நேரிட்டால் அல்லாஹ் நாடினால்
இரண்டாம் ஜமாத்தில் தொழும் தொழுகைக்கும் முதல் ஜமாத்தில் தொழுத நன்மை கிடைக்கும்.

📚📖ஆதாரங்கள்

📓527. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோதுஇ ”தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ”பெற்றோருக்கு நன்மை செய்தல்” என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ”இறைவழியில் அறப்போர் புரிதல்” என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

📓
654.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

📓615.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

📓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி ) நூல் : முஸ்லிம் (1147)

📓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : முஸ்லிம் (1151)

📓நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார்.  அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்

அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரலி) நூல் திர்மிதி (204)  அபூதாவூத் 487

📓அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

புகாரி பாகம் 1 பக்கம் 505

📓நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத்,இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர். (திர்மிதி)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🍎Question no: 145🍎

Mathavidai kalathil Qur’an othalama?

🍎கேள்வி எண்: 145🍎

மாதவிடாய் காலத்தில் குரான் ஓதலாமா?

☘பதில்☘

   மாதவிடாய் காலத்தில் நோன்பு வைப்பது, தொழுவது, உடலுறவு கொள்ளுவது, தவாப் செய்வது போன்றவை செய்யக்கூடாது என இஸ்லாம் தெளிவாக கூறியுள்ளது.

இது தவிர ஏனைய செயல்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டதாகும். குரான் ஓதுவதற்க்கு எந்த தடையும் கிடையாது. அப்படி கூடாது எனில் நிச்சயமாக ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

பொதுவாக இவ்வாறு கூறுபவர்கள் கீழ்காணும் வசனத்தைத்தான் காட்டுவார்கள். அதன் பொருளை அறிந்தால் இவ்வாறு கூறமாட்டர்கள்.

தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்.
அல்குர்ஆன் (56 : 79)

குளிப்புக் கடமையானவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை மாற்றுக் கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனைத் தூய்மையற்ற நிலையில் உள்ள மாதவிடாய் ஏற்பட்டவர்கள் தொடக்கூடாது. ஓதக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள்.

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும்  திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்கள் என்றால் யார்?தொடமாட்டார்கள் என்றால் எதை?என்பதை முதலில் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொடமாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56 : 79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள எழுத்து வடிவிலான குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது. 
அல்குர்ஆன் (56 : 77. 79)

56 : 79 வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும்.  இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் எழுத்து வடிவிலான திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

✒தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக்கூடாது. ஓதக்கூடாது என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, ”நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள்.  தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூ­ல் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமன் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ்ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது.  இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானகாஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது.  ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ இதில் குறிப்பிடப்படவில்லை.  உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது.  எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

எனவே, *மாதவிடாய் காலங்களில் குரான் ஓதுவதற்க்கு எந்த ஒரு தடை கிடையாது*

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு’பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள்.  தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக்கொடுத்திருக்க மாட்டார்கள்.

எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம்.

📚📖ஆதாரங்கள்

📕294. ”நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ”ஸரிஃப்” என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள்இ நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்துஇ ”உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்!” என்றேன். ”இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்” என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ”குர்பானி” கொடுத்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📕297. ”எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📕1951. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.”
இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

************************************
🕌Question no: 146🕌

   Nonbu adhaan aarbikkimbodhu thirakka venduma? alladhu adhaan mudiyumbodhu thirakka venduma?
Adhaan sollumbodhu aadu,maadu yenaiya aindharivu jeevangal adhaanukku mariyadhai koduthu saapiduvadhai niruthum endra seudhi unmaiya?

🕌கேள்வி எண்: 146🕌
நோன்பு திறக்கும் போது, இப்போ அதான் சொல்ல ஆரம்பிக்கும் போது திறக்கனுமா.??
அல்லது அதான் முழுமையாக முடிந்த பிறகு தான் திறக்கனுமா.!
எது சரி.?இது நிறையப் பேரின் சந்தேகம்.
*** அதான் சொல்லும் போது ஆடு,மாடு ஏனைய ஐஅறிவு ஜீவன்களே சாப்பிடுரத நிப்பாட்டு மாம்.
அதானுக்கு மரியாதை வெக்குமாம்.இது உண்மையா.!

🕌பதில்🕌

 
நோன்பு தொடங்குவதற்கோ,நோன்பு திறப்பதற்கோ நாம் அதானை பார்க்க வேண்டிய அவசியமில்லை.
சூரியன் உதிக்கும், மறையும் நேரத்தை பார்த்தால் போதுமானது. நம் நோன்பு முழுமை பெற்றுவிடும்.

நோன்பு தொடங்குவதற்கு கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் தெரியும் வரை சஹர் செய்யலாம் என்றும்,
நோன்பு திறப்பதற்கு இரவு வரை.. என்று தெளிவாக அல்லாஹ் தன் திருக்குரானில் கூறியுள்ளான்.

சூரியன் மறையும் நேரம் நோன்பு திறக்க வேண்டும்.
*நோன்பு திறப்பதை முற்படுத்த வேண்டும்* எனும் அடிப்படையில் சூரியன் மறையும் நேரத்தை பார்த்தால் போதுமானது.

சில பள்ளிகளில் சூரியன் மறைந்து சில நிமிடம் கழித்துத்தான் அதான் சொல்லுவார்கள்.
சில பள்ளிகளில் சரியாக மறையும் நேரத்தில் அதான் சொல்லுவார்கள்.

அப்படி,சரியான நேரத்தில் அதான் ஒலித்தால் அதான் சொல்லும் ஆரம்ப நேரத்தில் நோன்பு திறக்க வேண்டும்.
முடியும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

அதான் சொல்லும்போது ஐஅறிவு ஜீவிகள் அதானுக்கு மரியாதை கொடுத்து சாப்பிடுவதை நிப்பாட்டும் என்ற செய்தி *ஆதாரமற்றது*

📚📖ஆதாரங்கள்:

 📙   ‘….நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்’ என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956)

📙’பகல் பின்னோக்கிச் சென்று, இரவு முன்னோக்கி வந்து சூரியனும் மறைந்து விட்டால் நீ நோன்பு திறப்பாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), திர்மிதி 634)

📙    சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.  

 📙   ‘விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

📙    மற்றொரு அறிவிப்பில், ‘யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்’ என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா 1698)

  ✒  நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.

📙2:187 ….. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்…

*__________________________________*

🌺Question no:147🌺

    Allah aadham(alai) avargalai than thotrathil padaithulladhaaga nabi(sal) avargal therivithullaargal.,Idhai patri vilakkavum

🌺கேள்வி எண்:147🌺

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை தன்னுடைய தோற்றத்தில் படைத்துள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தெரிவித்துள்ளார்கள்.விளக்கவும்

📚📖 ஆதாரங்கள்

📕
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, “நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். “சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்கள் மீது நிலவட்டும்)” என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதி-ல்) “இறைவனின் கருணையும்’ என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்கüன் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரி 6227

📕ஆதம் நபியை அல்லாஹ் தன் சாயலில் படைத்தான் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தால் தான் இப்படி சொல்லி இருக்க முடியும் என்ற அவசியம் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி அறிவித்துக் கொடுத்தால் அதனடிப்படையில் இதைச் சொல்ல முடியும்.

அல்லாஹ்வை நான் உட்பட யாரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி இருப்பதால் அல்லாஹ்வைப் பார்த்துவிட்டு இப்படி கூறினார்கள் என்று கருத முடியாது.

இதன் மூலம் அல்லாஹ்வின் தோற்றமும் ஆதம் அலை அவர்களின் தோற்றமும் நூறு சதவிகிதம் ஒன்று என புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைவனை போன்று யாரும் கிடையாது, அவனுக்கு எந்த வகையிலும் ஒப்புமை இல்லை என குர்ஆன் சொல்கிறது.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

📕
فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ  ﴿42:11﴾
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

📕
رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ ۚ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا  ﴿19:65﴾
19:65. “(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  

📕
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ  ﴿112:4﴾
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

எனினும் முகத்தில் அறைவதை இஸ்லாம் தடைசெய்கிறது

📕5092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அறைவதைத் தவிர்க்கட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

~~~~~~~~~~~~~~~~~~~
=======================

💀Question no: 148💀

    En veetarugil ulla pennukku peai pidithirukiradhu endru solgiraargal. Andha pen iravellaam satham idugiraal. Peai pisaasu irukiradhaa? Peai enbadhu unmaiya? Vilakkam tharauvm.

💀கேள்வி எண்: 148💀

*என் பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்து இருக்கு என்று சொல்கிறார்கள்… அந்த பெண் இரவெல்லாம் பயங்கரமாக சத்தம் போடுது. பேய் பிசாசு இருக்கிறதா?  பேய் என்பது உண்மையா???  விளக்கம் தரவும்….*

👹பதில்👹

இஸ்லாத்தை பொறுத்தவரை பேய்,பிசாசு என்பதெல்லாம் மூடநம்பிக்கை
ஆகும்.

பேய் பற்றி கூறுபவர்கள்  பேய்,பிசாசு,ஆவி என்பதெல்லாம் என்ன என்று கூறுகிறார்கள்?
இறந்த ஒருவரின் உடலிலுள்ள ஆவி இன்னொருவர் மேல் பிடிப்பது.

இஸ்லாம் மார்க்கத்தில் இறந்த ஒருவரின் உயிர் அல்லாஹ்விடம்தான் சென்றடைகிறது என்று தெளிவாக பல ஆதாரங்களுடன் சந்தேகமின்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அந்த ஆவி எப்படி இன்னொரு உடலில் போக முடியும்? சிந்தித்து பார்க்க வேண்டும்.

நம் மார்க்கத்தில் நம் கண்களுக்கு புலப்படாமல் இருப்பது ஷைத்தான்களும்,நல்ல ஜின்கள், கெட்ட ஜின்கள்,மலக்குமார்கள் ஆகியவை.

இவற்றில் ஷைத்தான்களும்,கெட்ட ஜின்களும் நம்மை வழிகெடுப்பவைகள். ஆனால் இவைகள் ஈமான் கொண்டவர்களை ஒவ்வொரு செயலிலும் வழிகெடுக்குமே தவிர வெளிப்படையாக உடலினுள் புகுந்து நம்மை சத்தம் போடுவது,கொல்வது,பயங்கர அகோர விஷயங்கள் செய்வது…போன்ற செயல்கள் செய்யாது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஷைத்தானும்,ஒரு வானவரும் உள்ளது உண்மைதான்.

ஷைத்தான் தீய காரியம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த மனிதன் சுய சிந்தனையுடன், தன்னுணர்வுடன் அவனுக்குக் கட்டுப்படுகின்றான். வானவர் நன்மைகளைச் செய்யுமாறு தூண்டுகிறார். அந்த மனிதன் சுய சிந்தனையுடனும் விருப்பத்துடனும் அதனைச் செய்கிறான்.

இதிலிருந்து ஷைத்தானுடைய அதிகபட்ச ஆதிக்கம் என்னவென்பது தெளிவாகவே தெரிகின்றது. மனிதர்களைத் தவறான பாதையில் நடக்கத் தூண்டி அதைச் சரியானது என நம்ப வைப்பது தான் ஷைத்தானுடைய அதிகபட்சமான ஆதிக்கமாகும்.

இது மறைமுகமாக நம்மை வழிகெடுக்கக்கூடியவை.
இது ஒரு தீய சக்தி.

இந்த ஷைத்தானை அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோரி எளிதாக வெல்லலாம்.

ஆனால் *பேய்,பிசாசு போன்றவைகள் இல்லாத ஒரு கற்பனை ஆகும்*

ஒருவர் மரணித்துவிட்டால் நமக்கும் அவர்களுக்குமிடையே அல்லாஹ் ஒரு திரையை ஏற்படுத்தி விடுவான்.

அப்படி பேய் இருக்குமெனில் நம் முன்னால் இறந்த பல கோடி ஆவிகள் பலரது உடலில் குடிகொண்டு தான் செய்ய நினைத்ததை செய்து முடித்திருக்குமல்லவா? இது எப்படி சாத்தியமாகும்.

அப்படி பேய்,ஆவி இருந்ததெனில் நமக்கு முன் இறந்தவர்கள் அவர்களின் நிலை என்ன என்பதை யாரின் உடலினுள் சென்று நமக்கு தெரிவித்திருப்பார்களல்லவா? இது எப்படி சாத்தியமாகும்?

இவ்வளவு ஏன்? மனிதரில் மிகச்சிறந்த நம் நபி(ஸல்) அவர்களுக்கு கூட அல்லாஹ் அந்த வாய்ப்பளிக்கவில்லை. நாம் சொல்லும் சலாமை வானவர்கள் தான் எத்திவைப்பார்களே தவிர அவரின் ஆவிக்கு நேரடியாக போய் சேராது.
இதைவிட நமக்கு ஒரு ஆதாரம் தேவை இல்லை.

✒அந்த பெண் இரவில் கத்துவது ஹிஸ்டீரியா போன்ற நரம்பு நோயினால் அல்லது ஏதாவது மனபாதிப்பினாலான மனநோயினால் இருக்கும். இதற்கு நரம்பியல் நிபுணர் அல்லது மனோதத்துவ நிபுணரிடம் சென்று வைத்தியம் பார்த்தால் போதுமானது. பேயிற்கும் இதற்கும் ஒரு சம்பந்தம் கிடையாது.

இது போன்ற விஷயங்கள் பலர் தன்னுடைய சுயலாபத்திற்காக பரப்பி விடுகின்றனர். இன்னும் சிலர் சில சமூக சீர்கேடுகள் செய்வதற்காகவும், தன்னுடைய வருமானத்தை பெருக்கவும் இப்படியான இழி செயலளில் ஈடுபடுகின்றனர். சிலருக்கு தன்னுடைய ஆழ்மனது கற்பனைகளின் மூலமும் இப்படி நடக்கிறது. இன்னும் சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக பேய் பிடித்ததாக நடிக்கின்றனர்.

எனவே,இதுபோன்ற விஷயங்களை நம்பிக்கை கொள்ளாது தூய்மையான இஸ்லாமியர்களாக வாழ்வோம். இன்ஷா அல்லாஹ்

📚📖ஆதாரங்கள்:

📙உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:42

📙உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன். (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ மன்னித்து அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு’ என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : புகாரி   6320, 7393 முஸ்லிம் 5257

📙முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99,100

📙உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூற்கள் : புகாரி 1338, 1374, 1379, 6515, முஸ்லிம் 5505

📙பூமியில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய சில வானவர்கள் உள்ளனர். என் சமுதாயத்தினரின் ஸலாமை அவர்கள் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்கள் : நஸாயீ, தாரிமி

📙ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் திர்மிதீ

📙இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

திருக்குர்ஆன் 8:201

📙’உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபீ (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும். அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்த நற்பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்று முதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.

(அந்த இரு வானவர்கள்) முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அது அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி: 991)

***********************************

🍒Question no:149🍒

   Oru sahabi kulikkumbodhu kanthrishti pattu  avarkku udal nalam sariyillaamal ponadhaga hadees ulladhu? idhai vaithu paarkumbodhu kanthrishti unmaydhaney? Vilakkavum.

🍒கேள்வி எண்:149🍒

   ஒருவர் ஒரு சஹாபி குளிப்பதை பார்த்ததால் அவருக்கு கண்திருஷ்டி பட்டுவிட்டதாக ஒரு ஆலிம் உரையில் கேட்டேன்,அப்பொழுது அது உண்மைதானா?

🌾பதில்🌾

    போன கேள்வியில் சூனியம் எப்படிப்பட்டது என்பதை விளக்கினோம். இருப்பினும் இந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு உரிய பதிலை எதிர்பார்க்கிறீர்கள்.

இதன் விளக்கத்தை பார்ப்போம்.
எப்படிப்பட்ட ஹதீஸை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுருக்கமாக பார்ப்போம்.
1) குரானில் உள்ள விஷயங்கள் அப்படியே ஹதீஸில் இருந்தால் நாம் அதை எந்த மறுப்பும் இன்றி ஏற்க வேண்டும்.
2) குரானில் கூறப்படாத சில விஷயங்கள் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய,சொன்ன,அங்கீகரித்த விஷயங்களை ஏற்க வேண்டும்.
இந்த ஹதீஸ்கள் குரானுக்கு எதிராக இல்லையெனில் நாம் அறிவிப்பாளர்களின் உண்மை நிலையை வைத்து அப்படியே ஏற்கலாம்.

ஆனால்,ஹதீஸ்கள் யார் வழியாக வந்தாலும் குரானுக்கு எதிரான ஒரு விஷயமாக அது இருக்குமானால் அதை நாம் ஏற்கக்கூடாது.
ஏனெனில் குரானில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடியான சத்திய வார்த்தைகள். இதை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.
 
இதன் அடிப்படையில் அல்லாஹ் குரானில் சூனியம் பற்றியும்,கண்திருஷ்டி பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளான்.

அல்லாஹ்வை தவிர யாருக்கும் எந்த சக்தியும் கிடையாது எனவும்,சூனிய காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் எனவும்,அல்லாஹ் தான் விதித்ததை தவிர யாருக்கும் ஒன்றும் நடக்காது என சந்தேகத்திற்கு இடம் இன்றி கூறியுள்ளான்.
எனவே,சூனியம் என்பது இருந்தாலும் இதற்கு ஒரு சக்தியும் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஒரு தந்திரக்கலை தவிர எந்த மந்திர சக்தியும் இல்லை.

அதுபோல் தான்,கண்திருஷ்டி என்ற பல ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும், அதன் மூலம் பாதிப்பு ஏற்படும் என்று நம்பிவிட்டால்., அல்லாஹ்விற்கு மட்டுமே இயலும் ஒரு சக்தி ஒருவரின் கண் செய்துவிட்டதாகத்தான் அர்த்தம்.
இது எப்படி சாத்தியமாகும்?
இது குரானின் வசனங்களுக்கு எதிராக அமைந்துவிடும்.
ஷைத்தானின் தீண்டுதலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோர அல்லாஹ் பல இடங்களிலும் கூறியுள்ளான். ஒரு மனிதனின் கண்திருஷ்டிக்கு பாதுகாப்பு தேடுங்கள் என எந்த ஒரு வசனத்திலும் இடம் பெறவில்லை. பொறாமைக் காரனின் பொறாமையிலிருந்து பாதுகாப்பு அல்லாஹ்விடம் கேட்க வேண்டும், இது குரான் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் விளக்கம் யாதெனில் அவன் பொறாமை காரணமாக கைகளால்,நாவினால் செய்யும் தீங்கு ஆகும் தவிர அவன் பார்ப்பதின் மூலம் ஒன்றும் ஆகிவிடாது என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நம்முடைய பலவீனமான செய்கைகளில் தான் ஷைத்தான் எளிதாக ஊடுறுவி ஈமானை தகர்க்க செய்வான்.

ஒரு சஹாபி குளிப்பதை பார்ப்பதால் ஏற்பட்ட உடல்நல குறைவு மற்றும் கண்திருஷ்டி பட்டால் குளித்து அந்த நீரைக் கொண்டு கண்பட்ட இடத்தை கழுவவது போன்ற ஹதீஸ்கள் இருக்கிறது என்றாலும்,
“குளித்து விட்டு அந்த அசுத்த நீரைக் கொண்டு கண்பட்ட இடத்தை கழுவினால் திருஷ்டி நீங்கிவிடும்” போன்ற செய்திகள் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா???

இப்படி சந்தேகத்திற்குரிய செய்தியை சொல்லியிருக்கக் கூடுமா???என்று சிந்தித்து பார்த்தாலே நமக்கு உண்மை விளங்கிவிடும். நபி(ஸல்) அவர்கள் சொன்ன  விஷயங்களை நாம் கேட்கும்போது சந்தேகம் ஏற்படாது. இப்படியான அல்லாஹ்விற்கு இணையான சக்தி ஒரு சாதாரண மனிதக் கண்ணுக்கு செய்யமுடியுமா? மற்றும் குளித்த அசுத்த நீரினால் கழுவச் சொல்லி இருப்பார்களா? என்று பகுத்தறிய வேண்டும்.

📚📖ஆதாரங்கள்

📙قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

📙
وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ  ﴿11:123﴾
11:123. வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் – நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.

📙இன்னும் அவர்கள் சொல்லும் போது,
என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் ஒத்துக்கொள்ளுமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு பணியுமானால் (அதாவது நமது உணர்வுகள்), அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை கூறுவதில் நானே மிக தகுதியானவன். 
என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு கட்டுப்படாமல் அதை விட்டு விரண்டோடுமானால் , அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் தூரமானவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் அபு உசைத்     நூல் அஹமத் 15478

**குறிப்பிட்ட ஒரு ஹதீஸை விளக்காமல் மீண்டும் சூனியம்,கண்திருஷ்டி பற்றியே விளக்கப்பட்டுள்ளது ஏனெனில் இதை பற்றி தெளிவாக விளங்கிக்கொண்டால் உங்களது கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். 🎤🎤🎤

=============================

🍒Question no:150🍒

Pengal 30 nonbu muzhuvadhuvaamaga kadaipidippadharkaaga maathirai saappittu maadhavilakkai thalli poda islathil anumadhi unda?

🍒கேள்வி எண் 150🍒

    பெண்கள் 30 நோன்பையும் முழுமையாக கடைபிடிப்பதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளிப்போட இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

☘பதில்☘

    இஸ்லாம் இயற்கையான மார்க்கம். இதில் அல்லாஹ்வும்,தூதரும் காட்டித்தந்தவைகள் மட்டும்தான் செய்ய வேண்டும். மனித முயற்சிகளை அதில் புகுத்தக்கூடாது.

மாதவிலக்கை அல்லாஹ்தான் பெண்களுக்கு ஏற்படுத்தியுள்ளான்.
எனவே, இதை தடுப்பது இஸ்லாத்திற்கு முரணானதாகும்.

அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் என்பது அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். ரமளானில் சில நாட்கள் தவறி விடுவதால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் பெண்களுக்குக் குறைந்து விடாது. விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களாச் செய்து விடும் போது புனித ரமளானில் நோன்பு நோற்ற அதே நன்மையை இவர்களும் அடைவார்கள்.

இது மார்க்கத்திற்கு முரணானது மட்டுமல்ல,உடலுக்கும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இயற்கையான மாதச்சுற்று மாறி இது பல இடையூறுகளையும் ஏற்படுத்தும்.

அல்லாஹ் மார்க்கத்தை மிக எளிமையாக ஆக்கியுள்ளான். தன்னை வருத்தி எந்த ஒரு அமலையும் செய்ய மார்க்கம் கற்றுத்தரவில்லை. மேலும் பெண்களுக்கு நாம் குடும்பத்திற்கு செய்யும் பணிவிடையில் அல்லாஹ் பல நன்மைகள் வைத்துள்ளான். இயற்கையான முறையில் அமல்களை உளத்தூய்மையுடன் செய்தாலே அல்லாஹ் அதற்குரிய நன்மையை தருவான்

மாதவிடாயை அவனே ஏற்படுத்தி விட்டு, அந்தக் காலத்தில் நோன்பு நோற்க வேண்டாம் என்று அவனே கட்டளையிட்டு விட்டு, அவர்களின் கூலியை அவனே குறைப்பான் என்பது இறைவன் விஷயத்தில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாததாகும்

எனவே, *மாதவிலக்கை மருந்து மாத்திரைகளால் தள்ளி போடுவது அரவே கூடாத விஷயமாகும்*

இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

📚📖ஆதாரங்கள்

📙
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ  ﴿2:185﴾
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

📙1755. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
”இறையில்லம் கஅபாவை வலம்வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்” என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும்விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 25. ஹஜ்

📙அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர்.

அல்குர்ஆன் 10:44

📙அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.

அல்குர்ஆன் 4:40

📙2:233 ….எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது ….
———————————————————–

மார்க்க கேள்வி பதில்கள்.

😴Question no:131😴

Kanavu 3 types.. Nalla kanavu Allahvidam irundhum, ketta kanavu shaitanidam irundhum varum, 3rd type Aazh manadhil thobdrum ennangal kanavaga thondrum enbadhu varai arindhadhe.. But namaku varum kanavirkum namadhu vaazhvil nadakka irukkira sambavangalukkum thodarbu unda? Ovvoru kanavukkum oru vilakkam meaning enbadhu irukkiradha? enbadhu en kelvi.. thelivaaga vilakkavum..

😴கேள்வி எண்:131😴

  கனவு என்பது மூன்று வகை
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்தும்,
கெட்ட கனவு ஷைத்தானிடமுருந்தும்,
மூன்றாம் வகை கனவு ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள் என்பதும் நாம் அறிந்ததே!
ஆனால் நம் கனவுகளுக்கும்,நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்களுக்கும் தொடர்பு உண்டா?
ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தம் உள்ளதா? இதற்கு தெளிவான விளக்கம் தரவும்.

😴பதில்😴

  பொதுவாக அனைத்து உயிரினமும் கனவு காண கூடியவர்கள்.
நபி மார்களுக்கு அல்லாஹ் கனவின் மூலம்தான் வஹீ இறக்கினான். மற்றும் தன் கட்டளைகள் அனைத்தும் அவர்களுக்கு கனவின் மூலம் தான் வெளிப்படுத்தினான்.

ஆனால்,நபி மார்களுக்கு பிறகு கனவின் பலனை அல்லாஹ் யார்க்கும் அளிக்கவில்லை. இப்பொது கனவின் விளக்கம் கூறுவது அனைத்தும் முற்றிலும் கற்பனையானதுதான்.
இது சம்பந்தமான பல புத்தகங்கள் வருகிறது. இதுவும் நம்பகூடாத ஒன்றாகும்.

ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை கூட எனக்கு பின் இவர்கள் கனவுப்பலனை கூறுவார்கள் என குறிப்பிட்டது கிடையாது.
சஹாபாக்கள் எவ்வளவு தூய்மையான இறையடியார்களாக இருந்தபோதிலும் நபி(ஸல்) அவர்களிடம்தான் கனவின் தன்மையை கூறி விளக்கம் கேட்பார்கள்.

எனவே,நபிமார்களுக்கு பிறகு வந்த யார்க்கும் கனவுப் பலன் அறியும் சக்தி கொடுக்கப்படவில்லை.

ஆனால்,இந்த கேள்வியிலேயே பதில் உள்ளது. நல்ல கனவு வந்தால் நல்ல விஷயங்கள் நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஏனெனில், இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்திருக்கிறது என அறியலாம்.
உதாரணமாக ஒரு நபித்தோழர் வெண்மையை கனவு கண்டேன் என சொல்லியபோது நபி(ஸல்) அவர்கள் இது கல்வி என்று விளக்கம் கொடுத்தார்.
அது நல்ல கனவு காணும் போது நன்மை என யூகித்துக்கொள்ளலாம்.

அதேபோல் கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருகிறது என்பதால் ஏதோ தீங்கு நடக்கும் என்பதை எச்சரிக்கயாகக் கொண்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடினால் அல்லாஹ் கெட்டது எதுவும் நடக்காமல் பாதுகாப்பளிப்பான்.
அதனால்தான் கெட்ட கனவு காணுவதை யாருடனும் கூறாமல் இடது புறம் மூன்று முறை துப்பி விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோறுமாரு நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.

மூன்றாம் வகை கனவில்தான் இறந்தவர்கள்,எப்பொழுதோ நடந்த விஷயங்களின் பிரதிபலிப்பு போன்றவை தோன்றும். இதை பொருட்படுத்த தேவையில்லை.

எனவே, கனவு வரும் தன்மையை பொறுத்து நாமே நம் கனவை வைத்து நல்லதா? கெட்டதா என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
நல்ல கனவிற்கு அது தொடர்பான விஷயங்கள்தான் தோன்றும், கெட்ட கனவிற்கு அது தொடர்பான விஷயங்கள் தான் தோன்றும்.
அதை நாமே யூகிக்கலாம். அதை விடுத்து கனவுப்பலன் தேடி தீமையான காரியங்களுக்கு வழிகொடுக்காமல் இருக்க வேண்டும்.

📚📖ஆதாரங்கள்:

📔 1122. இப்னு உமர்(ரலி) கூறியதவாது.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ”அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்” என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்

📔2015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபித்தோழர்களில் சிலருக்குஇ (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போதுஇ நபி(ஸல்) அவர்கள் ”உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவேஇ அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 32. லைலத்துல் கத்ரின் சிறப்பு

📔3292. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில்இ (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது.
என கதாதா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

📔5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் ”இவர் உங்கள் (வருங்கால) மனைவி”” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ”இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின்இ இதனை அல்லாஹ் நனவாக்குவான்”” என்று சொல்லிக்கொண்டேன்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

📔6983. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவுஇ நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். 3
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 91. கனவுக்கு விளக்கமளித்தல்

📔7038 7039. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து ”மஹ்யஆ” சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். ”மஹ்யஆ” என்பது ”அல்ஜுஹ்ஃபா” எனும் இடமாகும்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 91. கனவுக்கு விளக்கமளித்தல்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🕌Question no: 132 🕌

Oru sunnath nonbu naalil kalaa nonbaiyum andha sunnath nonbaiyum serthu orey nonbaaga pidikalaamaa?eg. arafaa nonbu

🕌கேள்வி 132🕌
ஒரு ஸுன்னத்  (உம். அரபா நோன்பு) நோன்பு நாளில் களா நோன்பையும் அந்த ஸுன்னத் நோன்பையும் சேர்த்து ஒரு நோன்பாக பிடிக்கலாமா?

🕌பதில்🕌

  கடமையான நோன்பு பாக்கி இருக்கும் நிலையில் முதலில் அந்த களா நோன்பைத் தான் நிறைவேற்றிட வேண்டும்.

சுன்னத்தான நோன்பு நாளாக இருந்தாலும் களா நோன்பிற்குத்தான் முதன்மைத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

நோன்பை பொறுத்தவரை நாம் எந்த நோன்பு என்று நிய்யத்து வைக்கிறோமோ அந்த நோன்பாகத்தான் அது ஏற்கப்படும்.

ஆனால் அந்த இரு நோன்பையும் ஒரே நாளில் பிடித்தால் இரண்டும் ஒன்றாக ஏற்கப்படாது.
எந்த நோன்பை நாம் நாடுகிறோமோ அந்த நோன்புதான் அங்கீகரிக்கப்படும்.
ஆனாலும் விடுபட்ட நோன்பை முதலில் வைப்பதுதான் முக்கியம்.

📚ஆதாரம்:

📙1. ”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவேஇ ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 1. இறைச்செய்தியின் ஆரம்பம்

📙
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ  ﴿2:183﴾
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

📙
أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ  ﴿2:184﴾
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

*************************************

🙎🏻Question no: 133🙎🏻

madhaviday kaaalathil hair or nail cut pannakkodaza?

🙎🏻கேள்வி எண்:133🙎🏻

மாதவிடாய் காலத்தில் தலமுடியை ,நகங்களை வெட்டலாமா?

💅 பதில் 💅

  மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத விஷயங்கள் இஸ்லாத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

அதில்,உதாரணமாக நோன்பு வைத்தல்,தொழுதல்,திருமண நிலையில் உடலுறவு கொள்ளுதல், ஹஜ்ஜின் போது தவாப் செய்தல் ஆகியவை கூடாது.
இது தவிர ஏனைய செயல்கள் செய்வதற்கு மார்க்கத்தில் எந்தவித தடையும் இல்லை.

அப்படி வெட்டக்கூடாது எனில் நபி(ஸல்) அவர்கள் நிச்சயம் கூறியுருப்பார்கள்.
இப்படி சொல்வது அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாகும்.

எனவே,மாதவிடாய் காலங்களில் தாராளமாக முடி,நகங்களை வெட்டிக்கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்

📓305. ”நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். ”ஸரிஃப்” என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள்இ அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்துஇ ”ஏனழுகிறாய்?” என்று கேட்டார்கள். ”இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்” என்றேன். ”உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்!” என்றேன். அப்போது ”இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்” என்று கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📓
إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَٰكِنَّ النَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ  ﴿10:44﴾
10:44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை – எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.

************************************

🕌Question no: 134 🕌

Ooril ishavudaiya neram 7.27 endru irukkiradhu. Velaippaluvaal magrib thozhugai thaamadhamaagiradhu. Thozha varumbodhu thavarudhalaaga 7.10 key adhaan olikkiradhu.
Appozhudhu magrib thozha mudiyumaa? alladhu magrib kalaavaagivittadhaa?

🕌கேள்வி எண்:134🕌

ஊரில் இஷாவுடைய நேரம் 7.27 என்று இருக்கிறது.ஏதோ வேலையால் மஹ்ரிப் தொழுகை தாமதமாகிறது.7.10க்கு தொழ வரும் போது பள்ளியில் ஏதெ தவறால் 7.10 க்கு அதான் ஒளிக்கிறது.அப்போது மஹ்ரிப் தொழ முடியுமா?அல்லது மஹ்ரிப் கழாவாகிவிட்டதா?

🕌பதில்🕌

   பொதுவாக தொழுகையில் பஜ்ரு மற்றும் மஃரிப் நேரத் தொழுகைக்கு மிக குறுகிய கால அளவே இருக்கும் நிலையில் இந்த தொழுகைதை குறிப்பிட்ட நேரத்தில் தொழுதுவிட வேண்டும்.

தொழுகையை எந்த காரணத்திற்காகவும் விட அனுமதி கிடையாது. ஆனால் தூக்கம்,மறதி,பயணம் ஆகிய காரணங்களுக்கு அல்லாஹ் அளித்த மிகப்பெரும் பொக்கிஷம் ஜம்மு,கஸ்ரு அதாவது சுருக்கித் தொழுதல்,சேர்த்துத் தொழுதல்

இந்த ஏதேனும் காரணத்தினால் தொழுகை தாமதப்பட்டால் மஃரிபையும்,இஷாவையும் சேர்த்துத் தொழுவதில் தவறில்லை.

உங்களது வேலைப்பளு காரணமாக மஃரிப் தொழுகை தாமதான காரணத்தினால் அதை இஷாவுடன் தொழுவதுதான் சரியானது.

ஏனெனில் சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், நடு உச்சியில் இருக்கும்போது தொழுவதற்கு அனுமதி கிடையாது.

சூரியன் மறையும் நேரத்தை கடந்து தொழுது கொண்டிருக்கும் நிலையில் 7.10 க்கு மஃரிப் தொழுது கொண்டிருக்கும் போது தவறுதலாக இஷாவின் அதான் ஒலித்துள்ளது. இந்த நிலையில் உங்களது தொழுகை ஏற்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,ஒருவர் இகாமத் சொல்வதை செவியுற்றால் என்ன வேலையில் இருந்தாலும் தொழுகைக்கு செல்ல கூறியுள்ளார்.
அதனால் நீங்கள் தொழும்போது இகாமத் சொல்லப்பட்டிருந்தால் நீங்கள் வேறு தொழுகை தொழுது கொண்டிருந்தால் அதை விட்டு இமாமுடன் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் பாங்கு மட்டுமே சொல்லிய நிலையில் உங்களது தொழுகை ஏற்கப்படும்.

ஜூம்மா தினத்தில் அதான் சொல்லிக்கொண்டோ, ஜும்மா உரை நிகழ்ந்து  நிகழும்போதோ ஒருவர் பள்ளி வாயிலில் நுழைந்தால் சுருக்கமாக இரண்டு ரக்காயத் தொழுதுவிட்டுத்தான் என்பதிலிருந்தும். நாம் இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

தனியாக தொழுதால் இது போன்ற விதிகள் கிடையாது. விடுபட்ட தொழுகையை முடித்து,அடுத்த தொழுகை நேரம் வந்ததும் அடுத்த தொழுகலாம்.
அல்லது இரண்டு நேரத்தொழுகையை சேர்த்தும் தொழலாம்.

📚ஆதாரம்

📘636. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

📘1217. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால்இ அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

📘1075. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹ்ர் தொழுகையின் நேரம்இ சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமமாக) ஆகிஇ அஸ்ர் நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவு வரை உள்ளது. சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்இ ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும்
தொழுமிடங்களும்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🍓Question no: 135🍓

velli kilamai kulikm bothu kadamayana kulipu pondru dan kulika wenduma?

🍓கேள்வி எண்:135🍓

  வெள்ளி கிழமை குளிக்கும்போது கடமையான குளிப்பு போன்று குளிக்க வேண்டுமா?

☘பதில்☘

  வெள்ளிக் கிழமை குளிப்பது ஒவ்வொரு பருவமடைந்தவர்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடமையான குளிப்பில்லாதபோது எப்பொழுதும் போல குளித்துக் கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமைகளில் குளிப்பது கட்டாயமான ஒன்று. ஆனால் கடமையான குளிப்பு போல குளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
கடமையான குளிப்பு போலவும் குளித்துக்கொள்ளலாம்.
அதுவும் சிறந்ததே.

📚📖ஆதாரங்கள்

📕879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.”
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை

📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள். (ஆதாரம் புகாரி 881)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🌮 Question no: 136 🌮

Rajab month LA pooran  fathiya oothurangaley unmaiya margathil anumathi unda?

🌮 கேள்வி எண்: 136 🌮

    ரஜப் மாதத்தில் பூரான் ஃபாத்தியா ஓதுகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

🍪பதில்🍪

    ஃபாத்திஹா என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும். இது மற்ற மத கலாச்சாரங்களின் வழியே ஊடுறுவி வந்த ஓர் விஷயமாகும். மற்ற மதத்தினர் அவர்கள் கடவுளாக நினைக்கும் சிலைகளுக்கும்,முன்னோர்களுக்கும்,வீட்டில் இறந்தவர்களுக்கும் அவர்களுக்கு பிடித்தமானதை படையலாக வைத்து பூஜித்து வணங்குவார்கள்.
இதன் தாக்கம்தான் நம் இஸ்லாமியர்களிடையே பரவி இப்படியான வழிகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

ஃபாத்திஹா என்ற ஒரு விஷயமே இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. ஆனால் ஓதுபவர்களிடையே கேட்டால் நாங்கள் ‘நபியையும்,நல்லடியார்களையும்,அவுலியாக்களையும் தானே புகழ்கிறோம்’என்று வியாக்கியானம் பேசுவார்கள்.

ஆனால் இப்படி புகழ்வதால் என்ன ஆகும் என்பதை சிந்திக்க வேண்டும். நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகள் நாம் புகழும் இவர்களை உயர்வாக எண்ணி ஒரு காலகட்டத்தில் இவர்களே கடவுளாக ஆகும் சூழல் ஏற்படும். இப்படித்தான் மற்ற மதங்களில் பல கடவுள்கள் உருவாயின.
இப்படி ஒருவரை புகழ்வதற்கு மார்க்கத்தில் எந்தவித அனுமதியும் இல்லை.

இது இஸ்லாத்தின் தூணையே அசைப்பதாக உள்ளது. அனைத்து புகழுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவனே! அவனைத் தவிர நாம் யாரையும் புகழக்கூடாது என்று நமக்கு இஸ்லாம் காட்டித்தந்துள்ளது.

அவர்களை புகழும்போது அதனுனைய அர்த்ததை எடுத்து பார்த்தால் அல்லாஹ்விற்கு இணையான பல சக்திகள் இந்த அடியார்களுக்கு உள்ளதாக இருக்கும்.
இத்தகைய காரியத்தால் நம்மை அறியாமலேயே அல்லாஹ்விற்கு இணை வைத்தவைத்தவர்களாகி விடுவோம். எனவே, இத்தகைய இழி செயல்களிலிருந்து தவிர்ந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோர வேண்டும்.

இது போன்ற பல ஃபாத்திஹாக்கள் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு காரணத்தை கூறி ஓதுகிறார்கள்.

இது புதிதாக புகுத்தப்பட்டவையாகும். ரஜப் மாதத்தில் பூரான் ஃபாத்திஹா மட்டுமல்ல,வேறு எந்த ஃபாத்திஹா ஓதுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. புதிதாக புகுத்தப்பட்டவை அனைத்தும் பித்அத் ஆகும். இத்தகைய செயல்கள் யாவும் நரகத்திற்கு அழைத்துச்செல்வதாகும்.

எனவே,இப்படி இல்லாத ஒன்றை நாம் செய்யாமல் நரகத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்

📚📖ஆதாரங்கள்

📗இறைத்தூதர்களாகவே இருந் தாலும் வரம்புமீறிப் புகழ்வது பாவம் என்று மார்க்கம் எச்சரித்துள்ளது.

“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ் வின் அடியார்’ என்றும் “அல்லாஹ் வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 3445

📗அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற் பட்டது” என்று பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும், எவரது பிறப்புக் காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி)

நூல்: புகாரி 1043

📗உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. எனறாலும், அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: அஹ்மது 12068

📗”தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ, அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத் 4552

📗’நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்). 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🕋Question no: 137🕋

  Umra seibavargal  7 umra varai seyyalaam endru koorugiraargal.
Than kudumbathinargalukkaaga umra seidhen ena nabi(sal) avargalukku seidhen endrum koorugiraargal.
Idharkku marakkama sollum vilakkam enna?

🕋கேள்வி எண்:137🕋

    உம்ரா செய்பவர்கள் 7 உம்ரா வரை செய்யலாம் என கூறுகிறார்கள்
தன் குடுப்பத்தார்களுக்கு உம்ரா செய்தேன் என கூறுகிறார்கள் நபி ஸல் அவர்களுக்கு உம்ரா செய்தேன் என்றும் செய்கிறார்கள்.
இதுபோல் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளதா விளக்கம் தரவும்

🕋பதில்🕋

இஸ்லாமிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும்.
ஆனால் உம்ரா செய்வது நஃபீலான வணக்க வழிபாடாகும்.

நஃபீலான வணக்க வழிபாடுகள் நமக்கு அல்லாஹ்வின் மேல் அதிகப்பிடிப்பு ஏற்படுத்துவதற்காகவும் நமக்கு இஸ்லாத்தில் அதிக ஆர்வமூட்டுவதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.

ஹஜ் என்பது கட்டாயமாதலால் ஒருவர் பொருள் வசதியும்,உடல் தகுதியும் இருக்கும் நிலையில் அதை நிறைவேற்ற வேண்டும். ஆனால் ஒருவருக்கு நாட்டம் இருந்து போக முடியாத சூழல் உதாரணமாக உடல் பலவீனமாக அல்லது முதுமையின் காரணமாக இருந்தால் அவர்களுடைய பொறுப்புதாரர்கள் இந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.
பெற்றோர் மரணித்திருந்தாலும் பிள்ளைகள் அவர்களுக்கு கடனில்லாமல் இருக்கும் பட்சத்தில் ஹஜ் செய்யலாம்.
இதிலிருந்து ஒருவருக்காக மற்றொருவர் ஹஜ் செய்யலாம் என அறிந்து கொள்ளலாம்.

அதேபோல்தான் பொருள் வசதி இருந்து கடன் எதுவும் இல்லாத நிலையில் ஒருவர் உம்ரா செய்ய நாடுகிறார் ஆனால் அவரின் உடல்நிலை காரணமாக அவருக்கு பயணிக்க முடியாத சூழல் இருந்தால் அவருடைய பொறுப்பாளர்கள் அவருக்காக உம்ரா செய்யலாம்.

ஆனால் மரணித்த ஒருவருக்கு உம்ரா செய்வது அவசியம் இல்லை. ஏனெனில் உம்ரா என்பது கட்டாய கடமையான வணக்க வழிபாடு கிடையாது.

மரணித்தவர்களுக்காக அல்லது இயலாதவர்களுக்காக ஹஜ்,உம்ரா தொடர்ச்சியாக செய்யலாம். ஆனால் மரணித்தவருக்கு உம்ரா மட்டும் செய்வதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது.

  மேற்கூறியது போல் கடமையாக இருக்கும் நோன்பு,ஹஜ்ஜை மற்றவர்களுக்காக செய்யலாம் என்றும், உம்ரா உயிருடன் இருந்து செய்ய முடியாதவர்களுக்கு செய்யலாம் என்றும், மரணித்தவருக்கு உம்ரா செய்ய தேவையில்லை என்றும், உம்ரா எவ்வளவு முறை வேண்டுமானால் செய்யலாம் என்றும் விளங்கிக் கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்

📙1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது ”கஸ்அம்” எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கிஇ ”இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள்இ ”ஆம்!” என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 25. ஹஜ்

📙1778. கதாதா(ரஹ்) அறிவித்தார்.
”நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?” என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்க அவர்இ ”நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில்இ இணைவைப்போர் தடுத்தபோது செய்யச் சென்றது; இணைவைப்போருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படிஇ அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது; அடுத்து ”ஜிர்இர்ரானா” என்ற இடத்திலிருந்து ஒரு போரின்… அது ஹுனைன் போர் என்று கருதுகிறேன்.. கனீமத்தைப் பங்கிட்ட பொழுது செய்தது; (நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்கள்!)” பிறகு ”எத்தனை ஹஜ் செய்திருக்கிறார்கள்?” என்று நான் கேட்டதற்குஇ ”ஒரு ஹஜ்தான்!” என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 26. உம்ரா

📙1853 1854. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின்போது வந்துஇ ”இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் ஹஜ் எனும் கடமை என் தந்தைக்கு விதியாகிவிட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ”ஆம்” என்றனர்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 28. (இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

📙புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். அப்பெண்மணி, “என் தாயார்மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். அப்பெண்மணி, “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📙அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ் செய்துகொள். உம்ராவும் செய்துகொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி (852)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🕌Question no: 138🕌

thozugayyil sujudh seyyum murayay vilakkavum.pengalukku

🕌கேள்வி எண்:138🕌

தொழுகையில் பெண்களுக்கான சஜ்தா செய்யும் முறையை விளக்கவும்.

🕌பதில்🕌

   தொழுகை முறையை பொறுத்தவரை ஆண்களுக்கு,பெண்களுக்கு என்று தனித் தனி சட்டம் கிடையாது. அனைவருக்கும் ஒரே முறைமைதான்.

ஸஜ்தாவை பூரணமாக நிதானமாக நிறைவேற்ற வேண்டும்.

தன் முட்டுக்கால்களை வைப்பதற்கு முன் கைகளை முதலில் வைக்க வேண்டும்.

ஸஜ்தாவின் போது தன் கால் விரல்கள் கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும்.

ஸஜ்தாவின் போது தன் உள்ளங்கைகளை வைத்து முழங்கைகளை உயர்த்த வேண்டும்.

தொடையுடன் வயிற்றை சேர்க்கக்கூடாது.

கைவிரல்களை அதிகம் விரிக்காலும்,அதிகம் சேர்க்காமலும் நடுநிலையாக வைக்க வேண்டும்.

முதுகுத்தண்டை நிலையாக வைக்க வேண்டும்.

📚📖ஆதாரங்கள்

📔    திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியபோது, இறைவனின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:அஹ்மத்

📙இரு பாதங்கள், இரு முட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய சமயம் நெற்றையைக் குறிப்பிடும்போது தமது கையை மூக்கின் மீது வைத்து சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ  புகாரி, முஸ்லிம்

📙   “உங்களில் ஒருவர் சஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம். தனது முட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

📙 நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஸுஜுது செய்யும்போது தங்கள் கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

 📙 “நீ ஸஜ்தா செய்யும்போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக்கொள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: பராஃபின் ஆஸிப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

 📙 நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தா செய்யும்போது தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் சஜ்தா செய்வார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

 📙  ஸஜ்தாவில் நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

📙ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாத ஒருவரை நபி صلى الله عليه وسلم கண்டபோது, “முஸ்லிம்களே எவர் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தம் முதுகத் தண்டை நிலைப்படுத்தவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை” என்றார்கள். 

அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🕌Question no:139🕌

    Oru murai uloo seiydhaal oru thozhugai mattum than thozha mudiyumaa? Uloo muyriyavillai endraal irandu thozhugaikalai thozhalaamaa? udhaarathirkku mahribkku seyyum uloovil ishaa thozha mudiyumaa?

🕌கேள்வி எண்:139🕌

ஒரு முறை வுழு செய்தால் ஒரு தொழுகை மட்டுமா தொழ முடியும்.வுழு முறியவில்லையென்றால் இரண்டு தொழுகைகளை துழலாமா?
உதாரணமாக மஹ்ரிபிற்கு செய்யப்படும் வுழுவில் இஷா தொழ முடியுமா?

🕌பதில்🕌

  ஒரு தொழுகைக்கு உளூ செய்த நிலையில் உளூ முறியாமல் இருந்தால் தாராளமாக அடுத்த நேரத் தொழுகையை தொழுது கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்:

📘214. ”நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூச் செய்வார்கள்” என அனஸ்(ரலி) கூறியபோதுஇ ”நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?” என அனஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்குஇ ”உளூவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது” என்று அனஸ்(ரலி) கூறினார்” அம்ர் இப்னு ஆமிர் அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

📘183. ”நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள்இ மீண்டும் இரண்டு ரக்அத்துகள்இ இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

📘209. ”கைபர் போர் நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் பயண உணவைக் கொண்டு வரும் படிக் கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றபோது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என ஸுவைது இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

📘210. ”நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

🏡Question no:140🏡

pengal vetta velihalil thoogalama.
Athavathu vetin pinpuram mell pakkam thurapaha ullathu matra pakam anaithu moodapattullathu.mell pakkam thirapaha ullathal pengal ange thoogalama?
Melu athae thirantha velihalil tholalama?
Miha mukiyamana vishayam mell vidu so ippadi oru qustn ketn.thelivaha padil tharauvm.

🏡கேள்வி எண்:140🏡

  பெண்கள் வெட்ட வெளியில் தொழலாமா?
வீட்டில் மேற்புறம் திறப்பாக உள்ளது. இங்கு தொழலாமா?

🏡பதில்🏡

  அல்லாஹ் பூமி முழுதும் தொழுமிடமாக ஆக்கியுள்ளான். விதிவிலக்காக சில இடங்கள் தொழுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவை கழிப்பிடம்,ஒட்டகத்தொழுவம்,அடக்கஸ்தலம்,ஷிர்க் நடைபெறும் இடம்

தொழ தடை செய்யப்பட்ட இடங்கள் தவிர சுத்தமான அனைத்து இடங்களிலும் தொழுது கொள்ளலாம்.

மொட்டை மாடியில் தூங்குவது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. அதாவது தூங்குவதை பொறுத்தவரை மஹ்ரமமான ஆண்களுடன்,பாதுகாப்பான சூழ்நிலை இருக்குமானால் படுத்துக் கொள்ளலாம்.
அந்நியவர்களின் பார்வை படாத இடம் என்பது உறுதியாக உள்ள நிலையில் தாராளமாக படுத்துக் கொள்ளலாம். ஏனெனில் தூங்கும்போது ஆடை முறை பாதுகாப்பாக இருக்கும் என அறியாது.
ஆனால் தொழும்போது நம் ஆடை முறை பேணுதலாக இருக்கும்.

எனவே, பெண்கள் மேல் மாடியிலும்,வெட்டவெளிகளிலும் தொழுவதற்கு எந்தத் தடையும் கிடையாது.

📚📖ஆதாரங்கள்

📓நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!” (அஹ்மத்)

📓நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர”. (இப்னு ஹிப்பான்)

**********************************

மார்க்க கேள்வி பதில்கள்

🌺Question no: 121🌺

    Magarib neram thalai sivakudathunu solranga? Vettuku agathunu solranga? Ithuku vilakam tharavum.

🌺கேள்வி எண்:121🌺

    மஃரிப் நேரம் தலை சீவக்கூடாதுன்னு சொல்கிறார்கள். வீட்டிற்கு ஆகாது என்று சொல்கிறார்கள். இது உண்மையா? இதற்கு விளக்கம் தரவும்.

🍃பதில்🍃

மஃரிப் நேரம் தலை சீவக்கூடாது என்பதற்கு மார்க்கத்தில் எந்த வித தடையுமில்லை. இது முற்றிலும் மூடநம்பிக்கை ஆகும்.

முன்னோர்கள், மாலை நேரம் தலைசீவக் கூடாது,இரவில் தைக்கக்கூடாது,மாலை நேரம் தூங்கக்கூடாது என்று கூறியது எதனால் என்றால்,
அந்த காலத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தால், அந்த நேரத்தில் தலை சீவும்போது தலை முடி கீழே விழுவது தெரியாது,அது உணவில் விழுந்துவிடுமோ என்றதனால்தான் இருக்கக்கூடும்.
ஊசி தைக்கக்கூடாது என்று கூறுவதும்,ஊசி தொலைந்தால் இரவில் தேடுவது கடினம் என்றுதான்.
மாலையில் உறங்கக்கூடாது என்று கூறுவதும், மாலையில் உறங்கினால் இரவில் உறக்கம் வராது எனும் காரணத்தினால்தான்.,
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் அப்பொழுதுள்ள காரணத்திற்காக கூறியது,அது நாளடைவில் மூடநம்பிக்கையாகி,அது இஸ்லாமியர்களிடையேயும் பரவிவிட்டது.

இது போன்ற விஷயங்களை நாம் நம்பிக்கைக் கொள்ளாமல் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்.

குறானிலும்,ஹதீஸிலும் கூறப்படாத விஷயம் மார்க்கம் கிடையாது. இது உலக விஷயத்துக்காக கூறப்பட்டதாகும். இதை பொருட்படுத்த தேவையில்லை.

எனவே,தலை சீவக்கூடாது,சீவினால் வீட்டிற்கு ஆகாது என்று கூறும் விஷயங்கள் அத்தனையும் உண்மை கிடையாது.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

💵Question no:122💵

    Nam veettil vasadhi kuraindha nilayil ullavar tanadhu noikku vaithiyathirkku kadanaaga keetpadhai jakkathaaga kodukkalaama?
Nonbirkku 10 naatkal mun koduthaal adhu jakaathil serumaa? Nonbirkku kodukka irukkum jakkaathilum kodukkalaama?

💵கேள்வி-122💵

நம் குடும்பத்தில் வசதி குறைந்த நிலையில் உள்ளவர் தனது நோய்க்கு வைத்தியத்திற்க்கு கடனாக கேட்பதை ( சொத்து , நகைகள் )கொடுக்க இருக்கும் ஜக்காத்தை கொடுக்கலாமா? நோன்பிற்க்கு 10 நாட்கள் முன் கொடுத்தால் அது ஜக்காத்தில் சேருமா? நோன்பிற்க்கு கொடுக்க இருக்கும் ஜக்காத்திலும் கொடுக்கலாமா?

💰பதில்💰

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஜக்காத் கொடுப்பதும் ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்திக் கூறும் பெரும்பாலான இடங்களில் எல்லாம் இந்த ஜக்காத்தைப் பற்றியும் மிக மிக வலியுறத்திக் கூறியிருக்கிறான்.

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜக்காத் கொடுக்க மறுத்த கூட்டத்தினரோடு யுத்தப் பிரகடனம் செய்கின்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜக்காத் விளங்குகிறது. எனவே நாம் ஜக்காத்தை ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி கணக்கிட்டு கொடுத்து வருவது அவசியமாகும்.

ஜக்காத்தை வருடத்திற்கொருமுறை கணக்கிட்டு கொடுக்க வேண்டும். அது ரமழான் மாதத்தில் தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தை கணக்கில் எடுத்து அடுத்த வருடம் அந்த மாதம் வருவதற்குள் நம் செல்வதைத் தூய்மை படுத்த வேண்டும்.

இதற்கு ரமழான் மாதத்தை நாம் தேர்ந்தெடுப்பது அந்த மாதத்தில் செய்யும் அமல்கள் பல மடங்கு நன்மையை தரும் என்பதற்காகத்தான்.

ஜகாத் பெறுபவர்கள் பட்டியலில் ஏழைகள் இருப்பதால் தாராளமாக குடும்பத்திலுள்ள வசதி குறைந்தவர்களுக்கு வைத்திய செலவுக்கு கொடுக்கலாம். அது ஜக்காத்தில் சேரும்.
இவர்களுக்கு கொடுப்பது இரண்டு விதத்தில் நன்மை பெற்றுத்தரும். ஒன்று, ஜகாத் கொடுத்த நன்மை.
மற்றொன்று உறவினர்களை அரவணைத்த நன்மை.
ஆனால் இதில் வீட்டில் உள்ள தாய்,தந்தை,சகோதரர்கள் சேராது. அது சதகாவில்தான் சேரும். ஏனெனில் இது இவர்களுக்கு செய்வது கடமை ஆகும்.

அது தவிர மற்ற உறவினர்களுக்கு கொடுப்பது ஜகாத்தில் சேரும். இது எந்த மாதத்திலும் கொடுக்கலாம். நம் எண்ணத்தை அல்லாஹ் அறிவான்.

📚ஆதாரங்கள்:

📕தரித்திரர்களுக்கும்,
ஏழைகளுக்கும்,
தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்,
அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

📕1396. அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. ”என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்” எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) ”இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?” என்றனர். நபி(ஸல்) அவர்கள் ”இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!” (என்று கூறிவிட்டு அவரிடம்.) ”நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

💵Question no; 123💵

   Nonbu bidikka mudiyaadha nilaiyil ullavargal adharkaana jakaathai nam kudumbathinar ezhmaiyaana nilaiyil kodukkalaama?

💵கேள்வி எண் : 123💵

நோன்பு பிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் அதற்கான ஜக்காத்தை நம் குடும்பத்தினர் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாமா?

💰பதில் 💰

  நோன்பு பிடிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள்,அதற்கான தருமத்தை நம் குடும்பத்திலுள்ள ஏழைகளுக்கு கொடுக்கலாம்.

ஆனால்,நாம் தாய்,தந்தை போன்ற நமக்கு கவனிக்க பொறுப்புள்ளவர்களுக்கு கொடுக்கக்கூடாது.
ஏனெனில், நம் பொறுப்பில் உள்ள இவர்களை நாம் கவனிப்பது நம் கடமையாகும்.

மற்ற உறவினர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களுக்கு தாராளமாக நம் பரிகார தருமத்தை கொடுக்கலாம்.

📚👉ஆதாரங்கள்

📗
أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ  ﴿2:184﴾
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

📗
يَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ  ﴿2:215﴾
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”

📗
إِن تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ  ﴿2:271﴾
2:271. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

📗
فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ  ﴿9:5﴾
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

**************************************

💵Question no: 124💵
Oru aanin zakathai ,manaiviyin kudumbam kashtathil irukum batchathil Avargalukku kodukkalama?adhu zakathai seruma?

💵கேள்வி எண்:124💵

ஒரு ஆணின் ஜகாத்தை மனைவியின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்ளுக்கு கொடுக்கலாமா?
அது ஜகாத்தில் சேருமா?

💰பதில் 💰

  கணவருக்கு மனைவியின் குடும்பம்  உறவினர்கள் பட்டியலில்தான் வருவார்கள்.

எனவே,ஒரு ஆண் தனது மனைவியின் குடும்பம் ஏழையாக இருக்கும் பட்சத்தில் ஜகாத்தை அவர்களுக்கு கொடுக்கலாம்.

📚ஆதாரம்

📘புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி…… இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்…. (அல் குர்அன் 2:177)
………………………………………………………..

🕋Question no:125🕋

Ovvoru murai ihraam kattumbodhum ellaikku veliye sendrudhan katta vaendumaa?

🕋கேள்வி எண்:125🕋

ஒவ்வொரு முறை இஹ்ராம் கட்டும்போதும் எல்லைக்கு வெளியே சென்றுதான் கட்ட வேண்டுமா?

🕋பதில்🕋

ஆம். ஒவ்வொரு முறை இஹ்றாம் கட்டும்போதும் எல்லைக்கு வெளியே சென்று தான் கட்ட வேண்டும்.

📚ஆதாரங்கள்:

📙2198 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும்,ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபாவை யும், நஜ்த்வாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலை யும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் “இஹ்ராம்’ கட்டும் எல்லைகளாக நிர்ணயித் தார்கள்.

📙அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும்,ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும்,நஜ்த் வாசிகள் கர்னிலும் “இஹ்ராம்’கட்டுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

✒மேலும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த எல்லைகள், இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இவ்வழியே வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் பொருந்தும்; அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்குள் இருப்பவர், தாம் பயணம் புறப்படும் இடத்திலிருந்தே “இஹ்ராம்’ கட்டிக்கொள்வார். எனவே,மக்காவாசிகள் மக்காவிலிருந்தே “இஹ்ராம்’கட்டிக் கொள்வர்.

📙1787. அஸ்வத்(ரஹ்)இ காஸிம் இப்னு முஹம்மத்(ரஹ்) ஆகியோர் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம்இ ”மக்கள் எல்லோரும் (ஹஜ்இ உம்ரா ஆகிய) இரண்டு வழிபாடுகளுடன் திரும்புகின்றனர்; நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு வழிபாட்டுடன் திரும்புகிறேனே?” எனக் கேட்டார்கள். அவர்களிடம்இ ”நீ சற்றுக் காத்திருந்து. (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு எங்களை இன்ன இடத்தில் வந்து சந்தித்துக் கொள்! ஆனால்இ உம்ராவுக்கான நற்கூலி உன்னுடைய சிரமத்திற்கோஇ பொருட் செலவுக்கோ தக்கவாறே கிடைக்கும்!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 26. உம்ரா

••••••••••••••••••••••••••••••••••••••••••••••

💊Question no:126💊

Oru pen maruthuvar ,aan noyaliyalikku sigichai alikkalama,and oru pen aan maruthuvaridam sigichai eduthukollalama?

💊ஒரு பெண் மருத்துவர் ஆண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா?மற்றும் ஒரு பெண் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கலாமா?

💉பதில்💉

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் மருத்துவரிடம் ஆணும்,ஒரு ஆண் மருத்துவரிடம் பெண்ணும்,தனக்கான சிகிச்சயை வாயால் சொல்லிதான் தீர்வு கண்டுருப்பார்கள். ஏனெனில் அப்பொழுது பெரும்பாலும் இயற்கை முறை வைத்தியம்,மூலிகை வைத்தியம் தான் இருந்தது. இப்பொழுதுள்ளது போல் உடல் பாகங்களை காட்டக்கூடிய ஒரு சூழல் இல்லை.

ஆனால்,இன்றுள்ள பல நோய்கள் நம்முடைய உடல் பாகங்களை காட்டவேண்டிய ஒரு சூழ்நிலையில் உள்ளது.

இந்தெந்த நோய்க்கு இந்தெந்த மருத்துவர்தான் சிறந்த முறையில் மருத்துவம் பார்ப்பார் எனும் சூழ்நிலையில் பெண் மருத்துவரிடம் ஆணும், ஆண் மருத்துவரிடம் பெண்ணும் சிகிச்சைக்கு செல்வது தவறல்ல.ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் போரில் காயமுற்ற ஆண்களுக்கு மருந்திடச் சென்றுள்ளார்கள்.

அல்லாஹ் சில விஷயங்களை ஹராமாக்கி இருந்தாலும்,நிர்பந்தத்தின் அடிப்படையில் அதை செய்வதை மன்னிப்பான் என தன் திருமறையில் கூறியுள்ளான்.

எனவே,நிர்பந்தத்தின் அடிப்படையில் ஒரு ஆண் மருத்துவரிடம் பெண்ணும்,ஒரு பெண் மருத்துவரிடம் ஆணும் செல்வது குற்றமாகாது.

ஒரே இடத்தில் ஆண் மருத்துவரும்,பெண் மருத்துவரும் இருக்கும் சூழ்நிலையில் ஆண்கள் ஆண் மருத்துவரையும்,பெண்கள் பெண் மருத்துவரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
இயன்றவரை நம் பகுதியில் நல்ல மருத்துவர்கள் இருந்தால் அதே பாலின மருத்துவரை அணுகுதல் நல்லது. ஆனால் நல்ல மருத்துவர்கள் இல்லாத சூழலில் நோயை குணமாக்கும் எதிர்பாலின மருத்துவரிடம் செல்வது குற்றமல்ல.

📚ஆதாரங்கள்:

📕”நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும் உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும் பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்விடம் உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும் நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் தியானம் செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் படுத்தி யிருக்கிறான்.” (அல்குர்ஆன் 33:35)

📕5678. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்

📕5679. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார்
நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக்கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்துகொண்டும்இ கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு மருந்திட்டு அவர்க)ளையும் மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.3
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்

📕5652. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்
இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம்இ ”சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான்இ ”ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள்இ இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்துஇ ”நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலம்) உடல் திறந்து கொள்கிறது. எனவேஇ எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி(ஸல்) அவர்கள்இ ”நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்கள். இந்தப் பெண்மணிஇ ”நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால்இ (வலிப்பு வரும்போது ஆடை விலம்) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
…அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்
நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 75. நோயாளிகள்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🐔Question no:127🐔

Kulandhaigalukkaga bommai varayalama?alladhu seiyyalama?kulandhaigalai saapavaikka image il ulladhu pol seivadhu thavara

🐔கேள்வி எண்:127🐔

குழந்தைகளுக்கு பொம்மை வரையலாமா? அல்லது செய்யலாமா? குழந்தைகளை சாப்பிடவைக்க உருவம்போல் உணவை அலங்கரித்து கொடுக்கலாமா?

🐤பதில்🐤

   உருவம் வரைவதோ,செய்வதோ பொறுத்தவரை அதற்கு நாம் கொடுக்கும் மதிப்பை பொறுத்துதான் முடிவெடுக்க முடியும்.

உதாரணமாக, ஒரு விளையாட்டு பொம்மை பூனை,குதிரை போன்ற உருவங்களில் இருந்தாலும் அதை நாம் மதிப்பு கொடுக்க மாட்டோம். அது மதிப்பில்லாத ஒரு பொருளாகத்தான் கருதுவோம். இது போன்ற மதிப்பில்லாத நிலையில் உருவபொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பதில் தவறல்ல. ஏனெனில் இதற்கு ஆதாரமாக நபி(ஸல்) அவர்கள் வீட்டில் உருவப்படம் வரைந்த திரைச்சீலை தொங்கும்போது அதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அப்புறப்படுத்த சொன்னார்கள். ஆயிஷா (ரலி)அவர்கள் அதை கிழித்து தலையணை உறை தைத்தார்கள். அதை பார்த்த நபியவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் அந்த தலையணையில் தலை சாய்த்தார்கள். எனவே இதிலிருந்து மதிப்பளிக்கும் ஒரு இடத்தில் உருவம் இருக்கக்கூடாது எனவும்,மதிப்பில்லா ஒரு இடத்தில் உருவம்  இருப்பது தவறல்ல எனவும் அறிந்து கொள்ளலாம்.

ஆனாலும்,நாம் உருவ பொம்மைகளை கைகளால் செய்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், நாம் நம் கைகளால் செய்யும் உருவங்களுக்கு நாளை மறுமையில் அல்லாஹ் உயிர் கொடுக்க சொல்லுவான். எனவே,உருவங்கள் செய்யாமல் பூக்கள்,வீடு போன்ற உருவமில்லா பொம்மைகளை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அதுபோல்தான் உணவு என்பதும் ஒரு முக்கியமான மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் ஒரு பொருள். இதிலும் உருவ பொம்மைகளை குழந்தைகளை கவர்வதற்காக செய்து கொடுக்கக்கூடாது. அவ்வாறு குழந்தைகளை கவரும் விதமாக செய்ய நினைத்தால் எழுத்துக்கள்,மலர்கள்,பல வண்ணங்கள் இப்படி செய்யலாமே தவிர உருவபொம்மைகள் உணவில் செய்யக்கூடாது.

கடைகளில் கிடைக்கும் பிஸ்கட்டுகள்,மிட்டாய் வகைகளில் ஆடு,கோழி போன்ற உருவம் இருக்கும். அதை பொருட்படுத்தத் தேவையில்லை, அதை சாப்பிடுவதில் தவறல்ல. ஏனெனில் அதை மதிக்கவோ,பெருமையாகவோ நினைக்க மாட்டோம்.
ஆனால்,உணவுப் பொருளை உருவமாக அலங்கரித்து உண்பது கூடாது.

ஆனால்,கல்விக்காக அல்லது (project) ஏதாவது நிர்பந்த அடிப்படையில் வரைய வேண்டிய அல்லது செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவ்வாறு செய்வது குற்றமல்ல. ஆனாலும் வரைந்த,செய்த உருவத்திற்கு மதிப்பளித்து அதை ஒரு முக்கியமாக கருதுவது கூடாது. கல்விக்கான அந்த தேவை முடிந்தவுடன் அதை மதிப்பளிக்காது அப்புறப்படுத்தி விடவேண்டும்.
ஆதாரத்திற்காக வைப்பது தவறல்ல.

📚ஆதாரங்கள்:

📘2225. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்துஇ ”அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்” எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி)இ ”நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ”யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்” என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி)இ ”உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!” என்றார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்

📘2086. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்:
இரத்தம் குத்திஇ உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகுஇ அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்கஇ அவர்கள் ”நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்திஇ உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும்இ பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும்இ உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்

📘5954. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டுஇ ”மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்” என்று கூறினார்கள்.
பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். 133
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

📘4279. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது” என்று கூறினார்கள்.
மேலும்இ எங்களிடம் குஞ்சம் வைத்த துணியொன்றும் இருந்தது. அதன் கரைவேலைப்பாடுகள் பட்டினால் ஆனவை என்றே நாங்கள் கூறிவந்தோம். அதை நாங்கள் அணிந்துவந்தோம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

===============================

🕋Question no:128🕋

kabathullah uruwamitta virippay uranga payanpaduthhalama?adhu kabathullahway awamadhippadhu pol ahuma?

🕋கேள்வி எண்:128🕋

   கஃபா படம் போட்ட விரிப்பை உறங்க பயன்படுத்தலாமா? அது கஃபாவை அவமதிப்பதாகுமா?

🕋பதில்🕋

  முஸல்லா பொதுவாக தொழுகைக்காக பயன்படுத்துகிறோம். இது எதற்காகவெனில் நாம் தொழும் இடம் தூய்மையானதாக இருக்குமா என அறியப்படாத நிலையில் இந்த விரிப்பு தூய்மையை பேண பயன்படும் என்பதற்காகத்தான் இந்த முஸல்லா பயன்படுத்தப் படுகிறது.

இதில் கஃபா படம் பெரும்பாலான முஸல்லாக்களில் வரையப்படுகிறது. இந்த படம் வரைந்த விரிப்புகளுக்கு தனிப்பட்ட மகத்துவம் உள்ளது என்பதில்லை. இதற்கு மகத்துவம் உள்ளது எனில் நம்மில் பலர் மாற்றுமதத்தவர் செய்யும் பல யுக்திகளை கையாளக்கூடும்.

எனினும், இது நம் புனிதப்பள்ளி ஆகும். அதனால் தூய்மையை நாம் பேண வேண்டும்.
இது அழுக்கான நிலையில் நாம் குளியறையில் துவைப்பதற்கு எடுத்துச்செல்லும் சூழல் ஏற்படும். எனவே,இது போன்ற விரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.

இந்த விரிப்பில் ஒரு அருள்,பரக்கத் இருப்பதாக நினைப்பது தவறு.
ஆனாலும் கால் மிதிபடும் ஒரு சூழலில் இதை விரிப்பாகவோ,போர்வையாகவோ உபயோகப்படுத்தாமல் இருப்பதுதான் சிறந்தது.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இப்படியான விரிப்புகள் உறங்குவதற்கு பயன்படுத்தியதாக எந்த செய்தியும் இல்லை. ஆனால் இது புனிதப்பள்ளி ஆதலால் இதன் கண்ணியத்தை நாம் காப்பாற்ற வேண்டும்.
ஒரு விஷயத்தில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதற்கு போதுமான ஆதாரம் இல்லையெனில் அதை தவிர்ப்பதே சிறந்தது.

சில நேரங்களில், கஃபா படம் மட்டுமின்றி சில குறான் ஆயத்துக்களும் அச்சிடப்பட்டிருக்கும். இது நிச்சயமாக இவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்துவது கூடாது.
நம்முடைய விரிப்புகளில் வெறும் கஃபா படம் மட்டுமே இருந்தாலும்,நாளடைவில் குறான் ஆயத்துக்கள் பொறிக்கப்பட்ட கஃபா விரிப்புகளும் நம் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது நாம் அறியாமலேயெ பாவம் செய்வதற்கு அழைத்துச் செல்வதாகி விடும்.

எனவே, இது போன்ற விரிப்புகளை தவிர்த்தல் நல்லது.

📚ஆதாரங்கள்:

📙1739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போதுஇ ”மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்டார்கள். மக்கள் ”புனிதமிக்க தினம்” என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ”இது எந்த நகரம்?” எனக் கேட்டதும் மக்கள் ”புனிதமிக்க நகரம்” என்றனர். பிறகு அவர்கள் ”இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் ”புனிதமிக்க மாதம்!” என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள்இ ”நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில்இ உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!” எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்திஇ ”இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?” என்றும் கூறினார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.
பின்னர் ”இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ”நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்” என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 25. ஹஜ்

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
👩🏻 Question no: 129 👩🏻

Pengal thirantha velihalil padukalma athavathu oru family mell vetil vadakaihu irkranga avarhal vetin pinpuram open Naha ullathu mell side open concrete,roof ipadi ethum podala but maths side maraika pattullathu avarhal antha idangalil thoogalama? Vetin ull pakkam mihauvm heat athanal ivaru seiyalama?thelivana padil tharauvm

👩🏻கேள்வி எண்: 129👩🏻

பெண்கள் வீட்டின் மேல்தளத்தில் திறந்த வெளியில் படுக்க இயலுமா? மேல் தளத்தில் வாடகைதாரர்கள் குடியுள்ளார்கள். அந்த வீட்டு பின்புறம் திறந்தவெளி உள்ளது. ஆனால் சுற்றுச்சுவர் உள்ளது.
வீட்டில் சூடு தாங்கவில்லை ஆதலால் அங்கு உறங்க நினைக்கிறோம்?
என்ன செய்யலாம் என தாங்கள் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

🙎🏻பதில்🙎🏻

   பெண்கள் திறந்த வெளியில் படுப்பதை பார்ப்பதற்கு முன் ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலே வாடகைதாரர்கள் குடியிருக்கும்போது அவர்கள் நம்மை கவனிக்கும் சூழல் உள்ளதா? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பார்க்கும் சூழல் இருந்தால் படுப்பதை தவிர்க்க  வேண்டும். அவ்வாறு இல்லை எனும்பட்சத்தில் சுற்றுச்சுவர் இருப்பதால் திறந்தவெளியில்  படுக்கலாம்.

எனினும் தனியாக படுக்காமல் மஹ்ரமான துணையுடன் படுக்கவேண்டும்.

வீட்டில் அதிக சூட்டின் காரணமாக படுப்பதில் தவறில்லை. ஆனால் கண்டிப்பாக தக்க பாதுகாப்புடன் படுக்க வேண்டும்.

📚ஆதாரங்கள்:

📗
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏ 
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 24:59)

📗5624. ஜாபிர்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இ ”நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌺Question no:130🌺

  Maadhavidaayin podhu mudhal 3 naatkalil kulippadhu koodaadhu endru koorugiraargal…idhai patri maarkathil enna koorappattulladhu?

🌺கேள்வி எண்:130🌺
மாதவிடாய் போது முதல் 3 நாட்களில் குளிப்பது கூடாது என்று கூறிகிறார்கள்…. இதை பற்றி மார்க்கத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

🍃பதில்🍃

    மாதவிடாய் ஏற்படும் போது முதல் மூன்று நாட்கள் குளிக்கக்கூடாது என்பதற்கு மார்க்கத்தில் எந்த வித ஆதாரமும் கிடையாது. இது மூடநம்பிக்கை ஆகும்.

   இந்த நிலையில் செய்யக்கூடாத விஷயங்கள் மார்க்கத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மாதவிடாயின் போது தொழுவது, நோன்பு வைப்பது, திருமணமானவர்கள் மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது ஆகியவை.. ஆனால் குளிப்பதற்கு எந்த தடையும் இல்லை. தாராளமாக குளிக்கலாம்.

📚ஆதாரம்:

📕294. ”நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ”ஸரிஃப்” என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள்இ நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்துஇ ”உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்!” என்றேன். ”இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்” என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ”குர்பானி” கொடுத்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மார்க்க கேள்வி பதில்கள்.

🕌Question no: 111🕌

Ishrak thozhugai, avvaabeen thozhugai ku aadhaaram iruka.. if yes means, thozhum murai enna?

🕌கேள்வி:111🕌

இஷ்ராக் தொழுகை, அவ்வாபீன் தொழுகைக்கு ஆதாரம் உள்ளதா?
அப்படி உள்ளதெனில் தொழும் முறை என்ன?

☀பதில்☀

✒லுஹா தொழுகை

அவ்வாபீன் தொழுகை என்பது நபிமொழிகளில் லுஹாத் தொழுகையே குறிப்பிடப்படுகிறது. அவ்வாபீன் தொழுகையும் லுஹாத் தொழுகையும் ஒன்றே. எனவே லுஹாத் தொழுகை தொடர்பாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.

லுஹா என்றால் முற்பகல் என்று பொருளாகும்.எனவே,
முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்.

📔இரண்டு ரக்அத்கள்

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும்,லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும்,உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 1981, முஸ்லிம் 1303

📔நான்கு ரக்அத்கள்

 “ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள்

தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப் பேற்கிறேன்”என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),

நூல்கள்: திர்மிதீ 438, அஹ்மத்26208

📔எட்டு ரக்அத்துகள்

“நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும்,ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்” என்று உம்மு ஹானி குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா

நூல்கள்: புகாரீ 1103, முஸ்லிம் 562

✒இஷ்ராக் தொழுகை

ஃபஜ்ர் தொழுகை முடித்தவுடன்,சூரியன் முழுமையாக உதித்தவுடன் தொழும் தொழுகை இஷ்ராக் தொழுகை எனப்படும்.ஆனால் இந்த தொழுகைக்கு நேரிடையான ஆதாரம் இல்லை.

காலை என்றால் அரபியில் இஷ்ராக் என்று பொருள்.
வசனம் 3:18 இல் காலை (இஷ்ராக்) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு தான் இந்த தொழுகை உண்டு என்று கூறுகின்றனர்.

பெரும்பாலான அறிஞர்கள் இதுவும் லுஹா தொழுகையைத் தான் குறிக்கும் என்று சொல்கிறார்கள்.

மேலும்,இஷ்ராக் தொழுகையை தொழுதால் ஹஜ்,உம்ரா செய்த நன்மை கிடைக்கும் எனவும் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இது பலஹீனமானது எனவும் பலமானது எனவும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. எனவே,நம் அறிவிற்கு எட்டியதின் படி தொழுதுகொள்ளலாம்.

இது கடமையான தொழுகை இல்லையாதலால் மேற்கூறியவற்றை அடிப்படையாக வைத்து விரும்பினால் தொழுது கொள்ளலாம்.

📚📖ஆதாரம்:

📔

إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ  ﴿38:18﴾

38:18. நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.

***********************************

💨Question no: 112 💨

Nabi(sal) avargal mihraaj payanathil enthendha nabimaargalai sandhithaargal? Mihraj payanathil nabi (sal) avargal meekayil(alai) avargalai paarthadhagavum naragam padaikkappattadhilirundhu avargal sirikavey illai endru jibrayeel (alai) nabi (sal) avargalidam koorum hadees unmaiya?

💨கேள்வி: 112💨

112) நபி ஸல் அவர்கள் மிஃராஜ் பயணத்தில் எந்தெந்த நபிமார்களை சந்தித்தார்கள்? மிஃராஜ் பயணத்தில் நபி ஸல் அவர்கள் மீக்காயில் (அலை )அவர்களை பார்த்ததாகவும் நரகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர்கள் சிரிக்கவே இல்லை என்று ஜிப்ரீல் (அலை) நபி ஸல் அவர்களிடம் கூறியதாக கூறும் ஹதீஸ் உண்மையா ?

💥பதில்💥

  ✒நபி(ஸல்)அவர்கள் மிஃராஜ் பயணத்தில் சந்தித்த நபிமார்கள்

ஆதம்(அலை)
இப்ராஹிம் (அலை)
இத்ரீஸ்(அலை)
மூஸா(அலை)
ஹாரூன்(அலை)
யஹ்யா(அலை)
யூசுஃப்(அலை)
ஈஸா(அலை)

🚫மிஃராஜ் பயணத்தில் நபி (ஸல்)அவர்கள் மீக்காயில்(அலை) அவர்களை பார்த்ததாகவும்,நரகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர்கள் சிரிக்கவில்லை என்று ஜிப்ரீல்(அலை) நபி(ஸல்)அவர்களிடம் கூறியதாக கூறும் ஹதீஸ் ஆதாரமற்றதாகும்.

📚📖ஆதாரங்கள்:

📗மூஸா (அலை) அவர்களைக் காணுதல்

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மண் குன்றுக்கு அருகே மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தம்முடைய கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 4379, அஹ்மத் 12046, நஸயீ 1613

📗என்னை நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் சோந்த மனிதரைப் போன்று நல்ல தோற்றமும், நடுத்தர உயரமும் உள்ள மனிதராக இருந்தார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களில் கிட்டத்தட்ட உர்வா பின் மஸ்ஊத் சகபீயைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் உங்களுடைய தோழரை (முஹம்மத்) போன்றிருந்தார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 251)

📗நான் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா (அலை) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு நிறமுடைய உயரமான சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும்) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. “அவரை (மூஸாவை) சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்” (அல்குர்ஆன் 32:23)

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்கள்: புகாரி 3239, முஸ்ம் 239)

📗ஜிப்ரீல் (அலை) என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள (முதல்) வானத்தை அடைந்த போது, வானத்தின் காவலரிடம், “திறங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “யார் அது?” என்று கேட்டார். “இதோ ஜிப்ரீல்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார். அதற்கு “உங்களுடன் வேறெவராவது இருக்கின்றாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “என்னுடன் முஹம்மது இருக்கின்றார்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரச் சொல்) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், திறங்கள்” என்றார்.

(முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் மேலே சென்ற போது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தனது வலப்பக்கம் பார்க்கும் போது சிரித்தார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து), “நல்ல இறைத் தூதரே! வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான், “ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன். அவர், “இவர் ஆதம் (அலை) அவர்கள். அவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப்பக்கம் இருப்பவர் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவே தான் அவர் வலப்பக்கத்திலுள்ள தம் மக்களைப் பார்க்கும் போது சிரிக்கின்றார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுகின்றார்” என்று பதிலளித்தார்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 3342)

📗பிறகு நாங்கள் இரண்டாம் வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.

பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், “சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.

பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.

நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஃஸஆ (ரலி),

நூல்: புகாரி 3207)

📗”அவரை உயரமான தகுதிக்கு உயர்த்தினோம்” என்ற (19:57) வசனத்தை ஓதினேன்.

(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)

📗பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடத்தில் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.

நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். “நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், “இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திருந்து சொர்க்கம் புகுவார்கள்” என்று பதிலளித்தார்.

பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.

நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், “மகனும், நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது.

(புகாரி 3207)

📗இப்ராஹீம் (அலை) அவர்கள் பைத்துல் மஃமூரில் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.

(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)

📗سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌  اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ 

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:1)

குறிப்பு* ஆடியோவில் ரக்காயத்திற்கு பதில் வக்த்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை சரியாக எடுத்துக்கொள்ளவும்.
ஜஸாக்கல்லா ஹைரன்

************************************

😴Question no; 113😴

vafathanavargal(mouthanavargal) kanavil varakudathu endru koorugirargal ithu unmaya?

😴கேள்வி எண்:113😴

   மரணித்தவர் கனவில் வரக்கூடாது என்று கூறிகிறார்கள், இது உண்மையா?

🌀பதில்🌀

✒கனவில் மரணித்தவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் மார்க்கம் சொல்லித்தரவில்லை. இது முழுக்க முழுக்க மூடனம்பிக்கயே ஆகும்.

ஏற்கனவே கேள்வி எண் 76 இல் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளோம். அதை படித்து தெளிவு பெற்றால் இது போன்ற சந்தேகங்கள் வராது. 👇👇

    🌀 கனவுகள் வருவது என்பது உண்மைதான்,.

இது விஞ்ஞான அடிப்படையில் நிரூபித்தை பார்ப்போம்.,
தூக்கம் நான்கு வகைப்படும்.

1)விழிப்பு நிலை(wakefulness)

  இது தூங்கி இருப்போம் ஆனால் வெளியில் நடப்பதை உணரமுடியும்.

2)அதிவேக விழி அசைவுகள் இல்லாத தூக்க நிலை(Non rem sleep)

      இது தூக்கத்தின் ஆரம்ப நிலை

3) அதிவேக விழி அசைவு தூக்கநிலை(Rem sleep)

     இது மிக ஆழ்ந்த தூக்கத்திற்கும்,தூக்கத்தின் ஆரம்ப நிலைக்கும் இடைப்பட்ட நிலை ஆகும்.

4) ஆழ்ந்த தூக்கம். (Deep sleep)

   இது நினைவுகளற்ற நிலை

பொதுவாக கனவுகள் மூன்றாம் நிலை தூக்கத்தில்(rem sleep)தான் வருகிறது.

கனவுகள் இஸ்லாமிய பார்வையில் பார்ப்போம்.

கனவுகள் மூன்று வகைப்படும்.
1) நல்ல கனவு
2) கெட்ட கனவு
3) உள்ளத்தின் எண்ண ஓட்டம்.

பொதுவாக மூன்றாம் நிலை கனவுதான் அதிகம் மனிதர்களுக்கு வருவது.
இதில் நமக்கு ஏற்கனவே நடந்த விஷயங்களை தழுவி , நமக்கு ஆழ்மனது நினைவுகள், நம்முடைய ஆசைகள், கற்பனையான விஷயங்கள்,சில கதைகளை ஒட்டிய நிகழ்வுகள் தோன்றும்.
   இதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.

தெளிவாக வரும் நல்லகனவுகள் இறைவனிடமிருந்து வருவதாகும்.,இதை நாம் விரும்பினால் நெருங்கியவர்களிடம் கூறலாம்,கூறாமலும் விட்டு விடலாம்,இது நம்முடைய விருப்பம்.

ஆனால்,கெட்ட கனவுகள் நிச்சயமாக ஷைத்தானின் புறத்திலிருந்து வருவதாகும்.,இதை யாரிடமும் கூறாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டு இடதுபுறம் மூன்று முறை துப்ப வேண்டும்.

இதிலும்,நபி மார்களுக்கு வரும் கனவு வஹியாகும்.
இறுதி நபி(ஸல்) அவர்களோடு அது முற்றுப்பெற்று விட்டது.
நமக்கு வரும் கனவு அப்படிப்பட்டதல்ல.
நபி மார்களுக்கு வரும் கனவு தூக்கத்தின் முதல் இரண்டு நிலையில் வந்துள்ளது.
நமக்கு வரும் கனவு தூக்கத்தின் மூன்றாம் நிலையாகும்.
தூக்கத்தின் நான்காம் நிலை மரண நிலை.,இதில் கனவு வர வாய்ப்பு குறைவு.

மரணித்தவர் கனவில் வருவது நம் ஆழ்மனதிலுள்ள அவர்களின் நினைவுகள்தான்,அவர்கள் நேரிடையாக வர முடியாது. அவர்கள் மரணித்தவுடனே, அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே திரையிட்டு விடுகிறான்.
அவர்கள் வருவது உண்மையெனில் கப்ரில் அவர்கள் எப்படி உள்ளார்கள் என கூறியிருப்பார்களல்லவா? இது சாத்தியப்படாத ஒன்றாகும்.

அதேபோல் காணாத கனவை பொய்யாக கூறக்கூடாது,அப்படி கூறினால் இதைப்பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவோம்.

📖📚ஆதாரங்கள்

📗’கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4200

📗நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் (இறைவனிடமிருந்து தூதர்களுக்கு கிடைக்கும் தூதுச் செய்தியின்) நாற்பத்தி ஆறு பங்கில் ஒரு பங்காகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 6987, 6988, 6989, 6983, 6994

📗‘நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். எனவே ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தமக்கு மிகவும் விருப்பமானவரைத் தவிர யாருக்கும் அதைத் தெரிவிக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல்: புகாரி 7044

📗’தமக்கு விருப்பமான கனவை ஒருவர் கண்டால் அவர் விரும்பினால் மற்றவருக்குச் சொல்லட்டும்’ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 8766

📗நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் ‘ஒருவரது கனவில் ஷைத்தான் விளையாடினால் அதை யாருக்கும் கூற வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4212

📗‘காணாத கனவைக் கண்டதாக யாரேனும் கூறினால் (மறுமையில்) இரண்டு கோதுமைகளுக்கிடையே முடிச்சுப் போட்டு இணைக்குமாறு அவன் கட்டாயப்படுத்தப் படுவான். அவனால் அதை ஒருக்காலும் செய்ய முடியாது’ எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7042

📗அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:60)

📗அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! (அல்குர்ஆன்20:38)

📗
لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ  ﴿23:100﴾

23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

📗6993. “கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்., என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:  “நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)“ என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 91. கனவுக்கு விளக்கமளித்தல்

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🔲Question no:114🔲

Tholuwum bothu munnadi thadupu kandipa podanum but athu ethukaga podrom antha suthra wudaya mukkiyathuvam enna athu podalana enna? Vilakam thewai

🔲கேள்வி எண்:114🔲

  தொழுகையின் போது தடுப்பு வைக்க வேண்டும் ஆனால் அது எதற்காக சுத்ரா தடுப்பு வைக்க வேண்டும்? அதனுடைய முக்கியத்துவம் என்ன?

🔳பதில்🔳

   சுத்ரா என்பது தொழுகையின் போது முன்னே வைக்கும் தடுப்பு ஆகும்.

  நபி(ஸல்) காலத்தில் தொழுகைக்கான மஸ்ஜிதுகள் இப்போதுள்ள இருப்பது போல் ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இல்லை. அவர்களுடைய காலத்தில் போர்கள் அதிகம் நடந்தது அவர் அதிகமாக இஸ்லாத்தின் பணிக்காக வெளியில் இருந்த கால கட்டம். அந்த சமயங்களில் தொழுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது.

இடையில் பல மிருகங்கள்,மனிதர்கள் நடமாடும் ஒரு சூழல் இருந்தது. இதனால் தொழுபவர்களுக்கு ஒரு கவனமின்மை ஏற்பட்டது. இந்த கவனமின்மையை தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் சுத்ராவை காட்டித்தந்தார்கள்.

ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட மஸ்ஜிதுகளில் இது தேவையில்லை, ஆனால் குறுக்கீடுகள் இருக்கும் ஒரு சூழ்நிலையில், அது வீடாகவோ,வெளியிடங்களிலோ நிச்சயமாக சுத்ரா தடுப்பு அவசியமாகும்.

ஏனெனில், தொழுகையாளி தொழும்போது குறுக்கெ மற்றவர்கள் சென்றால் இது மிகப்பெரிய பாவமாகும் என மார்க்கம் கற்றுத்தந்துள்ளது.

எனவே, தொழுகையாளியின் கவனம் சிதறாது இருக்க அவசியமான ஒன்றாக சுத்ரா தடுப்பு அவசியமானதாகும். இது நபி(ஸல்) அவர்கள் வழிமுறை ஆதலால் குறுக்கீடு இருக்கும் சந்தேகம் வரும் அனைத்து சூழ்நிலைகளிலும் இதை பயன்படுத்த வேண்டும்.

மற்றபடி ஒரு ஒழுங்கமைப்பான இடங்களில் தொழும்போது சுத்ரா அவசியமில்லை.

தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால் அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக இருந்து தொழ வேண்டும்.

தூண் சுவர் கைத்தடி ஈட்டி ஒட்டகம் ஆகிய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுப்பாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

📚📖ஆதாரங்கள்:

📕509. அபூ ஸாலிஹ் அறிவித்தார்.  எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயீத் என்ற கூட்டடத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூ ஸயீத்(ரலி) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத்(ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழிதென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூ ஸயீத்(ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (அட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூ ஸயீத்(ரலி) மர்வானிடம் சென்றார்கள். “உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சினை?“ என்று மர்வான் கேட்டார். “உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் “தடுப்பு“ வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்“ என அபூ ஸயீத்(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

📕உங்களில் ஒருவர் (தொழும் போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்து செல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்.

 அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம் (858)

📕சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்) அவருடன் ஷைத்தான் இருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல்கள் : இப்னுஹுஸைமா (800),இப்னுஹிப்பான்(2362), ஹாகிம் (921), பைஹகீ (3261)

📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும் போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்துவருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால் தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் (862)

📕நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),

நூல்கள் : புகாரீ (496), முஸ்லிம் (786?)

📕நான் ஸலமா பின் அல் அக்வஃ (ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவனாக இருந்தேன். ஸலமா (ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணைத் தேர்ந்தெடுத்துத் தொழுகின்றீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : யஸீத் பின் அபீ உபைத்,

நூல் : புகாரீ (502), முஸ்லிம் (788)

📕நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டு, தொழுமிடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), 

நூல்கள்: புகாரீ 973, முஸ்லிம் 863

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

📖Question no: 115📖

  Sooraakkalin sirappugal endrum noivaaippattavargal arrahmaan soora odhuvadhu,ka’af,enbadharkkum,belli kizhamai odhuvadharkku thani sirappu undaa?

📖கேள்வி எண்: 115📖

சூராக்களின் சிறப்புகள் என்றும் நோய்வாய்பட்டவர்கள் அர்ரஹ்மான் சூரா ஓதுவது சூரா அல்பகரா, காஹ்ஃப் ,என்று வெள்ளி கிழமை ஓதுவது என்று தனிச்சிறப்பு உண்டா?

🖋பதில்🖋

நோய்வாய்பட்டவர்கள் குரானை கொண்டு மந்திரிப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது.

ஆனால் இங்கு கூறப்பட்ட மந்திரிப்பது என்பதை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
கயிறு,தகடு போன்ற ஏதாவது பொருளில் குரானை ஓதி அதில் ஒரு சக்தி இருப்பதாக நினைத்து அதை கட்டிக் கொள்வது, வீட்டில் தொங்கவிடுவது போன்ற ஷிர்க்கான விஷயங்கள் செய்யாமல்,நமக்கு தெரிந்த குரான் வசனங்களை நோய்வாய்ப்பட்டவர்கள் ஓதிக்கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் கிடையாது.

✒சில சூராக்களுக்கு சில சிறப்புகள் இருந்தாலும் வெள்ளிக்கிழமைக்கு என தனித்துவ சிறப்பு கிடையாது. இவற்றை எல்லா நாட்களிலும் ஓதலாம்.

📚📖ஆதாரங்கள்:

📕
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا  ﴿17:82﴾

17:82. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.

📕நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

📕மருத்துவம் பார்ப்பதும்,ஓதிப்பார்ப்பதும்] இறைவிதி – ஏற்பாட்டில் உள்ளது தான் என்று பதிலளித்தார்கள். [திர்மிதி]

📕அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் ;   அண்ணல் நபி [ஸல்] அவர்கள் தங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையென்றால் தங்களின் மீது தாங்களே [குர்ஆனின்]பாதுகாப்பு அத்தியாயங்களை [113, 114] ஓதி ஊதிக் கொள்வார்கள்.அவர்கள் ரொம்ப முடியாமல் போன போது நான் அவர்கள் மீது ஓதிப் பார்த்தேன்.அவர்களின் புனிதமான கையில் ஓதி அந்தக்கையால் அதன் பரக்கத்தை நம்பி அவர்களைத் தடவினேன். [புகாரி ; 5016, முஸ்லிம் ; 2192]

📕1475. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார். இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். – மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”அல்கஹ்ப் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர்” என்று இடம்பெற்றுள்ளது. ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை…” என்று இடம்பெற்றுள்ளது. ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இவ்வாறே இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🎤தெளிவான விளக்கம் ஆடியோவில்👇👇

============================

📖 Question no: 116 📖

   Allah wukku migavum pidiththa surakkal surah thaha nd surah yaseen enbazu unmayya?

📖 கேள்வி எண்:116📖

   அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான சூராக்கள்,சூரா தாஹா மற்றும் சூரா யாசீன் என்பது உண்மையா?

🖋பதில்🖋

   சில சூராக்களுக்கு சில சிறப்புகள் இருப்பதை முந்தைய கேள்விகளில் தெளிவு படுத்திப்பட்டுள்ளது.

எனினும் சூரா தாஹா,சூரா யாசீன் போன்ற சூராக்கள் அல்லாஹ்விற்கு பிடித்தமானது என்பதற்கு எந்த வித சான்றும் கிடையாது.

===========================
🕌Question no:117🕌

Prayanathil irukum pothu tholugai sattam enna? Car il ethir ethirey irukum pothu suthra illamal tholalama? Vahanam payanikum pathaiyai nokki than thola venduma? Uloo cheyya vasathi illatha pothu thayammum pannum poluthu car il kaihalai adithu kondu thayammum pannalama?
Idhu Ella kelvigalukkum thelivaana vilakkam kooravum

🕌கேள்வி எண்:117🕌

பயணத்தில் இருக்கும்போது தொழுகையின் சட்டம் என்ன?காரில் எதிர் எதிரே இருக்கும்போது சுத்ரா இல்லாமல் தொழலாமா? வாகனம் பயணிக்கும் பாதை நோக்கித்தான் தொழ வேண்டுமா? உளூ செய்ய வசதி இல்லாத போது தயம்மும் பண்ணும்போது காரில் கைகளை அடித்து கொண்டு தயம்மும் பண்ணலாமா?

♦பதில்♦

  பிரயாணிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சலுகை ஜம்மு,கஸ்ரு அதாவது சேர்த்துத்தொழுதல்,சுருக்கித்திழுதல்.

ஒருவேளை தொழுகை நேரம் தாண்டிவிடும் சூழ்நிலையில் வாகனத்திலேயே தொழுது கொள்ளலாம். உதாரணமாக கார்,ரயில்,விமானம் போன்ற இடங்களில் இறங்க முடியாத ஒரு சூழல் இருக்கும்போது தண்ணீர்,மண் இரண்டும் இல்லாத ஒரு சூழலில் அங்கேயே கையை அடித்து தயம்மும் செய்யலாம்.

எதிரெதிராக ஆட்கள் இருக்கும் பட்சத்தில் கவனம் சிதறாது இருப்பதற்காக சிறிய பொருள் ஏதாவது ஒன்றை தடுப்பாக வைக்கலாம். அதுவும் இயலாத பட்சத்தில் குற்றம் கிடையாது.

நபி(ஸல்) அவர்கள் உபரியான தொழுகையை வாகனத்தில் தொழுததற்கு பல ஆதாரங்கள் இருப்பினும் கடமையான தொழுகையை வாகனத்தை விட்டிறங்கி உளூ அல்லது தயம்மும் செய்து கிப்லாவை முன்னோக்கி தொழுதார்கள். எனினும் நம்முடைய இத்தகைய சூழ்நிலைக்கு இதை ஆதாரமாக்கி கொள்ளலாம். ஒரு தோழருடைய பர்லு தொழுகைதை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதிலிருந்தும் நாம் இதை புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் நம்முடைய சூழலை நன்கறிவான்.
எனவே கட்டாய சூழ்நிலையில் இதுபோன்று தொழுவது குற்றம் கிடையாது.

📚📖ஆதாரங்கள்:

📘சூரியன் சாய்வதற்கு முன் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும்வரை தாமதப்படுத்தி அஸர் நேரம் வந்ததும் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். பிரயாணத்தைத் துவங்கு முன் சூரியன் சாய்ந்துவிட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு புறப்படுவார்கள்’(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

📘நபி صلى الله عليه وسلم அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். (ஆதாரம் :புகாரி)

📘
فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا ۖ فَإِذَا أَمِنتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ  ﴿2:239﴾

2:239. ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.

📘1095 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து உபரியான தொழுகைகளையும் வித்ருத் தொழுகையையும் தொழுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்றும் குறிப்பிடுவார்கள்.

📘1094 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும் போது கிப்லா அல்லாத திசை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள்.

📘1100 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அப்துல்மலிக் பின் மர்வானை சந்தித்து பஸ்ராவின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பற்றி முறையிட்டுவிட்டு) ஷாமிலிருந்து திரும்பி வந்த போது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். அப்போது அவர்களை நாங்கள் அய்னுத் தம்ர் எனும் இடத்தில் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீதமர்ந்து (உபரியானத் தொழுகை) தொழுவதை நான் பார்த்தேன். அவர்களின் முகம் கிப்லாவுக்கு அந்தப்பக்கம் -அதாவது இடப்புறம்- நோக்கி அமைந்திருந்தது. கிப்லா அல்லாத வேறு திசையில் நீங்கள் தொழுவதை நான் கண்டேனே! என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்று விடையளித்தார்கள்.

************************************

🕋Question no: 118🕋

Uloo seium podhu kiblavai nokidhan seiya venduma?

🕋 கேள்வி எண்:118🕋

உளூ செய்யும்போது கிப்லாவை நோக்கித்தான் செய்ய வேண்டுமா?

▪பதில்▪

  உளூ செய்யும்போது கிப்லாவை முன்னொக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எந்த திசையிலிருந்து வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்:

📙165. ”மக்கள் உளூச் செய்யும் தொட்டியிலிருந்து உளூச் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற அபூ ஹுரைரா(ரலி) (எங்களைப் பார்த்து) ”உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல் காஸிம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் ”குதிகால்களை சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்” என்று கூறினார்கள்” என்றார்கள்” என முஹம்மத் இப்னு ஸியாத் அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

📙391. ”நம்முடைய தொழுகையைத் தொழுதுஇ நம்முடைய கிப்லாவை முன்னோக்கிஇ நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

📙417. அனஸ்(ரலி) அறிவித்தார்.
கிப்லா திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தி காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். ”நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!” என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறு பகுதியுடன் கசக்கிவிட்டு ”அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

📙144. உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோஇ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்” இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ்இ கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனாஇ யமன்இ சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

👒Question no:119👒

Oru Muslim kudumbathil adukakkadukkaana prachnaigal edhir paaraadha vidhamaga vandhu kondey irukkiradhu,kashtangalum sodhanaigalum thodarudhu

Idhu avargal seyyum paavangalaa?
Allah anbinaal kodukkum sodhanaiyaa?
Petror seidha paavangalin vilaivugalaa?
Idhu pondra nilamaiyil oru Muslim evvaru nadandhu kolvadhu?

Porumaiyaaga irukka vendum enbadhai thavira enna seyyalaam?

👒கேள்வி எண்:119👒

ஒரு முஸ்லீம் குடும்பம்., அவங்க குடும்த்தில் அடுக்கடுக்காய் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக  வந்துடே இருக்கு.!தொடர்ந்து நல்லதைவிட கஷ்டகளும் சோதனைகளும் தொடருது.!
கேள்வி.1 இது அவங்க செய்யும் பாவங்களா.?

2.அல்லாஹ்  அன்பினால் கொடுக்கும் சோதனையா.?

3.பெற்றோர் செய்த பாவங்களின் விளைவுகளா.?

4. இப்படியான நிலைமையில் ஒரு முஸ்லீம் எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டும்.?
பொருமையா இருக்கனும் இது தவிர என்ன செய்யலாம்.?
தெளிவான விளக்கம் தாங்க.!

🔵பதில்🔵

இறைநம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஒரு விஷயம் அல்லாஹ் நமக்கு விதித்ததை தவிர வேறொன்றும் நடக்காது என்பது.

அல்லாஹ் தன் திருக்குரானில் முழுமையாக நன்மை,தீமையை அருளியுள்ளான். அதன் படி நாம் நன்மையான காரியங்களை பின்பற்றியும்,தீமையான காரியங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். இது நம் வாழ்வியல் முறை. இதற்கிடையில் தாமாக ஏற்படும் நல்லது கெட்டதுக்கு இதுதான் காரணம் என ஆராய்வது கூடாது. இது போன்ற குழப்பத்தில் தான் ஷைத்தான் மிக எளிதாக ஊடுருவுவான்.

நாம் ஈமானில் உறுதியுள்ளவர்களாக இருந்தால் நம் அறிவுக்கெட்டிய விஷயத்தை தாண்டி ஆராயக்கூடாது. நமக்கு அல்லாஹ் கொடுத்த பகுத்தறிவை கொண்டு நமக்குட்பட்ட விஷயங்களைத்தான் சிந்திக்க வேண்டும்.

அதை விடுத்து நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்களுக்கு இது காரணமா?அது காரணமா? என்று யோசிப்பது இஸ்லாத்திற்கு முரணான சிந்தனையாகும்.

அல்லாஹ் தான் நாடியதை தவிர வேறொன்றும் நமக்கு நடக்காது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளான். இது எதுவானாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதை தாண்டி நாம் சிந்திப்பது இறைநம்பிக்கைக்கு மாற்றமான ஒன்றாகும்.

அல்லாஹ் இத்தகைய சூழ்நிலையில் பொறுமையை கடைபிடிக்க மட்டும்தான் கூறியுள்ளான்.

இஸ்லாத்தை பொறுத்தவரை ஒருவருடைய சுமையை மற்றவர்கள் ஏற்க முடியாது.
அவரவர்கள் செய்ததின் பலன் அவரவர்களுக்கே.
அல்லாஹ் தான் நாடியவருக்கு சோதிப்பான், அதற்கான காரணம் இதுதான் என்று நாம் அனுமானிக்க முடியாது.

நம்மை விட பலப்பல மடங்கு சோதனைக்குட்படுத்தப்பட்ட நபி மார்கள், அல்லாஹ்விடத்தில் விடை கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் கூட,தொடர்ந்து துஆ செய்தார்களே தவிர இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டதில்லை.

இங்கு,நல்லவர்கள்,கெட்டவர்கள்,முஸ்லிம்கள்,முஸ்லிமல்லாதவர்கள் அனைவருக்கும் துன்பம்,இன்பம்,மரணம்,சோதனை,நோய் ஏற்படுகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த காரணத்தால் ஏற்படுகிறது என காரணங்களை நாம் ஆராயும் அறிவை அல்லாஹ் நமக்கு கொடுக்கவில்லை.

எனவே இத்தகைய துன்பங்களின் போது தொடர்ந்து பிரார்தித்து அல்லாஹ்விடம் உதவி தேடுவோம்.

📚📖ஆதாரங்கள்:

📒
قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾

9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

📒
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَغْفِرُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ  ﴿5:40﴾

5:40. நிச்சயமாக அல்லாஹ் – அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.

📒
قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۚ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ  ﴿10:49﴾

10:49. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”

📒5645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 75. நோயாளிகள்

📒ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: திர்மிதீ 2319

📒உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

📒எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

📒அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

📒ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

📒6943. கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி “எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?“ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) “ஸன்ஆவிலிருந்து “ஹள்ரமவ்த்“ வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்“ என்றார்கள்.6
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்க

=============================

📝Question no:120📝

palaweenama or poliyaana hadhith kalay adayalam kanbazu eppadi?

📝கேள்வி எண்:120📝

போலியான,பலவீனமான ஹதீஸ்களை அடையாளம் காண்பது எப்படி?

🔳பதில்🔳

  சில ஹதீஸ்களை நாம் சாதாரணமாக படிக்கும்போதே சந்தேகம் எழும். உதாரணமாக, சுரைக்காய் சாப்பிட்டால் சுவர்க்கம் கிடைக்கும்,நபி(ஸல்) அவர்கள் ஓதி உமிழ்ந்து துப்பி தடவுவார்கள், கபரில் உள்ளவர்களுக்கு கேட்கும்…..

இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் ஒருவர் எந்த நன்மையான காரியங்களும் செய்யாமல் சுரைக்காய் சாப்பிட்டால் சுவனம் கிடைக்குமா?
நபி(ஸல்) அவர்கள் இத்தகைய அருவருப்பான காரியம் செய்வாரா?
இறந்தவர்களுக்கும்,நமக்கும் திரை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாம் பேசுவது கேட்பது சாத்தியமா?
இப்ப்டியாக படித்தவுடன் சந்தேகம் வரும் ஹதீஸ்களை போலியானது என நாமே நம்முடைய அறிவில் கண்டுபிடித்து விடலாம்.

மேலும் சில.ஹதீஸ்கள் நமக்கு படித்தால் உண்மை போலவே இருக்கும். ஆனால் அறிவிப்பாளர்களை ஆராய்ந்தால் அவர்களில் சில பேர் ஞாபக மறதிக்காரர்களாய் இருப்பார்கள், வேறு சிலர் சஹாபாக்கள் கூறியதை தவறாக விளங்கிக்கொண்டு அப்படியே பதிவு செய்திருப்பார்கள், சிலர் அனுமானத்தின் பேரில் சில ஹதீஸ்களை பதிவு செய்திருப்பார்கள். சில ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்களின் பல வருட கால இடைவெளிக்குப்பின் தன் சமூகத்தாரின் சந்தர்ப்பத்திற்கேற்ப ஹதீஸ்களை பதிந்திருப்பார்கள்.

இதுபோன்ற ஹதீஸ்களை நாம் எளிதில் கண்டறிய இயலாது. இதை ஹதீஸ்கலை வல்லுனர்கள் வரலாறுகளை ஆராய்ந்து அறிவிப்பாளர்களின் தன்மை,மனநிலை, வாழ்ந்த காலம் இவற்றை கணக்கிட்டு எது உண்மை,யார் உண்மையாளர் என்பதை ஏற்கனவே பதிவிட்டிருப்பார்கள்.
இந்த ஆராய்ச்சியிலிருந்து நாம் போலியான ஹதீஸை அடையாளம் காணலாம்.

சில ஹதீஸ்கள் உண்மையானதாகவே இருக்கும். ஆனால் குரானுக்கு முரண்பட்டதாக இருக்கும். உதாரணமாக, கண்ணேறு உண்மை,சூனியம் போன்ற ஹதீஸ்கள் உண்மையான அறிவிப்பாளர்கள் வழியே வந்திருந்தாலும்,இது சூனியக்காரனுக்கு கேடு போன்ற குரான் வசனங்கள் தெளிவாக உள்ளது. இதனால் குரானுக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை புறக்கணிக்க வேண்டும்.
அதை யார் அறிவித்தாலும் எடுத்துக்கொள்ள கூடாது.
ஏனெனில் ஹதீஸ் என்பது மகான்களாக இருப்பினும் மனிதர்களால் இயற்றப்பட்டது. ஆனால் குரானின் ஒவ்வொரு வார்த்தைகளும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. எதை நம்ப வேண்டும் என நமக்கே இது தெரியும்.

எனவே இது போன்ற விஷயங்களை மனதில் கொண்டு நாம் நபி(ஸல்)அவர்களின் தெளிவான ஹதீஸ்களை பின்பற்றி அல்லாஹ்வின் திருப்பொருத்ததை பெறுவோம். இன்ஷா அல்லாஹ்

📚📔 உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி) நூல்: திர்மிதீ 2442

📔 உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும். (அல்குர்ஆன் 17:36)

〰〰〰〰〰〰〰
〰〰〰〰〰〰〰

மார்க்க கேள்வி பதில்கள்.

🐠Question no: 101🐠

   oru maatrumadha sahodhariyin padhivay naan fb il parthn. Adhil Muslim aangalay manappazal pengal thuyar adaywar endrum azatku awarsonna kaaranangalah palathaaramanam ,adimayppengalidam vendiya urimay aangal kollalam edrum sollirundhar. Idhanay andha sahodharikku vilakki solvazu eppadi?

🐠கேள்வி எண்:101🐠

இஸ்லாம் பலதாரமணத்தை அங்கீகரித்தது பற்றியும்,அடிமைப்பெண்களிடம் ஆண்களின் உரிமை பற்றியும் மாற்றுமத சகோதரியின்  கருத்துக்கு எப்படி விளக்கமளிப்பது?

🌀பதில்🌀

  இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கிறது. அல்லாஹ் தன் திருக்குரானில் நான்கு மனைவியர் வரை மணக்க அனுமதியளித்துள்ளான்.
இது பெண்களுக்கான அநீதி என பரவலாக பேசப்படுகிறது. இதை சரியான முறையில் விளங்கி மாற்றுமதத்தவருக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளோம்.

முதலில் இதற்கான அடிப்படை காரணங்களை பார்ப்போம்

1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விட எண்ணிக்கையில் பலமடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் ஆண்களை விட பெண்கள் 10 வருடத்திற்கு முன்பே திருமணத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

2. ஆண்களை விட பெண்கள் மக்கள் தொகையில் அதிகமாக உள்ளனர்.

3. போர்களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.

4. இறப்பு விகிதத்தில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர்.

5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மணவாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

6. பெண்களுக்கு திருமணம் செய்ய ஒரு பெரிய தொகை வரதட்சணை கொடுக்க படுகிறது.

7. இதனால் பெண் சிசுக் கொலை நடைபெறுகிறது.

8. திருமணம் வேண்டாம் என பிரம்மச்சரியம் மேற்கொள்வதால் ஆண்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

9. பெற்றோரால் திருமணம் முடித்து வைக்க இயலாது என நினைக்கும் பெண்கள் தாமாகவே வாழ்வை தேடி ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

10. திருமணம் தனக்கு நடக்காது என நினைக்கும் பெண்கள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலும்,ஆண்கள் விபச்சாரத்தில் விழுவதை தடுப்பதற்கும் தான் இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.

இதை ஆதரிப்பதால் தவறான தொடர்பு பெரும்பாலும் தடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மைநிலை.

இப்படி வியாக்கியானம் கூறுபவர்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். பலதார மணம் என்பதை இஸ்லாம் முதன் முதலில் வகுக்கவில்லை.
இதன் மூலம் இஸ்லாம் இஸ்லாம் சமுதாயத்தை ஒழுங்கு படுத்தியுள்ளது.

இந்த கட்டளை அல்லாஹ்விடத்திலிருந்து வரும் முன்பு இஸ்லாம் அல்லாத அரபியர் மத்தியிலும்,உலகெங்கும் பலதாரமணம் ஒரு முறையின்றி பரவலாக இருந்தது.
இவ்வளவு ஏன்? இவர்கள் வழிபடும் பெரும்பாலான கடவுள்கள் இரண்டு மனைவியரை வைத்திருந்து இன்றும் அவர்கள் அதை ஏற்று பூஜிப்பதை பார்க்கிறோம்.
அவ்வளவு ஏன்? இன்றும் பல அரசியல் தலைவர்கள் பல மனைவியரை திருமணம் செய்வதை நடப்பில் பார்த்து வருகிறோம்.
ஒரு ஆய்வரிக்கையின் படி முஸ்லிம்களை விட,முஸ்லிமல்லாதவர்கள் இரண்டாம், மூன்றாம் மணமுடிப்பதுதான் அதிகம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இன்று இன்னொரு திருமணம் செய்வது பாவம் என போராடும் அமைப்புகள் விபச்சாரத்தையும்,ஆணகளின் கள்ளத்தொடர்பையும் ஒன்றுமே கூறுவதில்லை.

இப்படி கணவன் செய்யும் கள்ளத்தொடர்பை மறைமுகமாக ஏற்கின்றனர். விபச்சாரத்தையும் லைசன்ஸ் கொடுத்து நடத்துவதற்கு தடை செய்வதில்லை.

இந்த பலதாரமணம் இப்படிப் பட்ட இழிசெயல்களிலிருந்து காப்பாற்றுகிறது என்று எடுத்துரைக்க வேண்டும்.

பொருளாதரத்தில் நன்றாகவும், உடலில் சக்தி பெற்றவர்களும் தன் மனைவியிடம் ஏதேனும் குறையுள்ள சமயத்தில் இதை அனுமதிக்கவில்லையெனில் என்ன நடக்கும். நிச்சயம் விபச்சாரத்தை நாடி நோயை விலைக்கு வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம்.
இதனடிப்படையில் இன்னொரு திருமணம் நல்லதா? கெடுதலா?

மனைவிக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்மார்களை பற்றி அறியும்போது மனைவி கேட்பது என்ன? என்னை கைவிட்டுவிடாதே என் வாழ்விற்கு பதில் சொல் என்று தான். இதைத்தான் இஸ்லாம் முறைப்படி செய்து இருவருக்கும் போதுமான அங்கீகாரம் கொடுக்கிறது என்பதை விளங்கச்செய்ய வேண்டும்.

அதுவும்,இஸ்லாம் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறவில்லை. அவளுக்கு தெரியாமல் செய்வது சாத்தியமே இல்லை.

இப்படி இன்னும் பலப்பல காரணங்களை கூறிக்கொண்டே போகலாம்.
இதுவே அவர்களுக்கு எடுத்துக் கூற போதுமானதாக இருக்கும்.

◾அடுத்து அடிமைப்பெண்கள் பற்றி வைத்த குற்றச்சாட்டை பார்ப்போம்.

அடிமைப்பெண்கள் இன்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் அது ஒழிய காரணம் எது என்று தெரிந்தாலே வாதத்திற்கு வேலை இல்லை.

இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நட்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது. இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்தபோது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப்பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.

* ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

* ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினார்கள்.

* யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.

* பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள்.

தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். இது பொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்குவார்கள். அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை, அன்னிய ஆண்கள் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும்போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும்போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.

அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்குக் கணவனுக்கு நிகரான நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.

அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.

வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது. வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்லர். விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பும்போது எஜமானை மாற்ற முடியாது. 

📚📖ஆதாரங்கள்

📕
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا  ﴿4:4﴾
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

📕
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا  ﴿4:36﴾
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

📕(4:3, 4:25, 4:24, 16:71, 23:6, 24:31, 33:50, 33:52, 33:55, 70:30)

***********************************

🐠Question no: 102🐠

Allahvey peyar vaitha nabimaargal yaar?

1- Yahyaa (3:39)
أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ
2- Jesus (3:45)
يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ
3,4- Isaac & Jacob (11:71)
فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِن وَرَاءِ

idhu sariyaana badhila.. Ivargal naalvarukkum Allah than peyar sootinaana? Aadam alai avarkaluku peyar sootiyadhu Allah illaya? Thelivu paduthavum plz..

🐠கேள்வி எண்:102🐠

அல்லாஹ்வே பெயர் வைத்த நபிமார்கள்

யஹ்யா(அலை)
ஈஸா(அலை)
இஸாக்(அலை)
யாகூப்(அலை)

இது சரியானதா?
ஆதம்(அலை)நபிக்கு பெயர் வைத்தது அல்லாஹ்வா? இல்லையா? தெளிவுபடுத்தவும்.

💦பதில்💦

✒ யஹ்யா(அலை) நபி,ஈஸா(அலை)நபி,இஸ்ஹாக்(அலை)நபி மற்றும் யாகூப்(அலை) நபி இவர்களுக்கெல்லாம் பெற்றோர்கள் பெயர் வைத்திருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் இப்படிப்பட்ட நபிமார்கள் பிறப்பார்கள் என முன்னறிவிப்பு செய்துள்ளான்.  அல்லாஹ்வின் பதிவேட்டில் அனைவரின் பெயர்களுமே பதிவாகி இருக்கும். அல்லாஹ் மேற்கூறிய நபிமார்களின் வருகையை முன்கூட்டியே அறிவித்த காரணத்தினால் அல்லாஹ்தான் இவர்களுக்கான இந்த பெயர்களை வைத்தான் என்பது சரியானதே.

மேலும்,ஆதம்(அலை) பூமியில் பிறக்கவில்லை,அவர் பூமிக்கு அனுப்பப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆதம்(அலை) நபிக்கு பெயர் வைத்ததற்கான நேரடியான ஆதாரம் இல்லை எனினும் முதலில் பெற்றோர் இல்லாமல் தோற்றுவித்த நபி ஆனதால் ஆதம் நபிக்கு அல்லாஹ்தான் பெயர் சூட்டியிருப்பான் என பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது.(90:3)

அதுமட்டுமன்றி, முகம்மது நபி(ஸல்) அவர்களின் வருகையை அல்லாஹ் அதற்கு முன் அனுப்பப்பட்ட வேதங்களில் முன்னறிவுப்பு செய்துள்ளான் என்பதிலிருந்து முகம்மது நபி(ஸல்)க்கும் அல்லாஹ்தான் பெயர் சூட்டியுள்ளான் என்றும் அறிஞர்களிம் கருத்தாக உள்ளது.

📚📖ஆதாரங்கள்

📓
يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُ مِن قَبْلُ سَمِيًّا  ﴿19:7﴾
19:7. “ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).

📓
فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ  ﴿3:39﴾
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.

📓இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன் வந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன் வந்தது இஸ்ஹாக்கைத் தான் என்று சிலர் கூறியுள்ளனர். அது தவறு என்பதற்கு இவ்வசனம் (11:71) சான்றாகவுள்ளது.
இஸ்ஹாக் என்ற மகன் பிறக்கப் போவதைக் கூறும் போதே, யஃகூப் என்ற பேரன் பிறக்கப் போவது பற்றியும் முன் கூட்டியே இப்ராஹீம் நபிக்குக் கூறப்பட்டதாக இவ்வசனம் (11:71) கூறுகின்றது.
பேரனைப் பற்றி நற்செய்தி கூறப் பட்டதால் இஸ்ஹாக் சிறு வயதில் மரணிக்க மாட்டார் என்பதும், அவர் மணம் முடித்து யஃகூபைப் பெறுவார் என்பதும் இப்ராஹீம் நபிக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின் இஸ்ஹாக்கைப் பலியிடுமாறு கூறி இப்ராஹீம் நபியைச் சோதிக்க முடியாது. இஸ்ஹாக் இப்போது சாக மாட்டார் என்று இறைவனே கூறிய பிறகு இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிட முன் வந்ததில் பெரிய தியாகம் ஏதும் இருக்காது.
தன் மகன் சாகவே மாட்டான் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முன் வருவர். எனவே இஸ்மாயீலை அறுத்துப் பலியிடுமாறு கூறுவது தான் இருவரையும் சோதித்துப் பார்ப்பதாக அமைய முடியும்.

📓
وَوَالِدٍ وَمَا وَلَدَ  ﴿90:3﴾
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

📓61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.

••••••••••••••••••••••••••••••••••••••
🐠Question no:103🐠

    Marumayil kanavan manaivi uravu eppadi irukkum?

🐠கேள்வி எண்:103🐠

மறுமையில் கணவர் மனைவி உறவு எப்படி இருக்கும்?

🌀பதில்🌀

   மறுமை பற்றிய செய்திகள்  நமக்கு  குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில்.எதைபற்றிய ஞானம் கொடுக்கப்படவில்லையோ அதை பற்றி தொடரவேண்டாம் என கூறியுள்ளான்.

அல்லாஹ் கணவன் மனைவி பற்றி கூறிய விஷயங்களில் நாம் உலகில் உள்ள கணவன் மறுமையில் வேண்டும் என துவா கேட்கும்போது,இருவரும் ஈமானை பேணி,நற்கருமங்கள் செய்து இறைவன் நாடினால் சொர்க்கத்தை அடையலாம்.

அங்கு இங்குள்ளது போல் இல்லாமல் பல மடங்கு அழகுள்ளவர்களாக மாற்றப்படுவோம். பெண்கள் அழகிய முத்துக்கள் போல் இருப்பார்கள். யாருமே எதிர்பாத்திராத பல இன்பங்கள் கணவன் மனைவிக்கு கிட்டும். அங்கு மகிழ்ச்சி மட்டுமெ இருக்கும். என்றென்றும் இளமையுடன் மட்டுமே இருப்பார்கள். மரணம் இல்லை. அவர்களுக்கு பலவித கனிவகைகள் கிடைக்கும். ஆறுகள் ஓடும்.
இப்படி அல்லாஹ் கூறிய அனைத்து இன்பங்களும் சொர்க்கத்தில் கிடைக்கும்.

📚📖ஆதாரங்கள்

📗
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا  ﴿17:36﴾
17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.

📗அவரது இளமை அழிந்துபோகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல் :  முஸ்லிம் 5456

📗மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.”                             அல்குர்ஆன் 56:23

📗சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: புகாரி 6568

📗சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக்காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடைகளிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மென்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5448

📗“என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5439

📗
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا  ﴿4:124﴾
4:124. ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

📗

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ  ﴿13:23﴾
13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.

📗
ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ  ﴿43:70﴾
43:70. நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

📗

يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ  ﴿43:71﴾
43:71. பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)

📗3245. இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்:  சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும். (அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
💦Question no:104💦

  Zam zam thaneerai fridge il  vaikkalaamaa?

💦கேள்வி எண்:104💦

ஸம் ஸம் தண்ணீரை குளிரூட்டியில் வைக்கலாமா.?

💧பதில்💧

ஸம் ஸம் தண்ணீர் மிக மிக மகத்துவமிக்க பல அரிய நன்மைகளை கொண்ட ஒரு நீராகும்.

பொதுவாக மற்ற நீரினை ஒரு சில நாட்களுக்கு மேல் வைத்தால் அதன் தன்மை மாறிவிடும். ஆனால் ஸம்ஸம் நீரினை எவ்வளவு காலம் வைத்திருந்தாலும் ஒரு சிறு அளவு கூட அதன் தன்மையில் இருந்து மாறாது.

இந்த சில நூற்றாண்டுகள்தான் குளிர் பதன பெட்டிகளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. இவை எல்லாம் இல்லாத ஏன்? மின்சாரம் கண்டுபிடிக்கப் படாத காலத்தில் கூட பல நூற்றாண்டு காலம் இந்த தண்ணீர் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அது அதன் தன்மையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இன்றைய விஞ்ஞானிகள் இதில் சோடியம்,கால்சியம், மெக்னீசியம், ஃப்ளோரைடு,பொட்டாசியம், நைட்ரேட்,சல்பேட் மற்றும் பல அரிய வகை சத்துக்கள் இருப்பதாக நிரூபித்துள்ளனர்.

பொதுவாக நீர் தேங்கிய இடத்தில் பாசி படரும், ஆனால் ஸம்ஸம் நீரூற்றை சுற்றி ஒரு சிறு அளவு கூட பாசி பிடிக்காதது பல ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்நீரை வெளியில் வைத்தாலும் ஒன்றும் ஆகாது.

குளிரூட்டியிலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தவித தடையும் கிடையாது.

============================

😵Question no:105😵

     Kottaavi vandhaal audhu  billaahi minashaithani rrajeem endru koora vendumaa? Idharku aadhaaram illai endru koorugiraargal adhu unmaiya?

😵கேள்வி எண்:105😵

  கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தான் நிர்ரஜீம் என்று கூற வேண்டுமா???
இதற்க்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்ரனர்.

⚪பதில்⚪

    கொட்டாவி என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து வருவதாகும்.,என்றாலும் அதற்கு அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

கொட்டாவியை இயன்றவரை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். “ஹா” என்று சத்தமிட்டு விடக்கூடாது. ஏனெனில் அதில் ஷைத்தானின் சிரிப்பு உள்ளது.

எனவே,அதை கட்டுப்படுத்தத்தான் நபி(ஸல்)அவர்கள்  தவிர வேறு எதை ஓதுவதற்கும் கூறவில்லை.

ஆனாலும் ஷைத்தானின் எந்த வித ஊசலாட்டத்தின் போது அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடவேண்டும் எனும் பொதுவான அடிப்படையில் நாம் விரும்பினால் சொல்லி கொள்ளலாம். ஆனால் தும்மலுக்கு உள்ளது போன்று கட்டாயம் சொல்லவேண்டிய அவசியமில்லை.

📚📖ஆதாரங்கள்

📕3289.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா“ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்ற வரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), 
நூல் முஸ்லிம் (5718) 

📕6226. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்“ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (“அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக“ என) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் “ஹா“ என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.

📕
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ  ﴿7:200﴾
7:200. ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🙎🏼Question no:106🙎🏼

     Manaivi velaiku poi sambathithal athai kanavanuku koduka vendama? Kodukamal irukum patchathil iruvarukum pirachanai vanthal enna seivathu?

🙎🏼கேள்வி எண்:106🙎🏼

   மனைவி வேலைக்கு போய் சம்பாதித்தால் கணவனுக்கு கொடுக்க வேண்டுமா?கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் பிரச்சனை வந்தால் என்ன செய்வது?

🌼பதில்🌼

   இஸ்லாத்தை பொறுத்தவரை கணவன் தான் மனைவியை பாதுகாக்க,நிர்வகிக்க வேண்டும்.

மனைவிக்கு வேலைக்கு செல்வதோ,பணம் சம்பாதிப்பதோ அவசியம் கிடையாது. ஆனால் குடும்ப சூழலை பொறுத்து  வேலைக்கு செல்ல வேண்டியிருந்தால் கணவனின் சம்மதத்தோடு,இஸ்லாமிய விதிமுறைக்குட்பட்டு வேலைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை கணவனுக்கு கொடுக்க அவசியம் கிடையாது. மனைவி விரும்பி தானே கொடுத்தால் தவறில்லை. ஆனால் மனைவியிடம் பணத்தை நிர்பந்தித்து வாங்குவதற்கு கணவனுக்கு உரிமையில்லை.

இதன் மூலம் வரும் பிரச்சனைகளை ஒருவரையொருவர் பேசி,வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தெரியப்படுத்தி சுமூகமான முறையில் தீர்க்க முயற்சிக்க வேண்டும். ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கணவர் சாதாரண முறையில் கேட்கிறாரா? சொத்து போன்றவைகளுக்கா? வீண்விரயத்திற்கா? கொடுமை படுத்தும் விதமாகவா? என்பதெல்லாம் அறிந்தபின்புதான் இதற்கு எவ்வாறு தீர்வு எடுக்கலாம் என்பது பற்றி முடிவெடுக்கமுடியும்.

சாதாரணமாக கேட்டால் மனைவி விரும்புதலின் அடிப்படையில் கொடுக்கலாம்,கொடுக்காமல் இருந்தாலும் அது மார்க்கத்தின் அடிப்படையில் குற்றமாகாது. அவர் கேட்கும் வீரியத்தை பொறுத்துதான் மனைவி முடிவெடுக்க முடியும்.

இயன்றவரை கணவனுடைய சம்பாத்தியத்தை போதுமாக்கிக் கொண்டு மனைவிமார்கள் வீட்டையும்,பிள்ளைகளையும் கவனித்து வந்தாலே இவ்வாறான பிரச்சனைகலிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஆனால் சூழ்நிலை அடிப்படையில் வேலைக்கு செல்ல நேரிட்டால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

கணவர் ஞாயமான முறையில் குடும்பத்தை கவனிக்காவிட்டால் நியாயமான முறையில் அவருடைய பணத்தால் எடுக்கக்கூட இஸ்லாம் அனுமதிக்கிறது எனும்போது மனைவி கொடுக்க எவ்வித கட்டாயமுமில்லை.

📚📖ஆதாரங்கள்

📗
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ ۚ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ ۚ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا  ﴿4:34﴾
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

📗அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவி யின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),

நூல்: புகாரி 56, 1296, 4409, 5668

📗ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி),

நூல்: புகாரி 55, 4006, 5351

📗ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி),

நூல்: முஸ்லிம் 1817

📗… மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங் கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை (அல் கவ்ஸர் தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி),

நூல்: முஸ்லிம் 3723

📗முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2211, 2460, 5359, 5364, 5370, 6641, 7161, 7170

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🕌Question no:107🕌

     tholugay baathilaagakudiya vidayangal enna?

🕌கேள்வி எண்:107🕌

தொழுகையை முறிக்கும் விஷயங்கள் என்ன?

🍒பதில்🍒

   உளூவை முறிக்கும் அனைத்து விஷயங்களும் தொழுகையை முறிக்கும்.
ஸஜ்தாவையும்,ருகூவையும் முழுமைப்படுத்தவில்லையெனில் தொழுகை இல்லை.

தொழுகையில் பேசினால் தொழுகை முறிந்து விடும்.

தொழுகையில் சிரித்தால் தொழுகை முறிந்து விடும்.

தொழுகை விரிப்பு வேலைப்பாடுகள் நிறைந்து,அடர் நிறங்களில் இருந்தாலும் தொழுகை திசை திருப்பப் படும்.

தொழுகையில் உலக எண்ணம் ஏற்பட்டால் மீண்டும் நிலைக்கு வந்து தொழுது கொள்ளலாம். ஆனால் முழுவதும் உலக எண்ணமாக மட்டுமிருந்தால் மீண்டும் தொழ வேண்டும்.

தொழுகையின்போது எச்சில் வந்தால் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் சளித்தொந்தரவின் போது அடக்கமுடியாதபோது வலப்புறமோ,நேராகவோ இல்லாமல் இடப்புறமாக துப்பி மண்போட்டு விடவேண்டும்.

நாம் எத்தனை ரக்காயத்துகள் தொழுதோம் என மறதி ஏற்பட்டால் சஜ்தா ஸஹ்வு செய்து ,தொழுகையை நிறைவு படுத்தலாம். இதனால் தொழுகையை மீண்டும் தொழத் தேவையில்லை.

எனவே,தொழுகையை மிகவும் உள்ளச்சத்துடன் அல்லாஹ்வுடன் உரையாடுகிறோம் என்பதை நினைவில் வைத்து தொழவேண்டும்.

📚📖ஆதாரங்கள்

📘நபி(ஸல்) அவர்கள் கிராமவாசி ஒருவர் தொழுகையை முறைப்படி தொழாது, நிலை, ருகூஃ, ஸுஜூது முதலிய தொழுகையில் பர்ளாயுள்ளவற்றை அரைகுறையான வகையில் செய்து தொழுத போது அவரை நோக்கி மீண்டும் நீர் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவில்லை என்று கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

📗அப்போது அவர்கள் என்னை நோக்கி, நிச்சயமாக இத்தொழுகையானது இதில் மனிதர்களின் பேச்சுக்கும் இடமில்லை தொழுகை என்றால் ”தஸ்பீஹ்” செய்தல், தக்பீர் கூறல், குர்ஆன் (முஆவியத்துப்னில் ஹக்கம்(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

📗ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரையோ அல்லது அஸ்ரையோ தொழ வைத்தபோது இரண்டாவது ரகாஅத்தில் ”ஸலாம்” கொடுத்து விட்டார்கள். அப்போது ”துல்யதைன்” என்பவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் தான் மறந்து விட்டீர்களா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”தொழுகை குறைக்கப்படவுமில்லை, நான் மறந்து விடவுமில்லை” என்றார்கள். அதற்கு மீண்டும் அவர் அல்லாஹ்வின் தூதரே!” இல்லை நீங்கள் தாம் மறந்து விட்டீர்கள்” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ”துல்யதைன் கூறுவது உண்மையா?” என்று கேட்டார்கள். அனைவரும் ”ஆமாம்” என்றனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் (விடுபட்டுள்ள) இரண்டு ரகாஅத்துகளையும் தொழுதுவிட்டு 2 ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

📗
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ  ﴿2:238﴾
2:238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

📗நாங்கள் தொழுகையில் பேசுபவர்களாயிருந்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தமக்கு அடுத்துள்ள நபரிடம் தொழும்போது (சாதாரணமாகப்) பேசிக் கொண்டிருப்பார். இந்நிலையில் தான் ”அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்” (2:238) எனும் வசனம் அருளப்பட்டது. அப்போது நாங்கள் (தொழுகையில்) மௌனமாக இருக்கும்படி ஏவப்பட்டு பேசக்கூடாது என தடை விதிக்கப்பட்டோம். (ஜைதுபின் அர்க்கம்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

📗நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்கும்போது, பார்வைக் கோளாறினால் பள்ளியில் பிரவேசித்த ஒருவர் பக்கத்திலிருந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களோடு தொழுது கொண்டிருந்தோரில் அநேகர் தாம் தொழும் போதே (அவர் விழுந்ததைப் பார்த்து) சப்தமிட்டுச் சிரித்து விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சிரித்தவர்களை நோக்கி அவர்கள் ஒளூவையும் மீட்ட வேண்டும். தொழுகையையும் மீட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அபூமூஸா(ரழி), தப்ரானீ)

📗ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். (19:58)

📗373 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும்,எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு,அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.

📗135. ”சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோதுஇ ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ”அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ”சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது” என்றார்கள்” ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🍋Question no: 108🍋

  Khaala vudaiya mahan thambi murai aagirathu,  (avar vayathil migavum siriyavar) avaruku islam koorum maslaah enna? Avaruku kosa murai avarudan payanam seiyalama?
ithu erandum oru vithavaiyana pennuku eppidi ?

🍋 கேள்வி எண்: 108🍋

    ஒரு விதவைப்பெண் தன் சிறிய தாயார் மகனுடன் தனித்து பயணம் செல்லலாமா? தம்பி முறையில் இருக்கும் அவருடன் ஹிஜாபை பேண வேண்டுமா?
அவர் சிறிய வயதுடையவர்தான். இதற்கான விளக்கம் தரவும்.

☘பதில்☘

அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களை மிகத்தெளிவாக கூறியுள்ளான்.

அதில்,உங்கள் தாய்மார்களும்,உங்கள் புதல்வியரும்,உங்கள் சகோதரிகளும்,உங்கள் தந்தையின் சகோதரிகளும்;உங்கள் தாயின் சகோதரிகளும்,உங்கள் சகோதரனின் புதல்வியரும்,உங்கள் சகோதரியின் புதல்வியரும்,உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும்,உங்கள் பால்குடி சகோதரிகளும்,உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்;

இந்த வரிசையில் அந்த பையனின் பெரியம்மாவின் மகள் மஹ்ரமான உறவின் அடிப்படையில் வரமாட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் அந்த பெண் நிச்சயமாக ஹிஜாபை பேண வேண்டும்.

அந்நிய ஆணிடத்தில் நடந்து கொள்ளும் அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

மஹ்ரமில்லாத ஆணுடன் தனியே பயணிப்பது கூடாது எனும் இதே விதிமுறைதான் தன் தம்பி முறையில் இருக்கும் இவருடன் பயணிப்பதும்.

அவரும் அந்நிய பெண்களி டம் கடைபிடிக்கும் விதி முறைகளைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

இதில் வயது என்பது முக்கியமல்ல,பருவமடைந்தது முதல் வயதானவர்கள் வரை எல்லாருக்கும் ஒன்றுதான். ஏனெனில் இத்தனை வயதுவரை என்ற வரைமுறை மார்க்கத்தில் இல்லை.

விதவைப்பெண்ணுக்கு என்று தனியே சலுகை கிடையாது. அனைத்து பெண்களுக்கும் உள்ள பொதுவான சட்டங்கள் தான் இவர்களுக்கும்.

📚📖ஆதாரங்கள்

📘4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது – இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

📘5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்““ என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்““ என்று கூறினார்கள். 162
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

📘2611. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ”ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கவேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும்போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ”அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ”ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர” எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🈯Question no: 109🈯

    Tatoos pantrathu haram ah ethukku explain?

🈯கேள்வி எண்: 109🈯

பச்சை குத்துவது ஹராமா? விளக்கம் தேவை.

❇பதில்❇

பச்சை குத்தி கொள்வது என்பது அல்லாஹ் படைத்த இயற்கையான உருவத்தை மாற்றும் ஒரு செயலாகும்.
அல்லாஹ் நம்மை எப்படி நம்மை படைத்தானோ அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மாற்றுவது இஸ்லாத்தை பொறுத்தவரை பெரும் குற்றமாகும்.

அதுமட்டுமன்றி இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். ஒரு அற்ப அழகிற்காக ஆசைப்பட்டு படைத்த இறைவனது சாபம் வாங்க வேண்டுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

சொர்க்கத்தின் நறுமணம் பல பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலேயே வீசத் தொடங்கிவிடும். பச்சைகுத்துவது போன்ற செயல்கள் செய்வதால் சொர்கத்தின் வாடையை கூட நாம் நுகர முடியாது.

நமக்கு வழிகாட்டியாக வந்த நபி(ஸல்) அவர்கள் ஒன்றை தடுத்தால்  அதை எந்த சந்தர்ப்பத்திலும் செய்யக்கூடாது.

அல்லாஹ்வின் கருணை என்பது மிகப்பெரிய பொக்கிஷம். இது போன்ற சாதாரண அல்ப விஷயன்களுக்காக அல்லாஹ்வின் கருணையை இழக்க நேரிடும். எனவே,இது போன்ற செயல்களிலிருந்து நாம் முற்றிலும் விலகிவிட வேண்டும்.

அல்லாஹ் நம்மை படைத்த இயற்கை அழகிற்கும்,ஆராக்கியத்திற்கும் நன்றி கூறி இந்த தற்காலிக அழகில் மனம் செல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய விஞ்ஞான ஆய்வுகளும் பச்சை குத்துவது, புருவம் வடிவமைப்பது போன்ற செயல்களால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அறிவித்திருக்கிறது. எனவே இதை தவிர்த்துக் கொண்டு இம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற வேண்டும்.

📚📖ஆதாரங்கள்:

📙5931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்  பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! “இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்“ (என்பதே அந்த (திருக்குர்ஆன் 59:7 வது) வசனம்).120
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

📙5933. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

📙…… மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

=============================

👰Question no:110👰

    Pattaadai aangalukku haraam aa? illai pengalukkumaa?

👰கேள்வி:110👰

பட்டாடை ஆண்களுக்கு ஹராமா? இல்லை பெண்களுக்குமா?

🌷பதில்🌷

   பட்டாடை ஆண்களுக்கு தடுக்கப்பட்ட ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியும் ஆண்களை மிகவும் கண்டித்தார்கள். ஆண்கள் பட்டாடை அணிவது மிகவும் வெறுக்கக்கூடிய செயல் என எச்சரித்தார்கள். யாருக்கு மறுமையில் நற்பேறு வேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்கள் உலகில் அணியட்டும் என கூறினார்கள். இதிலிருந்து ஆண்களுக்கு பட்டாடை ஹராம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் பெண்கள் பட்டாடையை தாராளமாக அணிந்து கொள்ளலாம். இஸ்லாம் பெண்களுக்கு அதை தடை செய்யவில்லை.
நபி(ஸல்)அவர்கள் அன்பளிப்பாக வந்த பட்டாடைகளை பெண்களுக்கு பங்கிட்டு கொடுக்க சொன்னார்கள் என்பதிலிருந்தும், பட்டாடை வியாபாரத்தை தடுக்கவில்லை என்பதிலிருந்தும் இது பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டது என தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் ஆண்கள் அணிவதற்கு தடை செய்து பெண்களுக்கு அனுமதி உள்ளது போன்று,பட்டு ஆண்களுக்கு தடை செய்து பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. எனவே, பெண்கள் அணிவதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.

📚📖ஆதாரங்கள்:

📓4071. ஸஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) அறிவித்தார்.
மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் இப்னு கத்தாப்(ரலி) பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர்(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர்இ ”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினர். அலீ(ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர்(ரலி)இ ”உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும்இ உம்மு சலீத் அவர்கள்இ இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.” என்று கூறினார்கள். (மேலும்) ”அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோலினால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்” என்றும் உமர்(ரலி) கூறினார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

📓5981. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
(என் தந்தை) உமர்(ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டுஇ ”இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக்கிழமையிலும்இ தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ ”எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்” என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர்(ரலி)இ ”நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இ ”இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாகஇ இதை நீங்கள் விற்றுவிடலாம்; (பெண்களுக்கோஇ மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்” என்று கூறினார்கள்.
எனவேஇ உமர்(ரலி) அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

📓4198. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
”தமீம்” குலத்தைச் சேர்ந்த உத்தாரித் (பின் ஹாஜிப்) என்பவர் கடைத்தெருவில் நின்றுஇ கோடுபோட்ட பட்டு அங்கி விற்பதை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள்.
-உத்தாரித் (பன்னாட்டு) மன்னர்களுடன் தொடர்புள்ளவராகவும்இ அவர்களிடமிருந்து (பல்வேறு பொருட்களைப்) பெற்றுவருபவராகவும் இருந்தார்.-
பிறகு உமர் (ரலி) அவர்கள்இ ”அல்லாஹ்வின் தூதரே! கடைத்தெருவில் நின்றுஇ கோடு போட்ட பட்டு அங்கியை உத்தாரித் விற்பதைக்கண்டேன். அதைத் தாங்கள் வாங்கிஇ அரபுத் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போது தாங்கள் அணிந்துகொண்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். ”வெள்ளிக்கிழமையின்போதும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்குமே” என்றும் அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”மறுமையில் எந்த நற்பேறும் இல்லாதவரே இம்மையில் இந்தப் பட்டாடைகளை அணிவார்” என்று சொன்னார்கள்.
பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோடு போட்ட பட்டாடைகள் சில கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றில் ஓர் பட்டாடையை உமர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். இன்னொன்றை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்துஇ ”இதை முக்காடுகளாக வெட்டி உங்கள் பெண்களிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் தமது பட்டாடையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஇ ”அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். ஆனால்இ உத்தாரித் விற்ற பட்டாடை குறித்து நேற்று தாங்கள் வேறுவிதமாகக் கூறினீர்களே?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாகஇ இதை நீங்கள் (விற்றுப் பணம்) பெறுவதற்காகவே கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.
உசாமா (ரலி) அவர்களோ அதை அணிந்துகொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உசாமாவை உற்றுப் பார்த்தார்கள். (அவர்கள் பார்த்த பார்வையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தாம் (இவ்வாறு) செய்தது பிடிக்கவில்லை யென்பதை உசாமா உணர்ந்து கொண்டார்.
உடனே ”அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இப்படி) என்னை உற்றுப் பார்க்கிறீர்கள்? தாங்கள் தாமே இதை எனக்குக் கொடுத்தனுப்பினீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”இதை நீ அணிந்துகொள்வதற்காக உனக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாகஇ இதை முக்காடுகளாக வெட்டிஇ உன் (வீட்டுப்) பெண்களுக்குப் பங்கிடுவதற்காகவே உனக்குக் கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

📓4873. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான மேலங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள்இ பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள். மக்களோ அந்த மேலங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிட அழகானவை ஆகும்” என்று சொன்னார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ”தூமத்துல் ஜந்தல்” பகுதியின் அரசர் ”உகைதிர்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாகத் தந்தார்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அதில் ”அவர்கள்  பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்

📓”பட்டாடை அணிவதும்,  தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண் களுக்கு ஹலால் (அனுமதிக்கப் பட்டது) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: திர்மிதி 1642

📓”சாதாரண பட்டோ, அலங்காரப் பட்டோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் (காஃபிர்களாகிய) அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர் களான) நமக்கும் உரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)

நூல்: புகாரி 5426

📓நபி (ஸல்) அவர்கள் “இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5830

📓”அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கு இருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2919

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மார்க்க கேள்வி பதில்கள்

🍇Question no: 91🍇

   Love panni marriage pannalaama? Markathil anumadhi irukka?

🍇கேள்வி எண்; 91

     காதல் திருமணம் செய்யலாமா? மார்க்கத்தில் அனுமதி உண்டா?

🍂பதில்🍂

     காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பி திருமணம் செய்வது தடையில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் காதல் எப்படிப் பட்டதாக இருக்கிறது? ஆணும்,பெண்ணும் சந்தித்து,பேசி,பழகி,உலாவி,இருவரும் தனிமையான  சந்தர்ப்பத்தை உருவாக்கும் விதமாகத்தான் இருக்கிறது.

இதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.
ஒரு பெண் மஹரமான ஆணைத் தவிர யாருடனும் வெளியே செல்ல மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஒரு பெண் ஒரு ஆணை தனிமையில் சந்திப்பது ஹராம் என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு ஆணுடன் தனித்து பேசுவதை இஸ்லாம் கடுமையாக தடை செய்துள்ளது. இது போன்று ஆணும்,பெண்ணும் தனித்திருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் வந்துவிடுவான். அதுமட்டுமல்ல இது விபச்சாரமாக் ஆகிவிடும்.

எனவே காதலித்து திருமணம் முடிக்க இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விரும்பினாலோ அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒரு ஆண் விரும்பினாலோ,முறைப்படி பெரியவர்களிடம் கூறி திருமணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதித்து உள்ளது.

விரும்புவது தவறில்லை,ஆனாலும் ஆண்களை தேர்ந்தெடுப்பதில் பெண்களும், பெண்களை தேர்ந்தெடுப்பதில் ஆண்களும் மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.
அவர்கள் ஓரிறை கொள்கையுடையவர்களாக மட்டும் இருந்தால்தான் மணமுடிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

ஆகவே,இஸ்லாமியர்களாகிய நமது பெண்கள் இக்கால சீரழிவை ஏற்படுத்தும் காதலில் விழாமல்,இஸ்லாம் கூறிய அடிப்படையில் மார்க்கப்பற்றுள்ள ஆண்களை தேர்ந்தெடுத்து இஸ்லாமிய முறைப்படி மணமுடித்து,கல்யாணத்திற்கு பிறகு கணவணைமட்டும் காதலிக்க வேண்டும்.

📚📖ஆதாரங்கள்

📓
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  ﴿24:31﴾
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே!நீங்கள் வெற்றிபெறுவதற்காக நீங்கள் அனைவரும் பாவமன்னிப்பு கோரி அல்லாஹ்வின்பால் மீளுங்கள்.

📓
وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا ۚ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ ۖ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ ۖ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ  ﴿2:221﴾
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.

📓ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி 3006,

📓 திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி
புஹாரி 5233

📓இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 2611

📓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612)

📓உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)

📓நபி (ஸல்) அவர்கள் கூறி­யுள்­ளார்கள்.“அலீயே! முதல் முறை­யாகப் பெண்னைப் பார்க்கும் பார்வை உம்­மு­டை­யது. இரண்­டா­வது முறை­யாகக் பார்க்கும் பார்வை ஷைத்தானு­டை­யது. என­வே­தான் ஷைத்தான் இதற்­கு முழு கார­ண­மா­கின்றான்.” 

உண்மையிலேயே ஒரு பெண்ணை மணமுடிக்க ஒருவர் விரும்பினால் அப்பெண்ணின் பொறுப்பாளரிடம் சென்று பேசி, அந்த பெண்ணையும் நேரில் பார்த்து பின்னர் அப்பெண்ணுக்கும் அந்த நபரை பிடித்திருக்குமானால் மணமுடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தான் இஸ்லாமிய வழிமுறை. 

📓”முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.” – (நூல்: நஸயீ 3183)

*************************************

🍓Question no:92🍓

Ippozhudhu adhigarithu varum thalaaq patri…adharkaana kaaranangal yaavai? Vilakkavum..

🍓கேள்வி எண்: 92🍓

  இப்பொழுது அதிகரித்து வரும் தலாக் பற்றி……அதற்கான காரணங்கள் யாவை??? விளக்கவும்..

🍃பதில்🍃

  தலாக் அதிகமாவதற்கான முதல் காரணம் கணவன் மனைவிக்கிடையேயான புரிந்துணர்வு குறைவானதே ஆகும்.

இதற்கு மூல காரணம் மார்க்கத்தை சரிவர புரியாத திருமணம். ஒரு பெண் ஆணை தேர்ந்தெடுக்கும்போதும்,ஒரு ஆண் ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கும்போதும் மார்க்கப்பற்றை பெரிதாக பார்ப்பதில்லை. மாறாக வசதி, குடும்ப பெருமை,அழகு இதைத்தான் இன்றைய நவீன உலகில் மிக பிரதானமாக பார்க்கப்படுகிறது. இதை தவிர்த்து மார்க்கப்பற்றுள்ளவர்களை தேர்ந்தெடுத்தால் பெரும்பாலான விவாகரத்துக்கள் இல்லாமல் போகும்.

அதுபோல் இப்பொழுதுள்ள பெற்றோர்கள் பிள்ளைகளின் சம்மதத்தை ஏதோ ஒரு சடங்கிற்காகத்தான் கேட்கிறார்கள். அதுபோல் அல்லாமல் அவர்களுடைய ஆத்மார்த்தமான ஒப்புதலை பெறவேண்டும். இது போல் அல்லாமல் மறைமுக நிர்பந்தத்தின் அடிப்படையில் செய்யும் திருமணம் தோல்வியடைகிறது.

தலாக்கிற்கு இன்னுமொரு முக்கியமான காரணம் எதிர்பார்ப்பு,ஒரு விதமான கற்பனையை மனதில் வைத்து அதுபோல வாழ்க்கை வேண்டும் என மனக்கோட்டை கட்டி,அதற்கு எதிர்மறையாக நடக்கும் போது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. எனவே திருமணத்திற்கு முன் செய்யும் வீணான கற்பனையை தவிர்த்தாலே வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.

சில வீடுகளில் கணவனது அல்லது மனையின் பெற்றோர்கள் அனுபவம் என்ற பெயரில் செய்யும்  தவறான அறிவுரை பிள்ளைகளின் வாழ்வில் பிளவை ஏற்படுத்துவதாக ஆகிவிடுகிறது. எனவே சரியான வழிகாட்டியாக பெற்றோர்கள் நடந்து கொள்ளவேண்டும்.

திருமணத்திற்கு பின் ஏற்படும் தேவையற்ற சந்தேக குணங்களும் தலாக்கிற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
சில தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் உண்மையாகவே சில தவறான தொடர்பை ஏற்படுத்துவதும் விவாரத்திற்கு வழிவகுக்கிறது.

இஸ்லாம் வாழும் வழியை மிக அழகாக சொல்லிதுள்ளது. எனவே,வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது முதல் கவனமாக செயல்பட்டு,எதிர்பார்ப்புகளை குறைத்து, வீண் சந்தேகங்களை தவிர்த்து, பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் வரும்போது அதை சகித்து, பொறுமையை கடைபிடித்து, தவறான அறிவுரைகளை தள்ளிவிட்டு வாழ்க்கையில் வெற்றிபெற அனைத்து இஸ்லாமியர்களும் முயற்சி செய்து தலாக் இல்லாத சமுதாயமாக உருவாக வேண்டும்.

📚📖ஆதாரங்கள்:

📗
وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏ 
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
(அல்குர்ஆன் : 92:6)

📗2905. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)கொண்டு வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 17. பால்குடி (சட்டம்)

📗
اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ 
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  
(அல்குர்ஆன் : 24:26)

📗(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:34)

📗நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: –

மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது

யுத்தத்தின் போது

மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

============================

🍓Question no:93🍓

Kanawanuku oru manaiwi enthalawuku kattu pada wendum kanawan than manaiwi yai awaludaya Thai thanthaiyai parka sella koodathu nu sonna athuku mathipu kuduthu powa koodatha apdina than petroraym parknum nu Islam Margam kooruthu ithil epd  nadanthu kollanum?

🍓கேள்வி எண்: 93🍓

    கணவனுக்கு ஒரு மனைவி எந்தளவுக்கு கட்டுப்பட வேண்டும்?கணவன் தன் மனைவியை அவளுடைய பெற்றோரை பார்க்க போகக்கூடாது என்று சொன்னால் அதற்கு மதிப்பளித்து பார்க்க செல்ல கூடாதா? பெற்றோரை பேண இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது, இதில் எப்படி நடந்து கொள்வது?

🍃பதில்🍃

   இஸ்லாம் அல்லாஹ்விற்கும்,தூதருக்கும் கட்டுப்பட கூறியுள்ளது.
அதன் பிறகு நபி வழி நடக்கும் தலைவர்களுக்கும்(பெரியவர்களுக்கும்) கட்டுப்பட சொல்கிறது.
அதற்கு அடுத்தபடியாக கணவனுக்கு கட்டுப்பட சொல்கிறது.

ஆனால்,கணவருக்கு கட்டுப்படும் விஷயத்தில் அவர் இஸ்லாத்திற்கு முரணான விஷயங்களை கூறி அதன்படி நடக்க சொன்னால் நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை.

  பொதுவாக இஸ்லாத்தை பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்கு சில விஷயங்களை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான். அவர்கள் தான் பெண்களை நிர்வகிக்க கூடியவர்கள். இதை நாம் மறுக்க முடியாது எனினும் அல்லாஹ் கூறிய விஷயத்திற்கும்,நபி(ஸல்) காட்டித்தந்த வழிகளுக்கு மாறாக கூறினால் அதை எதிர்க்கலாம்.

  முதலில் கணவரிடம் இந்த விஷயத்தை புரிய வைக்க முயற்ச்சிக்க வேண்டும். இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். எனவே இதை மிக கவனமாக கையாள வேண்டும்.

  அவருக்கு அவருடைய பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமோ,அது போல்தான் நமக்கும் நம் பெற்றோர் முக்கியம் என்பதை உணர வைக்கவேண்டும்.

காரணமே இல்லாமல் இவ்வாறு நடந்தால் நாம் நம்முடைய ஞாயத்தை கேட்பதில் எந்தவித தவறும் கிடையாது.
ஆனால்,என்ன காரணத்திற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று தெரிந்தால் அதை சரி செய்ய முயற்சி செய்யவேண்டும்.

சில தாய்மார்கள், நம் பெண்பிள்ளகளுக்கு நல்லது செய்கிறோம் என்று சில தேவையற்ற அறிவுரைகளை கூறுவார்கள். இதுபோன்ற எங்கோ நடந்த சில விஷயங்களை கேள்விப்பட்டு சில ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இது போன்ற விஷயங்களை நாம் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டும்.

ஒருவேளை நம் பெற்றோரின் அறிவுரைகள் நம் வாழ்க்கைக்கு குழப்பம் ஏற்படுத்தும் நிலை ஏற்படுமானால், நாமும் அதுபோன்ற அறிவுரைகளை கண்டு கொள்ளாமல் விடவேண்டும். அதை செயல்படுத்த முயலும்போது இது போன்ற சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் கூறு நல்ல அறிவுரைகளுக்கு கணவன் எதிர்த்தால் நாம் அதை ஏற்கத்தேவை இல்லை.

நம் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளை வளர்த்ததுபோல்தான்,சிரமப்பட்டு வளர்த்திருப்பார்கள். அதனால்தான் அவர்கள் என்ன செய்தபோதிலும் அவர்களை அரவணைக்க இஸ்லாம் கூறியுள்ளது.

எனவே,இந்த கேள்விக்கான பதில் இஸ்லாத்திற்கு எதிராகக் கூறும் எந்த விஷயமானாலும் கணவனே ஆனாலும் கட்டுப்பட தேவையில்லை.

📚📖ஆதாரங்கள்

📕சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி   அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி   அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)

📕அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)

📕இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082

📕5205. ஆயிஷா(ரலி) அறிவித்தார்  அன்சாரிகளில் ஒரு பெண் தம் மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரின் மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் கணவர், என்னுடைய தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்““ என்று கூறினாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “வேண்டாம்! (ஒட்டுமுடிவைக்காதே) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்““ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

📕
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ  ﴿31:14﴾
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

📕
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا  ﴿4:59﴾
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
* இந்த ஆடியோவில் தனது கணவரை அவர்களுடைய பெற்றோரை பார்க்க அனுமதிக்காத மனைவி மார்களை பற்றி மவ்லவி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
அதே விதிமுறைதான்,தனது மனைவி மார்களை தனது பெற்றோரை பார்க்க அனுமதிக்காத கணவன் மார்களுக்கும்…
* மற்றும் ஒரு ஆடியோ ஏற்கனவே 38 ஆவது கேள்வியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை உங்களுக்காக👇👇👇

============================

இது கேள்வி எண் 5ஆக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை உங்களுக்காக….👇👇

🍓Question no; 94🍓

   Love birds pondra paravaigalai koottil adaithu valarkalaamaa?  islaathil anumadhi ulladhaa?

🍓 கேள்வி எண்:94🍓

லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா??? அதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா???

🍃பதில்🍃

   வீட்டில் செல்ல பிராணிகளையும்,பறவைகளையும் வீடுகளில் வளர்ப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது.
நாய் வளர்ப்பதற்கு மட்டும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஆனால்,அந்த பறவைகளை எந்த வித துன்புறுத்தலும் செய்ய அனுமதி இல்லை. சிறகுகளை வெட்டுவது,அலகுகளை வெட்டுவது,பறப்பதற்கு இடம் இல்லாத மிக சிறிய கூண்டில் அடைப்பது போன்ற செயல்கள் செய்யக் கூடாது. இதற்கு குற்றம் பிடிக்க படுவோம்.

எனவே, பறவைகளுக்கு சரியாக உணவளித்து,அதை நன்றாக கவனித்து,அதன் துணையுடன்.. அது துன்பப்படாத வகையில் வளர்த்தால் எந்த வித தடையும் கிடையாது.தாராளமாக வளர்க்கலாம்.

📚📖ஆதாரங்கள்

📔உயிர்ப் பிராணிகள் வதைக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5513

📔உயிரினங்களின் முகத்தில் வடு ஏற்படுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2953

📔2365. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான்.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 42. முஸாக்காத் – நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்

📔3227. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது) “உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்றார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🌺Question no:95🌺

   Maadhavidaayin bodhu nagamvetta koodadhu, veettil thozhum idatthirkku sella koodadhu ena solgiraargaley! Ivaiyellaam maarkathil ullavaiya? Maarkathil namakku sonnavaigal yaavai?

🌺கேள்வி எண்:95🌺

  மாதவிடாயின் போது..நகம் வெட்ட கூடாது,வீட்டில் தொழும் இடத்திற்கு செல்லாதே!! அது தூய்மையான இடம் என பல conditions போடுகிறார்கள்…இவையெல்லாம் மார்க்கத்தில் உள்ளவைகளா?? மார்க்கத்தில் எமக்கு சொன்னவைகள் யாவை???

🍀பதில்🍀

  மாதவிடாய் சமயங்களில் தொழுவது,நோன்பு நோற்பது,கஃபாவை வலம் வருதல்,பள்ளிகளுக்குள் நுழைதல் மற்றும் மணமான பெண்கள் உடலுறவு கொள்வது…இந்த விஷயங்கள் மட்டும்தான் தடுக்கப்பட்டது.
அது தவிர ஏனைய விஷயங்களுக்கு தடை கிடையாது.

தடுக்கப்பட்ட விஷயங்கள் தவிர மற்ற விஷயங்கள் செய்யக்கூடாது என்பது மூடநம்பிக்கையே ஆகும். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை

இது போன்ற சமயங்களில் தாராளமாக வீட்டில் எல்லா இடங்களிலும் செல்லலாம்,
நகம் வெட்டுவது போன்ற செயல்களை தாராளமாக செய்யலாம்.

இஸ்லாம் ஒருபோதும் நமக்கு சிரமம் தரும் காரியங்களை கற்றுத்தந்ததில்லை.

📚📖ஆதாரங்கள்

📘294. “நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். “ஸரிஃப்“ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, “உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?“ என்று கேட்டார்கள். நான் “ஆம்!“ என்றேன். “இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்“ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் “குர்பானி“ கொடுத்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📘331. “மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைச் சுததம் செய்துவிட்டுத் தொழுது கொள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📘333. “எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும்” என்று மைமூனா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📘1951. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.”  இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

📘
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ  ﴿2:222﴾
2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌺Question no:96🌺

      Madhavidai podhu markas pohalaam pengal ?

🌺கேள்வி எண்:96🌺

   மாதவிடாயின் போது பள்ளிவாசல் போகலாமா?

🌹பதில்🌹

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்கு போகலாமா என கேள்வி கேட்டுள்ளனர்..
மாதவிடாயின் போது பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதியில்லை..
குளிப்பு கடமையாக இருக்கும் நிலையில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி பள்ளிக்குள் வர அனுமதியில்லை..
அல்லாஹ் ஒரு விஷயத்தை தடை செய்துவிட்டால் அதற்கு எதிராக செயல்பட நமக்கு எந்த உரிமையும் இல்லை..

📖📚ஆதாரங்கள்

📕
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 33:36)

அல்லாஹ் குளிப்பு கடமையில்லாமல் பள்ளிக்குள் வரக்கூடதென கட்டளையிடுகின்றான்..

📕
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:43)

ஆகவே, மாதவிடாய் என்பது ஒரு உபாதை.. இந்த கேள்வியை கேட்ட காரணம் பயான் போன்ற நிகழ்ச்சிக்களுகாவது பள்ளியில் உதிரப்போக்குள்ள பெண்கள் செல்ல அனுமதி உண்டா என்பதுதான்.. அல்லாஹ் தெள்ளத்தெளிவாக கூறியுள்ளான்.. மாதவிலக்குள்ள பெண்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் பள்ளியில் செல்ல அனுமதியில்லை..
அது குளிப்பு கடமையான ஆண்களாக இருந்தாலும் சரியே!
பள்ளிக்கு வெளியே அமர்ந்து உரையினை கேட்பதில் தவறல்ல..
ஆனால்,தற்போதுள்ள காலகட்டத்தில் பல நிலைகளில் இஸ்லாத்தைப்பற்றிய தகவல்களை இணையத்தின் வாயிலாகவும்,புத்தகங்களின் வாயிலாகவும் அறிந்து வருகின்றோம்..
அப்படிப்பட்ட நிலையை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளான்..
பெருநாள் திடலில் மாதவிலக்குள்ள பெண்களும் கலந்து கொள்ள வேண்டுமென நபியவர்கள் கூறியுள்ளார்கள்..
ஆனாலும் அவர்கள் தொழுகை நடக்கும் இடத்தை விட்டு விலகி இருக்க வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது!!!

📕351. இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்“ என்றும் கட்டளையிடப்பட்டோம்.  நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் “இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?“ எனக் கேட்டதற்கு, “அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்“ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்” என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

ஆகவே மாதவிடாய் உள்ள பெண்கள் பள்ளிக்குள் செல்ல அனுமதி இல்லை..
ஆனால் நாம் செல்லும் பாதையில்  பள்ளி இருந்து அதை கடந்து செல்வதில் குற்றமுமில்லை!!!

===========================

🌺Question no:97🌺

Thirumanathin podhu manappen manamaganidam thaan manaivi’yaga irukkum kaalathil thannai thavira veru pennai manamudikka kudadhu endru vaakurudhi vaangalama?? Islaathil idharku anumadhi iruka?? Or idhu Allah halaal aakiyadhai haaram aakum vishayamaga eduka paduma endru vilakavum..

🌺கேள்வி எண்:97🌺

    திருமணத்தின் போது மணப்பெண் மணமகனிடம் தான் மனைவியாக இருக்கும் காலத்தில் தன்னை தவிர வேறு பெண்ணை மணமுடிக்க கூடாது என வாக்குறுதி வாங்கலாமா? இதற்கு அனுமதி உண்டா? இல்லை அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஹராம் ஆக்கும் விஷயமாக எடுக்கப்படுமா?விளக்கவும்.

🍀பதில்🍀

    அல்லாஹ் தன் திருக்குரானில் ஆண்களுக்கு,தனக்கு உடல் மற்றும் பொருளாதார சக்தி இருக்கும் பட்சத்தில் அவர் விரும்பினால் நான்கு திருமணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளான்.

    அல்லாஹ் இட்ட கட்டளைக்கு எதிராக நாம் இவ்வாறு கூடாதென வாக்குறுதி வாங்குவது கூடாது. இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்ததாகிவிடும்.

அதேபோல் அல்லாஹ் அனுமதித்த ஒருவிஷயத்தை நாமும் தடுக்க முடியாது. இவ்வாறு தடுத்தால் இஸ்லாத்தை விளங்கிக்கொள்ளாதவர்களாகி விடுவோம்.

இருந்தாலும்,திருமணத்திற்கு பின்பு இரண்டாம் திருமணம் செய்யும் நிலையில் முதல் மனைவியின் அனுமதி தேவைப்படுகிறது எதனால் என்றால்,ஒரு மனைவியுன் ஒருவன் வாழும் போது அவளது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தன் பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்கு கிடைத்து வந்த நாட்களில் பாதி குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறிபோகிறது.

இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் இந்நிலையில் அவளுக்கு தெரிவிக்கவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

இதன்படி முதல் மனைவியிடம் இரண்டாம் திருமணத்தை பற்றி கேட்கும்போது அதை ஏற்று கொண்டால் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் ஏற்கவில்லை எனில் முதல் மனைவி ‘வாழ மாட்டேன்’ எனும் முடிவை எடுக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.

எனவே,முதல் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைக்காக அவளிடம் இதை தெரிவிக்காமல் இருக்கமுடியாது.

ஆனால் அன்பின்,புரிதலின் அடிப்படையில் கோரிக்கையாக வைக்கலாம். உதாரணமாக நபி(ஸல்) அபூ ஜஹ்லுடைய மகளை அலீ(ரலி) அவர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கு அனுமதி கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை, அதற்கு ஒரு காரணம் அல்லாஹ்வின் தூதரின் மகளும்,அல்லாஹ்வின் விரோதியின் மகளும் ஒன்று சேரமுடியாது என்பதாக இருந்தாலும், மற்றொரு காரணம் தனது மகள் ஃபாத்திமா(ரலி) ஏற்றுக்கொள்ளாததாலும்,வேதனைப் படுவதாலும் ஆகும். எனவே இப்படி கேட்பதில் தவறில்லை என்று இச்சம்பவத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் இன்னொரு விஷயத்தையும் இந்த ஆதாரத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். நபி(ஸல்)கட்டாயப் படுத்தவில்லை. அலி(ரலி) யின் இரண்டாம் திருமணத்திற்கு அனுமதி
அளிக்க மாட்டேன்,ஆனால் அவர் அதை விரும்பினால் என் மகளை விவாகவிலக்கு செய்துவிடுவேன் என்று கூறினார். இதிலிருந்து அறிவது என்னவென்றால் தாராளமாக கேட்கலாம் ஆனால் அல்லாஹ் இட்ட கட்டளைக்கு மாறாக நிர்பந்திக்க கூடாது. அப்படி நிர்பந்தித்தால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியவர்களாகிவிடுவோம்

இன்னொரு சந்தர்ப்பத்தில் கூட நபி(ஸல்) அவர்கள் தன் மருமகன் அபுல் ஆஸ்(ரலி) அவர்களிடம் இரண்டாம் திருமணம் செய்யக்கூடாது என்று கேட்டதாகவும், அதை நிறைவேற்றியதால் நபி(ஸல்) அவர்கள் புகழ்ந்ததாகவும் ஹதீஸ்கள் உள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை தன் மருமகன் மீறியிருந்தால் வருத்தப்பட்டிருப்பார்கள் அல்லது மகளை விலக்கியிருப்பார்களே தவிர நிச்சயம் தடுத்திருக்க மாட்டார்கள் ஏனெனில் இது அல்லாஹ் இட்ட கட்டளை. அதை மாற்ற அல்லாஹ் யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை.

இந்த கேள்விக்கான
பதில்…மணமகள் மணமகனிடம், இன்னொரு திருமணம் செய்யக்கூடாது என கோரிக்கையாக வைக்க தாராளமாக அனுமதி உண்டு. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. தவறு கிடையாது. ஆனால் தடுக்க அனுமதி கிடையாது.  வாக்கு மீறல் அது வேறுவிஷயம்.
ஆனால் அடுத்த திருமணத்தை தடுக்க உரிமை இல்லை. அவ்வாறு தடுத்தால் அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தடுத்தவர்களாகி விடுவோம்.

📚📖ஆதாரங்கள்:

📙وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَىٰ فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَلَّا تَعُولُوا  ﴿4:3﴾
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

📙
يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ۖ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ  ﴿66:1﴾
66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

📙
قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ ۚ وَاللَّهُ مَوْلَاكُمْ ۖ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ  ﴿66:2﴾
66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

📙
•••••••••••••••5230. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, “ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை என் வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்““ என்று கூறினார்கள். 159
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🌺Question no:98🌺

   Yaseen sooravukendru yedhenum thani sirappugal unda? silar undu endrum,silar illai endrum koorukiraargal. Idharkku thelivaana vilakkam tharavum?

🌺கேள்வி எண்: 98🌺

யாஸின் சூராவுக்கென்று ஏதேனும் தனிசிறப்புகள் உண்டா ?சிலர் உண்டு என்று கூறிகிறார்கள் ,,சிலர் இல்லை என்று கூறுகிறார்கள் இதற்கு தெளிவான விளக்கம் தரவும்?

🍀 பதில் 🍀

நம் குரானில் உள்ள எல்லா வசனங்களுமே சிற்ப்புக்குறியதுதான் எனிமும் சில சூராக்களின் மகிமைகளை  அவர்கள் பல ஹதீஸ்களில் பதிவாகி உள்ளது.

உதாரணமாக சூரா அல்ஃபாத்திஹா,சூரா அல் பகரா, சூரா ஆலு இம்ரான், சூரத்துல் கஹ்ப்,குரானின் இறுதி மூன்று அத்தியாயங்கள்….

இப்படி சில சூராக்கள் சிறப்புவாய்ந்ததாக இருந்தாலும் சூரா யாஸீனுக்கென்று ஒரு தனி சிறப்பில்லை.
குரானில் உள்ள மற்ற சூராக்களுக்கு இருக்கும் சிறப்பே சூரா யாஸீனுக்கும் உள்ளது.

மரணித்த வீட்டில இறந்தவருக்காக் சூரா யாசீன் ஓதவேண்டும்,இதை ஓதினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும், இது திருக்குரானின் இதயம் போன்ற செய்திகள் திர்மிதி, இப்னுமாஜா,தாரமி,இப்னு ஹிப்பான் போன்ற நூல்களில் பதிவாகியுள்ளது.

ஆனால் இது போன்றுள்ள அனைத்து ஹதீஸ்களும் மிக பலவீனமானது. இதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

எடுத்துக்காட்டாக…

✒2812 ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர் ஆனின் இதயம் யாஸீன் ஆகும். யார் அதை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை குர்ஆன் ஓதிய நன்மையைப் பதிவு செய்கிறான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் திர்மிதி

இந்த ஹதீஸ் அபூமுஹம்மத் எனும் ஹாரூன் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான ஹதீஸ் என்று திர்மிதி இமாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

இது போல் யாஸீன் அத்தியாயத்தின் தனிச்சிறப்பு பற்றிய எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன..

இது தொடர்பான மற்ற ஹதீஸ்களும்,உலகில் உள்ள பல்வேறு மார்க்க அறிஞர்கள்…நூல்களின் தன்மை,அறிவிப்பாளர்களின் தன்மை, எந்த கால கட்டத்தில் பதிவு செய்யப்பட்டது என்றெல்லாம் ஆராய்ந்து யாஸீன் தொடர்பாக வரும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானது என ஒருமித்து அறிவித்துள்ளனர். பகுத்தறிவுள்ள நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இத்தகைய ஆய்வின் அடிப்படையில் சூரா யாஸீனுக்கென எத்தகைய தனி சிறப்பும் கிடையாது.
குரானை ஓதினால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் இதற்கு உண்டு.

அதற்காக யாஸீனை ஓதக்கூடாது என்று விளங்கிக்கொள்ள கூடாது. நிச்சயம் குரான் ஓதுவதற்கான அனைத்து நன்மைகளும் கிடைக்கும் ஆனால் தனி சிறப்பு இல்லை அவ்வளவுதான்.

எனவே, நாம் குரானில் உள்ள அனைத்து சூராக்களையும் ஓதி இறைவனின் அருளை பெறுவோம்! இன்ஷா அல்லாஹ்.

குரானை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகளில் சில..👇👇

📚📖ஆதாரங்கள்

📘நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்: அபூ உமாமா (ரலி))

📘நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒர் எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). (திர்மிதி: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி))

📘நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனைத் திறமையாக நன்முறையில் ஓதுபவர் நல்லோர்களான சங்கைமிகு மலக்குகளுடன் சுவர்க்கத்தில் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) கஷ்டப்பட்டவராகத் திக்கித் திக்கி ஓதுகிறவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம் : ஆயிஷா (ரலி))

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;:::::::

🌺Question no: 99🌺

En  matra  manithargalai kuripidum pothu mariyathaiyaga avargal evargal endru kupidukinrom, allahuthalavai mattum avan Evan endru alaikirom?

🌺கேள்வி எண்:99🌺

  ஏன் மற்ற மனிதர்களை குறிப்பிடும் போது மரியாதையாக அவர்கள், இவர்கள் என்று குறிப்பிடுகிறோம். அல்லாஹ்வை மட்டும் அவன் இவன் என்று அழைக்கிறோம்?

🍀பதில்🍀

இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைஇல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம்சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்குமட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலைஏற்படாது.

அவன்’ என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபுமொழியில் ஹூவ’ என்ற வார்த்தையைப்பயன்படுத்துவார்கள். அவர்கள்’ என்று பலரைக்குறிப்பதற்கு ஹூம்’ என்ற வார்த்தையைப்பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிக்கும் போதுமரியாதைக்காக ஹூம்’ (அவர்கள்) என்று கூறவேமாட்டார்கள்.

அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போதுஹூவ’ (அவன்) என்று தான் குர்ஆனில்பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக்குறிப்பிடும் போது ஹூம்’ (அவர்கள்) என்றுஅல்லாஹ் பயன்படுத்தவில்லை.

அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன்போன்றவர்களுக்கும் ஹூவ’ (அவன்) என்று தான்இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக்குறிப்பிடுவதாக இருந்தாலும் ஹூவ’என்று தான்கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப்பன்மையாக மாற்றுவது அரபு மொழியில்கிடையாது.

ஹூவ’ (அவன்) என்ற குறிப்பிடும் போது ‘பலரைப்பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும்தான் கூறப்படுகிறது’ என்று தான் அரபுகள்விளங்குவார்களே தவிர, அவர்மரியாதைக்குரியவரா அல்லவா என்பதைஇவ்வார்த்தையிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்

ஆங்கில மொழியை உதாரணமாக எடுத்தாலும்,ஆங்கில இலக்கண அடிப்படையில் “he”என்பது கடவுள், பெரியவர்,சிறியவர் என அனைவருக்கும் உபயோகப்படுத்தப்படும்.

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலைதான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக்குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இதுதான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும்ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.

ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக்குறிப்பிடுவதற் குரிய சொல்லை (அவர் என்றபன்மைச் சொல்லை) மரியாதைக்காகப்பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது.அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும்பன்மையாக்கி அவர்கள்’ என்று பயன்படுத்துவதும்வழக்கத்திற்கு வந்தது. மரியாதை கொடுக்காதபோது அவன் எனவும்,

மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரைகுறிப்பிடும் போது அவர் எனவும்,
அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரைஅவர்கள் எனவும் பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்குவருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவுமரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன்’என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறேகுறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான் கம்பன் கூறுகிறான் ராமன் வில்லை ஒடித்தான் என்றெல்லாம் இன்றும்கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

அது போலவே மரியாதைப் பன்மை தமிழில்வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப்படர்க்கையாகக் குறிப்பிடும் போது அவன்’ என்றும்,முன்னிலையாகக் குறிப்பிடும் போது நீ’ என்றும்தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும்தொடர்கிறது.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்புநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ்இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்களைக்குறிப்பிடும் போது அவர்கள்’ என மரியாதைப்பன்மையில் குறிப்பிட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அதுமரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அதுமரியாதைக் குறைவு என்போம்.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின்கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மைவழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான்என்பதே இதற்குக் காரணம்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அதுமரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தைஅவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவுஎன்று கருதுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப்பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ்இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதேஇதற்குக் காரணம்.
அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்றமுஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்குஅளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதைஅளிப்பதைக் காணலாம்.

எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப்பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம்முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில்பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும்,கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம்அறவே இல்லை.

கடவுளை அவன்’ என்று குறிப்பிடுவது மரியாதைக்குறை வுக்காக அல்ல என்பதை இதிலிருந்துஅறிந்து கொள்ளலாம்.

இன்னொரு காரணத்துக்காகவும் முஸ்லிம்கள்இறைவனை அவன்’ என்று ஒருமையில்குறிப்பிடுகின்றனர்.

‘அல்லாஹ் கூறினார்கள்’ எனக் கூறும் போதுநிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தைஅது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும்மரியாதையை விட ஏகத்துவம் மிகவும்முக்கியமானதாகும்.
அல்லாஹ்வை அவர்கள்’ என்று கூறிப் பழகிவிட்டால் நிறைய அல்லாஹ்கள்இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில்நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால்இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.
____________________________________

🍉Question no: 100🍉

  Nabi (sal) avargal kaalathil nabiyavargalai paartha irandu sahaabakkal yaar?
Avargal hilr,Easa(alai) endru hadeesil ulladharkana aadharam enna?

🍉கேள்வி எண்:100🍉

   நபிகளார்காலத்தில் நபியவர்களை பார்த்த இரண்டு ஸஹாபாக்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் அவர்கள் யார்?
ஹிள்ரு ( அலை), ஈஸா நபி என்று ஹதீஸ்ல் உள்ளதற்கான ஆதாரம் தருக :::::

🌀பதில்🌀

இதில் முதலாவதாக ஈஸா(அலை) நபி பற்றி பார்ப்போம்.

✒ஈஸா(அலை) நபி சஹாபியா?

முகம்மது நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போது ஒவ்வொரு நபியையும் சந்தித்தாக ஹதீஸ்கள் உள்ளது. அப்படி அவர் ஈஸா(அலை) சந்திக்கும்போது நபி(ஸல்) அவர்களை நல்ல சகோதரரே! என்று அழைத்தார். இந்த ஆதாரத்திலிருந்து ஈஸா(அலை) நபி அவர்கள்,நபி(ஸல்)அவர்களுக்கு கொள்கை ரீதியிலான சகோதரர் ஆவார். ஆனால் இருவரும் பூமியில் சமகாலத்தில் வாழ்ந்த தோழர்கள் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து இஸ்லாத்திற்காக பாடுபட்டிருப்பார்கள். இதற்கு எந்த வித சான்றுகளும் கிடையாது.

✒ஈஸா(அலை) உயிருடன் இருக்கிறாரா?

அல்லாஹ் ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு அற்புதத்தை அளித்தான். அதில் நபி ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதத்தில் ஒன்று அவர் உயிரோடு வானில் உயர்த்தப்பட்டது. அவர் யுகமுடிவு நாள் நெருங்கும்போது தஜ்ஜாலை அழிக்க ஈஸா (அலை)நபி பூமிக்கு அனுப்புவான் என பல சான்றுகள் உள்ளன.
ஆனால் அவர் உயிரோடு இருந்தாலும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

📚📖ஆதாரங்கள்

📙ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் “வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் “உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்” என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 225

📙மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2476, 3448, 3449

📙ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும்,கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 221

**************************************

✒அடுத்த விஷயமாக ஹிழ்ரு அவர்களை பற்றி பார்ப்போம்.
ஒரு சாரார் இவரை நபி என்றும்,ஒரு சாரார் இவரை நபித்தோழர் என்றும்,ஒரு சாரார் இவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இவை அனைத்துமே நம்பத்தகாத செய்தியாகும்.

உதாரணமாக,ஒரு நபி பிரசாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இன்னுமொரு நபி அனுப்பப்பட்டால் அந்த நபி மற்ற நபிக்கு பக்கபலமாக நின்று உதவ வேண்டும் என்ற உறுதிமொழியில் நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரசாரப் பணியை செய்து பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி பல யுத்தங்களை சந்தித்து போராடியபோது ஹிழ்ரு உயிருடன் இருந்தால் ஏன் முன்வந்து உதவவில்லை? நபியவர்களுக்கு பக்கபலமாக நின்று ஏன் துணை புரியவில்லை? அவர்கள் என்றென்றும் உயிரோடு இருப்பவர் என்றால் அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியை ஏன் நிறைவேற்றவில்லை? அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாற்றமாக ஹிழ்ரு ஓடி ஒழிந்திருப் பார்கள் என நம்பலாமா? குற்றம் சாட்டலாமா? நிச்சயமாக முடியாது, கூடாது. அவர்கள் உயிரோடு இல்லை. அதனால்தான் முஹம்மது நபியவர்களை சந்திக்கவில்லை. உதவி செய்ய வரவில்லை என்பதே உண்மையாகும்.

சமகாலத்தில் இரு நபிமார்கள் மூன்று நபிமார்கள் பணிபுரிந்துள்ளார்கள். வாழ்ந்துள்ளார்கள் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

ஹிழ்ரு அவர்கள் கல்வி அறிவு கொடுக்கப்பட்ட ஒரு அடியார். அவரிடம் மூஸா (அலை) பல விடயங்களை அறிந்து கொண்டார் என்று அல்லாஹ் (18:60-82) கூறுகிறான். ஹிழ்ரு அவர்கள் முஹம்மது நபியின் காலத்தில் வாழ்நதிருந்தால் அதனை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டு இருப்பான். அல்லது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஹிழ்ரு அவர்கள் நபியவர்களின் காலத்திலும் உயிரோடு இருக்கவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

கீழே கொடுக்கப்பட்ட 3:81 வசனத்திற்கு விளக்கமாக இந்த நபிமொழி காணப்படுகிறது. மூஸா நபி உயிருடன் இருந்தால் அவரும் முஹம்மது நபியை ஈமான் கொண்டு முஹம்மது நபியுடைய ஷரீஅத்தை பின்பற்றி துணை நிற்கவேண்டும். ஆனால் மூஸா நபி அன்று உயிருடன் இருக்கவில்லை. ஹிழ்ரு அவர்கள் உயிரோடு இருந்தால் அவர் கண்டிப்பாக முன் வந்து ஈமான் கொண்டு இந்த ஷரீஅத்திற்கு துணை நின்றிருக்க வேண்டும். அவர்களும் உயிருடன் இருக்கவில்லை என்பதற்கு இதுவும் மிகச் சிறந்த சான்றாகும்.

கீழ் காணும் ஆதாரத்திலிருந்து,
நபியவர்களின் காலத்தில்  ஹிழ்ரு அவர்கள் உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் நூறு ஆண்டுகளுக்குப் பின் அவரும் மரணித்தாக வேண்டும். நித்திய உயிர் பெறமுடியாது. எனவே அவர் அன்றும் உயிரோடு இல்லை. இன்றும் உயிரோடு இல்லை இனியும் உயிரோடு இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்று இது.

எனவே ஹிழ்ரு அவர்கள் சாகாவரம் பெற்றவர் என்றும் உயிர் வாழும் மனிதர் என்று கூறுவது வெறும் கற்பனையும் கட்டுக் கதைகளுமே தவிர வேறில்லை.

ஹிழ்ரு அவர்கள் நித்திய உயிர் பெற்றவர் என்று கதையளப்பவர்கள் தாங்கள் சொல்லும் கதை பொய்யானது என்பதற்கு “வருடம் தோறும் இல்யாஸ் (ரஹ்) அவர்களை சந்தித்து ஹிழ்ரு அவர்கள் ஸலாம் சொல்கிறார்” என்று கூறும் செய்தியே போதிய சான்றாகும். ஹிழ்ரு அவர்களை நித்திய ஜீவனாக முயன்று கடைசியில் இல்யாஸ் (அலை) அவர்களையும் நித்திய ஜீவனாக ஆக்கி விட்டார்கள்? பொய்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்பதற்கு அவர்களுடைய அற்புத புராண கதைகளே சான்றாகி விட்டது.

எனவே ஹிழ்ரு அவர்கள் நபித்தோழர் என்பதற்கு சான்றுகள் கிடையாது.
அவர்கள் நபிகளை சந்தித்ததும் இல்லை.
ஹிழ்ரு அவர்கள் நபி என்பதற்கும் ஆதாரங்கள் கிடையாது.
அவர் மூஸா(அலை) நபி காலத்தில் கல்வி அறிவு கொடுக்கப்பட்ட ஒரு அடியாரே ஆகும்.

📚📖ஆதாரங்கள்

📘
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ ۚ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ  ﴿3:81﴾
3:81. (நினைவு கூருங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.

📘
فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِّنْ عِندِنَا وَعَلَّمْنَاهُ مِن لَّدُنَّا عِلْمًا  ﴿18:65﴾
18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.

📘601. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் தம் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் நபி(ஸல்) அவர்கள் எழுந்து “இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில் இன்று பூமியில் இருக்கும் எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பின் நடப்பது பற்றி (உலகம் அழிந்து விடுமோ என்று) தவறான முறையில் மக்கள் விளங்கினர். நபி(ஸல்) அவர்கள் கூறியது இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இருக்க மாட்டார்கள் என்பதைத் தான். இதன் மூலம் அன்று இருந்த சமுதாயம் நூறு ஆண்டுகளுக்குள் முடிந்து போவர் என்பதையே நபி(ஸல்) அவர்கள் கருதினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்
***********************************
✒ஆனால் ஷஹீதான நபித்தோழர்கள் பலர் இறந்தாலும் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களின் ஆத்மா பச்சை நிற பறவைகளாக அல்லாஹ்வின் அர்ஷை சுற்றிக்கொண்டிருக்கிறது.

📚📖ஆதாரங்கள்

📗3834. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ”(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, ”நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ”நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர். இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, ”இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்படவேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்

📗
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ  ﴿3:169﴾
3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மார்க்க கேள்வி பதில்கள்.

🍒Question no:81🍒

   Orumurai Ayisha (rali) avargal nabi(sal) avargalidam,” Allahvin thoodharey! Pennin meedhu magathaana urimaiyullavar yaar?” endru ketargal. Adharkku nabi(sal) avargal “avaladhu kanavar” endraargal. Ayisha (rali) avargal “aanin meedhu miga magathaana urumaitullavar yaar?” endru ketaargal. Nabi(sal) avargal “avanadhu thaai” endraargal.(musnathul bassaar)

Idhu saheehaanadha?

🍒கேள்வி எண்: 81🍒

ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! பெண்ணின் மீது மிக மகத்தான உரிமை உள்ளவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அவளது கணவர்” என்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள், ”ஆணின் மீது மிக மகத்தான உரிமையுள்ளவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ”அவனது தாய்” என்றார்கள்.(முஸ்னதுல் பஸ்ஸார்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

🌾பதில்🌾

    பல ஹதீஸ்களில் கணவனுக்கு மனைவி மீதுள்ள உரிமையும்,மனைவிக்கு கணவன் மீதுள்ள உரிமைகளும்,பிள்ளைக்கு தாய் மீதுள்ள உரிமைகளும்,தாய்க்கு பிள்ளை மீதுள்ள உரிமைகள் பற்றி கூறப்பட்டிருந்தாலும்…
மேலே கூறப்பட்ட செய்தி பலவீனமான ஹதீஸ் வரிசையிலே வருகிறது.

இது ஆதாரபூர்வமான ஹதீஸ் கிடையாது.

************************************
🍓Question no; 82🍓

Evvalav thaan irunthaalum eeman koodi kuraithey.
Adhikamaha seithanukku valipattu naveena jaahileyathil moolhi vidurom.
eemanai puthuppikka yenna  valimuraihal
Please sollunga?

🍓கேள்வி எண்: 82🍓

  எவ்வளவு தான் இருந்தாலும் ஈமான் கூடி குறைகிறது.
அதிகமாக ஷைத்தானிய எண்ணங்களில் மூழ்கடிக்கப் படுகிறோம்,
ஈமானை புதுப்பிக்கும் வழி என்ன?

🍀பதில்🍀

    உலகில் உள்ள பெரும்பாலான மூஃமீனுக்கும் பொதுவாக காணப்படும் விஷயங்களில் ஈமான் கூடி குறையும் பிரச்சனை உள்ளது.

  பொதுவாக நமக்கு சோதனைகள் ஏற்படும் சமயங்களில்,ஏதேனும் திடுக்கிடும் விபத்துகளை பற்றி கேள்விப் படும்போது,ரமலான் மாதங்களில் ஈமான் சற்று கூடுவதையும்,
சாதாரண சமயங்களில் ஈமானிய சிந்தனை குறைவதையும் அறியலாம்.

  இது இயற்கையான ஒன்றுதான் எனினும் மரணத்தை எதிர்நோக்கியும்,கியாமத்து நாளை எண்ணிப் பார்த்தும் இருந்தால் ஈமானிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

மூஃமீன்களுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலை ஆகும்,சிறைச்சாலயில் சில பல கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும்,சுதந்திரமாக செயல்பட இயலாது, என்பதை நினைவில் வைத்தாலே உலக ஆசைகளை கட்டுப்படுத்த இயலும்.
மேலும் உலகத்தில் நாம் சாதாரண வழிப்போக்கர்கள்,இதில் எப்போது வேண்டுமானால் செல்ல தயாராக இருக்க வேண்டி வரும் என்பதை நினைவில் அவ்வப்போது கொண்டு வந்தாலே ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபடலாம்.

  ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்கள்தாம்,ஆனால் அந்த தவறிலிருந்து விடுபட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி மீண்டுவிட வேண்டும்.

ஒவ்வொரு முறை ஈமானில் உறுதி குறையும்போதும் படைத்த இறைவன் நம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என சிந்திக்கும் மனிதன் தவறுகள் செய்வதிலிருந்தும், தனது இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்தும் தன்னை தற்காத்துக் கொண்டு மறுமை வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறான்.

மறைவான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் மனிதன் இறை விருப்பத்திற்க்கு எதிரான காரியங்கள் செய்வதை விட்டும் இந்த தஃக்வா அவனை காக்கின்றது. அதன் மூலம் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவனை கூட்டிச் செல்கிறது.

அல்லாஹ்வின் பாதையில் தம்முடைய வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இவ்வுலக சோதனை என்பது நிச்சயம். அதனை மறுமை பயன்களுக்காக சகித்துக் கொள்ளும் சகிப்புத்தன்மையே பக்குவப்பட்ட ஈமானுக்கு உகந்ததாகும். மறுமை வெற்றிக்கும் உரியதாகும்.

சோதனைகளின் போது இறைவனை நினைவு கூறுவதை போலவே சந்தோஷத்தின் போதும் நினைவு கூறினால்,வழி மாறுவதிலிருந்து பாதுகாக்கப்படுவோம்.

இதற்கு தான் இஸ்லாம் வகுத்திருக்கும் அருமையான வழி தொழுகை,ஒவ்வொரு தொழுகையின் போதும் அல்லாஹ்வை ஆழமாக நினைவு கூறுவதால் ஈமான் உறுதிப்படும்.

நோன்பு அவ்வப்பொழுது வைப்பதன் மூலமும் பாட்டரி சார்ஜ் ஆவது போல் உள்ளம் தூய்மை படுத்தப்படும்.

கோபத்தின் போதும்,அச்சத்தின் போதும் ஷைத்தான் ஊசலாடி உள்ளத்தை கெடுப்பான். இதுபோன்ற சமயத்தில் நெருப்பை நீரை கொண்டு அனைக்கும் விதமாக உளூ செய்து கோபத்தை தணிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் நேசத்தை பெறுவதற்கு  தொழுகை,நோன்பில் மட்டும்தான் என்றில்லை,.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உதாரணமாக கணவன், குழந்தைகளை கவனிப்பது, உறவினர்களை நேசிப்பது,அண்டை வீட்டாருடன் நட்பு,நோயாளியை சென்று பார்ப்பது,தாய் தந்தையை அழகிய முறையில் கவனிப்பது,சுத்தமாக நாம் இருப்பது, சுற்று புறத்தை சுத்தமாக வைப்பது,பொது சேவை இப்படி நாம் வாழும் நம் வாழ்க்கையில் அனைத்து செயல்களிலும் உள்ளது. இஸ்லாம் கூறிய வழியில் நம் ஒவ்வொரு செயல்களை அமைத்தாலே ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

ஒரு வேலையும் செய்யும்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுவதின்(திக்ரு)மூலம் ஈமான் உறுதிப்படும்.

மனம் ஷைத்தானால் ஊசலாடும்போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரி மீண்டால் வாழ்க்கை முழுதும் ஈமானோடு இருப்பது உறுதி.

எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.

📚📖ஆதாரங்கள்.

📘 அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)

📘
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ  ﴿21:35﴾
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

📘6479. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  (தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.)  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘7405. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:  என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு

📘6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு“ என்றார்கள்.  (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)  “நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு“ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘6417. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.  (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:  (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் “சூழ்ந்துள்ள“ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட“ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும். 11
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘6436. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘6485. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘6487. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

📘
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  ﴿3:200﴾
3:200. முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

📘என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6664

📘யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் தான் ஈமானை புரணப்படுத்திக் கொண்டவர்.
அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி)
ஆதாரம்: அபூதாவூத்(4061)

📘3276. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?“ என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “உன் இறைவனைப் படைத்தவர் யார்?“ என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

📘3285. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் சத்தத்துடன் காற்றைவிட்டுக் கொண்டு திரும்பி ஓடி விடுகிறான். பாங்கு சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் திரும்பி ஒடி விடுகிறான். இகாமத் சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, “இப்படி இப்படியெல்லாம் நினைத்துப் பார்” என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்துகள் தொழுதோமா, நான்கு ரக்அத்துகள் தொழுதோமா என்று தெரியாமல் போய் விடுகிறது. மூன்று ரக்அத்துக்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால் அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

🍓Question no: 83🍓

   Islaam alladhavar thirumanathirkku sellalaama?

🍓கேள்வி எண்; 83🍓

இஸ்லாம் அல்லாதவர் திருமணத்திற்கு செல்லலாமா?

🍀பதில்🍀

      இஸ்லாம் காட்டித்தராத கிரியைகள் நடக்கும் வைபவங்களில் கலந்து கொள்வதற்கு இஸ்லாம் தடைவிதித்துள்ளது.

இஸ்லாம் அல்லாத பிறமதத்தவரிடம் சாதாரண முறையில் நட்பு வைப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. அவர்களுடன் தோழமை கொள்வது, அலுவகத்தில் ஒன்றாக பணி புரிபவர்களிடம் நட்புடன் இருப்பது தடுக்கப்பட்டதில்லை ஏனெனில் அவர்களுடனான இந்த நட்பு அவர்களுக்கு இஸ்லாமை பற்றிய கண்ணியத்தை விளக்க ஏதுவாக இருக்கும்.

எனினும் அவர்களுடன் மிக ஆழமான நட்பை ஏற்படுத்த கூடாது. ஏனெனில் இஸ்லாமை பற்றிய இவர்களது எண்ணம் எப்படிப்ப்ட்டது என்று நமக்கு தெரியாது. மற்றும் இத்தகைய நட்பில் அவர்களுடைய விஷேஷங்களை தவிர்ப்பது சங்கடத்தில் கொண்டுபோகும். எனவே அவர்களுடன் மிக நெருங்கிய நட்பை ஏற்படுத்த வேண்டாம்.

  நாம் மாற்று மதத்தவரை சிந்திக்கும் முன்பு,நம் இஸ்லாமிய திருமணங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பல சடங்குகள் நடப்பதை பார்க்கிறோம். இத்தகைய திருமணங்களையே நாம் புறக்கணிக்க வேண்டும். இப்படி இஸ்லாமியர் அனைவரும் இத்தகைய திருமணங்களை புறக்கணித்தால்,வரதட்சணை, ஆடம்பரமான செயல்கள் ஒழிய ஏதுவாக இருக்கும்.

மாற்றுமத நண்பர்களின் திருமணங்களுக்கு தோழமை காரணமாக செல்லவேண்டி இருந்தால்,திருமணத்திற்கு முன்போ,பின்போ பார்த்து விட்டு வந்துவிட வேண்டும். கட்டாயம் அந்த சடங்குகளை அமர்ந்து பார்ப்பது,பங்கெடுப்பது கூடாது. ஏனெனில் இதை பார்க்கும்போது நமக்கு இது தவறானது என பிரித்தரிய முடியாமல் கூட ஆகிவிடும். எனவே இதை இஸ்லாம் அனுமதிக்காது.

ஒருமுறை நபித்தோழர் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ஒரு இடத்தை குறிப்பிட்டு தன் தாய்க்கு நேர்ச்சை செய்வதற்காக அங்கு செல்லலாமா? என கேட்டபொழுது நபி(ஸல்) அவர்கள் அங்கு மாற்றுமத விசேஷங்கள் நடைபெறவில்லை எனில் சென்றுவருமாறு அனுமதி அளித்தார்.
அது போன்ற இடத்திற்கு செல்லவே தடுத்தார்கள் எனும்போது அந்த விஷேஷங்களில் கலந்து கொள்வதின் தீமையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளல்லாம்,நமக்கு அது போன்ற வைபவங்களுக்கு செல்ல அனுமதி இல்லையென்று…

📖📚ஆதாரங்கள்

📗
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ ۗ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا  ﴿4:140﴾
4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.

📗
لَّا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ  ﴿60:8﴾
60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

📗
أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا مِن دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيجَةً ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ  ﴿9:16﴾
9:16. (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.

📗
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ  ﴿6:121﴾
6:121. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் – நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் – நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.

📗
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 70

📗1406 நபி(ஸல்) அவர்களது காலத்தில் சில ஒட்டகங்களை ‘புவானா’ எனும் இடத்தில் அறுப்பபதாக ஒருவர் நேர்ச்சை செய்து கொண்டார். பின்னர் அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அதற்கு, ”அங்கு ஏதேனும் சிலை வணங்கப்பட்டு வந்ததா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ”இல்லை” என்றார். ”அறியாமைக்கால விழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடத்தப்பட்டு வந்ததா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ”இல்லை” என்றார். ”(அப்படியானால்) நீ உன்னுடைய நேர்ச்சையைப் பூர்த்தியாக்கிக் கொள்! அல்லாஹ்விற்குமாறு செய்வதாக உள்ள நேர்ச்சையைத் தான் பூர்த்தி செய்யக் கூடாது. மேலும், உறவை முறிக்கும் நேர்ச்சையைப் பூர்த்தி செய்யக் கூடாது. மேலும் ஆதமுடைய மகனால் இயலாதவற்றில் நேர்ச்சை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவிக்கிறார்.

நூல்கள்: அபூ தாவூத், தபரானீ

””””””””””””””””””’’”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
🌺Question no:84🌺

    Kan dhirushti, sonyam unda?
Islaamiyargal idhai nambalaama?

Kan dhirushti soonyam illai endraal Quran vasanangalil soonyam patriya seydhigalum,114 vasanathil sollappatta seydhigalum idampetrulladhey muzhumayaaga vilakkavum?

🌺கேள்வி எண்: 84🌺

கண் திருஷ்டி சூனியம் உண்டா?

இதை இஸ்லாமியர்கள் நம்பலாமா? 

💐💐💐கண்திருஷ்டி சூனியம் இல்லை என்றால் குர்ஆன் வசனங்களில் சூனியம் பற்றிய செய்திகளும் 114 வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகளும் இடம்பெற்றுள்ளதே முழுமையான விளக்ககம் தரவும்💐💐💐

🌹பதில்🌹

       சூனியம் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே உள்ளது.,
முதலில் சூனியம் என்றால் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.,
சூனியம் என்பது ஒருவரிடம் உள்ள பகையின் காரணமாக அவர்களை அழிக்க,கெடுக்க கையாளும் ஒரு கண் கட்டி வித்தையாகும்,.
நன்றாக பகுத்தறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் ஆக்கலும், அழித்தலும் ஏக இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றல் ஆகும்.,இந்த சக்தி ஒரு மனிதனுக்கு இருக்கும் என நம்பினால் அவர் நிச்சயமாக இணை வைத்தவர்களில் ஒருவராகி விடுவார்.,
சூனியம் பற்றி குரானிலும்,ஹதீஸ்களிலும் பல இடங்களில் வருகிறது,பின் வரும் ஹதீஸிலும் சூனியம் பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது,
இதன் விளக்கம் என்னவென்றால், கற்சிலைகளை வணங்குவது(இணை வைப்பு) பற்றி பல இடங்களில் அல்லாஹ் வன்மையாக கண்டித்திருக்கிறானல்லவா? ஆனால் கற்சிலைகளுக்கு ஒரு சக்தியும் இல்லை என நாம் விளங்கிக் கொள்கிறோம் அல்லவா? அது போல் தான் சூனியம் என்ற இல்லாத விஷயத்தை செய்யும் சூனியக்காரர்களைப் பற்றியும்,சூனியத்தை பற்றியும் அல்லாஹ் கூறியிருக்கிறான்,.

மூஸா(அலை) நபி கைத்தடியை கீழே போட்டு அது பாம்பாக மாரிய பொழுது அனைத்து சூனியக்காரர்களும் சஜ்தாவில் விழுந்தனர்,ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் மனிதனால் இதை செய்ய முடியாது என்று.,இது இறைவனின் செயல் தான் என்று.,
இதில் ஒரு சிலர் அல்லாஹ்வின் நாட்டப்படி சூனியம் பலிக்கும் என்று வாதிடுகின்றனர்,இது எப்படி சாத்தியப்படும்., அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆற்றலை அல்லாஹ் எப்படி மனிதர்களுக்கு நாடுவான்?சிந்தித்து பார்க்கவேண்டும்.,
சூனியம் என்று செய்யப்பட்டு வரும் வித்தைகள் எல்லாம் தந்திர செயல்தானே தவிர மந்திரச் செயல் அல்ல,

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளன,இது அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக உள்ளதால்,அதை எடுத்துக் கொள்ளக் கூடாது,.உதாரணமாக முஸ்லிம் ஒரு செய்தி உள்ளது, அதில் அல்லாஹ் பூமியை 7 நாட்களில் படைத்ததாக உள்ளது,ஆனால் குரானில் வானம் பூமியை 6 நாட்களில் படைத்துள்ளான் என உள்ளது,எனவே அந்த செய்தியை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது,குரானைத்தான் நம்ப வேண்டும்,அது போல் குரானுக்கு முரணாக வரும் சூனியம் பற்றிய செய்திகளை புறந்தள்ளி விட வேண்டும்.,
மேலும் நபி(ஸல்) அவர்கள் எந்த வித மனக்கோளாறுக் கொண்டவர் அல்லர் என குரானில் அல்லாஹ் பல இடங்களில் கூறியுள்ளான்,அப்பொழுது எப்படி நபி(ஸல்) அவர்கள் பிரம்மை பிடித்து 6 மாத காலம் இருந்திருக்க முடியும்?

மேலும் ஒரு ஹதீஸ் உள்ளது, அதில் அஜ்வா பேரீச்சை ஏழு சாப்பிட்டால் எந்த வித விஷமோ,சூனியமோ சாப்பிட்டவர்கள் மீது தாக்கப்படாது என்று, இதை நாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு விஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அஜ்வா பேரீச்சையை கொடுத்தால் அவர் காப்பாற்றப் படுவாரா? நன்றாக சிந்தித்து பாருங்கள், இதிலிருந்து இந்த செய்தி பொய்யானது என தெளிவாகத் தெரிகிறதல்லவா?

மேலும் பொறாமையால் ஏற்படும் கண் திருஷ்டி என்பதும்,நம்பக் கூடாத விஷயம்,.ஒருவர் பார்க்கும் பார்வையால் யார்க்கும் எந்த தீங்கும் செய்து விட முடியாது,குரானில் அல்லாஹ் பொறாமைக்காரர்களிடம் பாதுகாப்பு தேட சொல்வது,அவர்கள் கைகளாலோ, சொற்களாலோ நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி,.

நபி(ஸல்) உண்மையில்  ஒரு விஷயத்தை சொன்னால் அந்த செய்தியை கேட்கும்போது நம் உடல் நடுங்கும்,மயிர் கூச்செரிக்கும்,
இது போன்ற சந்தேகத்திற்குரிய அல்லாஹ்விற்கு இணையான ஒரு காரியத்தை ஒரு மனிதன் செய்வான் என்று ஒரு போதும் கூறியிருக்க வாய்ப்பில்லை,
எனவே சூனியத்தையும்,கண் திருஷ்டியையும் நம்பி இணைவைப்பவர்களில் ஒருவராக ஆகி விடாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

📖📚ஆதாரங்கள்

📕

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

📕இன்று ஒரு குர்ஆன் வசனம் – فَذَكِّرْ فَمَا أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ  ﴿52:29﴾
52:29. எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.

📕இன்று ஒரு குர்ஆன் வசனம் – مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ  ﴿68:2﴾
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.

📕இன்று ஒரு குர்ஆன் வசனம் – وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ الْحَقُّ ۚ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ ۚ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ  ﴿6:73﴾
6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

📕இன்று ஒரு குர்ஆன் வசனம் – هُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ ۖ فَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ  ﴿40:68﴾
40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.  

📕இன்று ஒரு குர்ஆன் வசனம் – قَالَ مُوسَىٰ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ ۖ أَسِحْرٌ هَٰذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ  ﴿10:77﴾
10:77. அதற்கு மூஸா:  “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.

📕நபிமொழி அறிவோம் – 2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  ”அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அவை எவை?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 55. மரண சாசனங்கள்

📕இன்று ஒரு குர்ஆன் வசனம் – أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ  ﴿2:258﴾
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

📕நபிமொழி அறிவோம் – 5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு “அஜ்வா“ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்

📕5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்  மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) “குபா“வில்ழூழூ தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாம்விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், “யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது“ எனக் கூறப்பட்டுவந்தது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 71. அகீகா
___________________________
~~~~~~~~~~~~~~~~~~
புகாரி முஸ்லிமில் பதிவு
செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும்
ஆதாரப்பூர்வமானதா?

புகாரியில் பதிவு செய்யப்பட்ட
ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை
என்று இன்றைக்குப் பெரும்பாலான
மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறாரகள்.

மத்ரஸாக்களில் படித்த மார்க்க
அறிஞர்களும் இவர்களைப் போன்றே
நினைக்கிறார்கள்.
இதனால் தான் புகாரி முஸ்லிமில்
இடம் பெற்ற ஹதீஸ்களை நாம்
விமர்சிக்கும் போது சொல்லப்படுகின்ற
விமர்சனம் சரியா?தவறா?
என்று
பார்க்காமல் புகாரியில் பதிவு
செய்யப்பட்டு விட்டாலே அதை
விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள்.

புகாரி முஸ்லிமில் உள்ள
ஹதீஸ்களைப் பற்றிய முழுமையான
அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு கூற
மாட்டார்கள். மாபெரும் அறிஞரான
இமாம் தாரகுத்னீ அவர்கள் புகாரி இமாம்
பதிவு செய்த பல ஹதீஸ்களை விமர்சனம்
செய்துள்ளார்கள்.
புகாரிக்கு விரிவுரை எழுதிய
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த
விமர்சனங்களுக்கு சரியான பதிலைக்
கூறினாலும் சில இடங்களில்
சொல்லப்பட்ட குறையை ஏற்றுக்
கொள்கிறார். அந்தக் குறைகளுக்கு
பதில் இல்லை என்றும் ஒத்துக்
கொள்கிறார்.

சில நேரத்தில் புகாரியில் பதிவு
செய்யப்பட்ட ஒரு அறிவிப்பாளரை
அறிஞர்கள் விமர்சனம் செய்யும் போது
அந்த விமர்சனத்திற்கு முறையான பதில்
ஏதும் இப்னு ஹஜர் அவர்களால் சொல்ல
முடிவதில்லை. இந்த இடத்தில் இவரிடம்
இமாம் புகாரி அவர்கள் குறைவாகத்
தான் ஹதீஸ்களைப் பதிவு
செய்துள்ளார்கள் என்பதை மட்டும் தான்
இப்னு ஹஜர் பதிலாகக் கூறுகிறார்.
புகாரிக்கு மாபெரும் தொண்டாற்றிய
மாபெரும் மேதை இப்னு ஹஜர்
அவர்களே புகாரியில் உள்ள அனைத்தும்
ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக்
கொள்ளாத போது இவர்கள் புகாரியில்
உள்ள அனைத்தும் சரி என்று இவர்கள்
வாதிடுவது தான் நமக்கு ஆச்சரியமாக
இருக்கிறது.

இப்னு ஹஜரின் விளக்கம்
இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு
எழுதிய விரிவுரையின்
முன்னுரையை முறையாகப்
படித்தவர்கள் புகாரியில் உள்ள
அனைத்துச் செய்தியும் சரியானது
என்றக் கருத்தை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 346
ﻭﻗﻮﻟﻪ ﻓﻲ ﺷﺮﺡ ﻣﺴﻠﻢ ﻭﻗﺪ ﺃﺟﻴﺐ ﻋﻦ ﺫﻟﻚ ﺃﻭ ﺃﻛﺜﺮﻩ ﻫﻮ ﺍﻟﺼﻮﺍﺏ ﻓﺈﻥ
ﻣﻨﻬﺎ ﻣﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻏﻴﺮ ﻣﻨﺘﻬﺾ

இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் :
புகாரியில் சொல்லப்பட்ட
விமர்சனங்களில் அதிகமானவைகளுக்க
ு பதில் தரப்பட்டு விட்டது என்று
முஸ்லிமுடைய விரிவுரையில்
முஹ்யித்தீன் என்பவர் கூறியது தான்
சரியானதாகும்.

ஏனென்றால் இந்த
விமர்சனங்களில் சிலவற்றிற்கு பதில்
(இன்னும்) கிடைக்கவில்லை.
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 385
ﻭﻗﺪ ﺗﺸﺘﺪ ﺍﻟﻤﺨﺎﻟﻔﺔ ﺃﻭ ﻳﻀﻌﻒ ﺍﻟﺤﻔﻆ ﻓﻴﺤﻜﻢ ﻋﻠﻰ ﻣﺎ ﻳﺨﺎﻟﻒ ﻓﻴﻪ ﺑﻜﻮﻧﻪ
ﻣﻨﻜﺮﺍ ﻭﻫﺬﺍ ﻟﻴﺲ ﻓﻲ ﺍﻟﺼﺤﻴﺢ ﻣﻨﻪ ﺍﻻ ﻧﺰﺭ ﻳﺴﻴﺮ

இப்னு ஹஜர் கூறுகிறார் : சில வேளை
அறிவிப்பாளர்கள் மிகவும் மோசமாக
முரண்பட்டு அறிவிப்பார்கள். அ;ல்லது
(அவர்களின்) மனனத்தன்மை பலவீனமாகி
விடும். இந்நேரத்தில் (தன்னை விட
வலிமையானவர்களுக்கு) மாற்றமாக
அறிவிக்கப்படும் செய்திக்கு முன்கர்
(மறுக்கப்பட வேண்டியது) என்று
முடிவு கட்டப்படும். இது போன்ற
செய்தி புகாரியில் குறைவாக தவிர
(அதிகமாக) இல்லை.
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 385

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 346
ﻭﻗﺪ ﺗﻌﺮﺽ ﻟﺬﻟﻚ ﺑﻦ ﺍﻟﺼﻼﺡ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﺇﻻ ﻣﻮﺍﺿﻊ ﻳﺴﻴﺮﺓ ﺍﻧﺘﻘﺪﻫﺎ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺪﺍﺭﻗﻄﻨﻲ ﻭﻏﻴﺮﻩ ﻭﻗﺎﻝ ﻓﻲ ﻣﻘﺪﻣﺔ ﺷﺮﺡ ﻣﺴﻠﻢ ﻟﻪ ﻣﺎ ﺃﺧﺬ ﻋﻠﻴﻬﻤﺎ ﻳﻌﻨﻲ
ﻋﻠﻰ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻭﻣﺴﻠﻢ ﻭﻗﺪﺡ ﻓﻴﻪ ﻣﻌﺘﻤﺪ ﻣﻦ ﺍﻟﺤﻔﺎﻅ ﻓﻬﻮ ﻣﺴﺘﺜﻨﻰ ﻣﻤﺎ
ﺫﻛﺮﻧﺎﻩ ﻟﻌﺪﻡ ﺍﻹﺟﻤﺎﻉ ﻋﻠﻰ ﺗﻠﻘﻴﻪ ﺑﺎﻟﻘﺒﻮﻝ ﺍﻧﺘﻬﻰ ﻭﻫﻮ ﺍﺣﺘﺮﺍﺯ ﺣﺴﻦ

தாரகுத்னீ (புகாரியில்) விமர்சனம்
செய்த சில இடங்களைத் தவிர (மற்ற
செய்திகள் அனைத்திற்கும் அங்கீகாரம்
உண்டு) என்ற கருத்தையே
இப்னுஸ்ஸலாஹ் ஏற்றுள்ளார். அவர்
முஸ்லிமுடைய விரிவுரையின்
முன்னுரையில் இவ்வாறு
கூறுகிறார் : புகாரி மற்றும்
முஸ்லிமில் நம்பத் தகுந்த அறிஞர்
ஒருவர் குறை கூறினால் (அனைத்து
சமூகத்தின் அங்கீகாரமும் புகாரிக்கு
உண்டு என்று நாம் முன்பு)
கூறியதிலிருந்து (குறைகூறப்பட்ட)
இந்தச் செய்தி விதிவிலக்கானதாகும்.
ஏனெனன்றால் இந்த விமர்சிக்கப்பட்ட
ஹதீஸில் அங்கீகாரம் இல்லாமல்
போய்விட்டது.
இப்னு ஹஜர் கூறுகிறார் : இவ்வாறு
விதிவிலக்கு கொடுப்பது
அழகானதாகும்.
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 383
ﻭﻟﻴﺴﺖ ﻛﻠﻬﺎ ﻗﺎﺩﺣﺔ ﺑﻞ ﺃﻛﺜﺮﻫﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻇﺎﻫﺮ ﻭﺍﻟﻘﺪﺡ ﻓﻴﻪ ﻣﻨﺪﻓﻊ
ﻭﺑﻌﻀﻬﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻣﺤﺘﻤﻞ ﻭﺍﻟﻴﺴﻴﺮ ﻣﻨﻪ ﻓﻲ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﺗﻌﺴﻒ

இப்னு ஹஜர் கூறுகிறார் : புகாரியில்
சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங்களும்
(புகாரியில்) குறை ஏற்படுத்தக்
கூடியதாக இல்லை. மாறாக இந்த
விமர்சனங்களில் அதிகமானவைகளுக்க
ு தெளிவாக பதில் உள்ளது. அந்த
விமர்சனத்தில் குறை சொல்ல
முடியாது. சில விமர்சனங்களுக்க
ு தெளிவற்ற விதத்தில் பதில் உள்ளது.

சில விமர்சனங்களுக்கு பதில் சொல்வது
கடினம்.
மேற்கண்ட வாசகங்களையெல்லாம் நன்கு
கவனிக்க வேண்டும்.

புகாரியில்
விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு
பதிலைத் தரும் முயற்சியில் இறங்கிய
கல்வி மேதை இப்னு ஹஜர் அவர்களே
சில விமர்சனங்களுக்குப் பதில்
சொல்லமுடியவில்லை என்று ஒத்துக்
கொண்டு அதைத் தன் நூலில்
எழுதியிருக்கும் போது புகாரியில்
உள்ள அனைத்துச் செய்தியும்
சரியானது தான் என்று
அறிவுள்ளவர்கள் எப்படிக் கூறுவார்கள்?

புகாரியில் நபி (ஸல்) அவர்களுடைய
கூற்றுக்கள் மட்டும் பதிவு
செய்யப்படவில்லை. நபித்தோழர்களின்
கூற்று நபித்தோழர்களுக்குப் பின்னால்
வந்தவர்களின் கூற்றுக்களும் பதிவு
செய்யப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக
பின்வரும் சம்பவத்தை எடுத்துக்
கொள்ளலாம்.

அம்ர் பின் மைமூன் என்பார்
கூறியதாவது :

அறியாமைக்
காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்
குரங்கொன்றைக் குரங்குகள் பல
சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து
தண்டிப்பதை நான் கண்டேன். நானும்
அவற்றுடன் சேர்ந்து கொண்டு
கல்லெறிந்தேன்.
அறிவிப்பவர் : அமர் பின் மைமூன்
நூல் : புகாரி (3849)

இது போன்ற சம்பவம் நடந்தது என்று
அறிவுள்ளவர்கள் யாரும் கூற
மாட்டார்கள்.
குரங்குகளுக்கு திருமணம் உட்பட எந்த
பந்தமும் கிடையாது. மனிதர்களுக்கு
சொல்லப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு
நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு
மிருகங்களுக்கு அல்லாஹ்
கட்டளையிடவும் இல்லை.

மனிதனுக்குச் சொல்லப்பட்ட சட்டத்தை
குரங்குகள் நடைமுறைப்படுத்தியது
என்பதை நியாயவான்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
தெளிவாகப் பொய் என்று தெரியும்
இந்தச் சம்வத்தை இமாம் புகாரி அவர்கள்
பதிவு செய்தார்கள் என்பதற்காக நாம்
ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஹதீஸ் தொகுப்பு நூற்களில் சிறந்த
நூற்கள் என்று முதலாவதாக
புகாரியையும் இரண்டாவதாக
முஸ்லிமையும் கூறலாமே தவிர
குர்ஆனைப் போன்று ஒரு தவறும்
இல்லாத நூல் என்ற சிறப்பை
இவைகளுக்குத் தர முடியாது.
இச்சிறப்பை இறைவன் தன் வேதத்திற்கும்
மட்டும உரியதாக்கியுள்ளான்.

புகாரி மற்றும் முஸ்லிமில்
பலவீனமான அறிவிப்பாளர்களும்
அறியப்படாதவர்களும் மிகக் குறைவாக
இருக்கிறார்கள். மற்ற புத்தகங்களில்
இருப்பதைப் போல் மோசமான கருத்தைக்
கொண்ட செய்தியும் இவற்றில்
குறைவாக இடம்பெற்றுள்ளது.

எனவே மற்ற புத்தகங்களில் இடம்பெற்ற
செய்திகளை ஹதீஸ் கலைக்கு உட்பட்டு
அனுகுவதைப் போல் புகாரி
முஸ்லிமில் உள்ள செய்திகளையும்
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

புகாரி இமாம் பதிவு செய்த
ஹதீஸ்களை பல அறிஞர்கள் ஆய்வுக்கு
எடுத்துக் கொண்டு அது சரியானதா?
தவறானதா? என்பதைத்
தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதற்குப்
பல சான்றுகள் எங்களிடம் உள்ளன. ..

============================

🌺🌺🌺கேள்வி 85🌺🌺🌺

பிஜேவின் மொழிபெயர்ப்பில் கருத்து வேறுபாடு உள்ளதா?

🍓பதில்🍓

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏ 
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
(அல்குர்ஆன் : 4:55)

JOHN trust

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏ 
அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றோர் நிராகரித்துவிட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.
(அல்குர்ஆன் : 4:55)

abdul hameed bakavi

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏ 
ஆனால், இவர்களில் சிலர் அதனை நம்பினார்கள்; மற்றும் சிலர் புறக்கணித்தார்கள். மேலும், (புறக்கணிப்பவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானதாகும்.
(அல்குர்ஆன் : 4:55)

Ift translation

4:55. இவரை (முஹம்மதை) நம்பியோரும் அவர்களில் உள்ளனர். இவரை விட்டுத் தடுப்போரும் அவர்களில் உள்ளனர். பற்றி எரியும் நரகமே (அவர்களுக்கு) போதுமானது.

PJ translation

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ 
திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்.
(அல்குர்ஆன் : 7:54)

============================

🌺🌺🌺கேள்வி 85🌺🌺🌺

பிஜேவின் மொழிபெயர்ப்பில் கருத்து வேறுபாடு உள்ளதா?

🍓பதில்🍓

*ஆடியோ*

_01:53 FIRST_
_05:52 SECOND_

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏ 
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
(அல்குர்ஆன் : 4:55)

JOHN trust

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏ 
அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றோர் நிராகரித்துவிட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.
(அல்குர்ஆன் : 4:55)

abdul hameed bakavi

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏ 
ஆனால், இவர்களில் சிலர் அதனை நம்பினார்கள்; மற்றும் சிலர் புறக்கணித்தார்கள். மேலும், (புறக்கணிப்பவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானதாகும்.
(அல்குர்ஆன் : 4:55)

Ift translation

4:55. இவரை (முஹம்மதை) நம்பியோரும் அவர்களில் உள்ளனர். இவரை விட்டுத் தடுப்போரும் அவர்களில் உள்ளனர். பற்றி எரியும் நரகமே (அவர்களுக்கு) போதுமானது.

PJ translation

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ 
திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்.
(அல்குர்ஆன் : 7:54)

===========================

🍓Question no:86🍓

pillai pirandhu 7vadhu naalil pillayyin thalai mudikku paharamaha thangam/ velli or adatku paharamana panam kodukkavendumallawa.! Anda panathay emadhu thaay thandayku kodukalama? Alladhu parama aelayhalukku kudukkawenduma?

🍓கேள்வி எண்: 86🍓

   பிள்ளை பிறந்து 7ஆவது நாளில் பிள்ளையின் தலைமுடிக்கு பகரமாக தங்கம்/வெள்ளி அல்லது அதற்கு நிகரான பணம் கொடுக்கவேண்டுமல்லவா?அந்த பணத்தை தாய்,தந்தைக்கு கொடுக்கலாமா?அல்லது பரம ஏழைக்கு கொடுக்கவேண்டுமா?

🍀பதில்🍀

   குழந்தை பிறந்து ஏழாவது நாள் குழந்தைக்கு அகீகா கொடுக்க மட்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளது.
அகீகா என்பது ஆட்டை அறுத்து பலியிடுதல் ஆகும்.
ஆண் குழந்தைக்கு இரண்டும்,பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் கொடுக்கமட்டுமே இஸ்லாமிய சட்டம் கூறுகிறது.

அதற்கு வசதி இல்லாதவர்கள் அகீகா கொடுக்காமல் இருந்தாலும் தவறு கிடையாது. அதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்கப்பட மாட்டான்.

மற்றபடி குழந்தையின் தலைமுடிக்கு நிகரான தங்கம்,வெள்ளி, பணம் ஆகியவை கொடுப்பது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயமாகும்.

  கீழ்காணும் ஹதீஸிலிருந்துதான் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
அதை பற்றிய விளக்கத்தை பார்க்கலாம்

✒நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : திர்மிதி (1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

 மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூ­ல் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹ‚ஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹ‚ஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி)அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.

மேலும் அகீகாவை 14ஆம் நாள்,21ஆம் நாள் அறுக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.இதுவும் பலவீனமாக உள்ளதால் இதையும் கடைபிடிக்க வேண்டியதில்லை.

✒ஏழாம் நாளில் இல்லை(ஆடு அறுக்கப்பட வில்லை) என்றால், பதின் நான்காம் நாள் அறுக்கப்படும், அதிலும் இல்லை (ஆடு அறுக்கப்பட வில்லை) என்றால், இருபத்தி ஒன்றாம் நாள் அறுக்கப்படும்” என அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம் : ஹாகிம் 4\266)

இந்த ஹதீஸில் “அதாஃ” என்பவரின் மூலம் சொல்லப்பட்ட செய்தியே தவிர வேறில்லை. இதனால் இந்த ஹதீஸ் முத்ரஜ் எனும் தரத்தை அடைவதனால் இதனை பலவீனமான ஹதீஸ் எனப்படும்.

அகீகா கொடுக்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்கள்
தெளிவான அறிவிப்பாளர்கள் வழியே வந்துள்ளது.

📙“நபி(ஸல்) அவர்கள் யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)

📙ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீகாவைக் கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஏழாவது தினத்தில் அதற்காக அறுக்கப்படும், தலை முடி மழிக்கப்படும், அத்தினத்திலே பெயர் சூட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்” 
(அறிவிப்பவர்: சமுறா (ரலி) , ஆதாரம் : அபூ தாவுத் 2839)

📙5471. சல்மான் இப்னு ஆமிர்(ரலி) கூறினார்  பையன் (பிறந்த) உடன் “அகீகா“ (கொடுக்கப்படல்) உண்டு.  இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து சல்மான் இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவித்தார்கள்.  இப்னு சீரின்“(ரஹ்) வழியாக வரும் சல்மான்(ரலி) அவர்களின் இந்த ஹதீஸை யஸீத் இப்னு இப்ராஹீம்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 71. அகீகா

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

🍒Question no: 87🍒

Islaathil pengal hair styling panalama..atharku anumathi iruka?

🍒கேள்வி எண்: 87🍒

இஸ்லாத்தில் பெண்கள் சிகை அலங்காரம் செய்யலாமா? அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

🌾பதில்🌾

   இஸ்லாமிய பெண்கள் தன் தலைமுடியை அலங்கரிப்பது,வெட்டிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு மார்க்கத்தில் எந்தவித தடையும் கிடையாது. தாராளமாக செய்து கொள்ளலாம்.

  ஆனால் இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இந்த சிகை அலங்காரம் ஒட்டகத்திமில் போன்று இருக்ககூடாது.
பின்பு காஃபிர்களின் அடையாளமாக இருக்கும் சில சிகை அலங்காரங்களை செய்யக் கூடாது.
மற்றும் ஒட்டுமுடி வைத்து அலங்காரங்களை செய்யக்கூடாது.
கருப்பு நிற வண்ணம் (hair dye) பூசக்கூடாது.

மேலும், அழகு நிலையங்களில் இவ்வாறான அலங்காரங்கள் செய்யும்போது,இஸ்லாம் தடை செய்யப்பட்ட விஷயங்கள் நடக்கும் அழகு நிலையங்களுக்கு செல்வதில் கவனமாக இருக்கவேண்டும்.

இதை  இஸ்லாமிய விதிமுறக்குட்பட்ட எந்தவித சிகை அலங்காரங்களையும் நாம் செய்து கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்:

📘5934. ஆயிஷா(ரலி) அறிவித்தார்  அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்“) என்று கூறினார்கள்.  இதே ஹதீஸ் ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.122
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

📘மற்றொரு அறிவிப்பில் அவரது கணவர் ஒட்டு முடி வைப்பதை விரும்புகிறார்: எனவே வைத்துக் கொள்ளலாமா என்று அந்த பெண் கேட்டபோது கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புஹாரி 3468,3488,4887,5205,5933,5934,5935,5938.

📘3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

📘புறாவின் கழுத்தில் உள்ள (தூய கருப்பு நிறத்)தைப் போன்ற கருப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: நஸாயீ(4988)

📘4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

📘533. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம்.அப்போது அவர்களுடைய சகோதரர், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு ஸாஉ அளவுள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி குளித்துக் காட்டினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றிருந்தது. தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள்.(அது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.) நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்துவிடுவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 3. மாதவிடாய்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🍒Question no:88🍒

kaafirgalukkum Muslim allazawarukkum withiyasam unda?bcz kafirgal iray niraharippavargal.but my some non Muslim friends believe Allah. But they think Allah Muslims da God nu.So ivangalum kaafiraa?

🍒கேள்வி எண்:88🍒

காஃபிர்களுக்கும்,முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா?ஏனெனில் காஃபிர்கள் இறை நிராகரிப்பவர்கள். ஆனால் சில முஸ்லிமல்லாதவர்கள் அல்லாஹ் இருக்கிறான் என நம்புகின்றனர். ஆனாலும் இவர்களும்  அல்லாஹ் முஸ்லும்களுடைய இறைவன் என்றும் நம்புகின்றனர்.
இப்படி நம்புபவர்களும் காஃபிரா?

🌾பதில்🌾

நம் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையானது அல்லாஹ்வை தவிர வேறு எந்த சக்தி(இறைவன்)யும் இல்லை என்றாகும். யாராக இருந்தாலும்
இந்த கொள்கையை கொண்ட அனைவருமே இஸ்லாமியர்கள்தான்.

ஆனால்,அவர்கள் கடவுள்களாக நினைக்கும் மற்றவைகளையும் நம்பி,அல்லாஹ்வையும் நம்புபவர்கள் நிச்சயமாக காஃபிர்கள் ஆவார்கள்.
இதுவும் தெளிவான இணைவைப்பாகும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த காஃபிர்களில் பெரும்பானோர் அவர்கள் கடவுளாக நினைக்கும் கற்சிலைகள், சூரியன்,மரம்..ஆகியவைகளை மட்டும் நம்பவில்லை. மாறாக அவைகளுக்கும் சக்தி உண்டு,அல்லாஹ்விற்கும் சக்தி உண்டு என்றுதான் சொன்னார்கள்,. இவர்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவான காஃபிர்கள் என்று கூறியுள்ளார்கள்.

எனவே,இதுபோன்றவர்கள் இணைவைப்பாளர்களான காஃபிர்களே ஆவார்கள்.

நாம் அவர்களுக்கு அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்கு உரியவன் என்பதை எத்திவைப்போம்!இன்ஷா அல்லாஹ்

📚📖 ஆதாரங்கள்:

📗
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏ 
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)

📗
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ 
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 4:48)

📗
الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ  ﴿15:96﴾
15:96. இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.

📗

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَىٰ وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ  ﴿2:62﴾
2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

🍇Question no:89🍇

Muhammad nabi (SAW) avargal marumayil maryam alaihisalam avargalayum aasiya ammaiyar avargalayum marriage panvanga endru oru bayan’il kten.. idhu aadhara poorvamaana seidhiya.. thavarana seidhi’ya vilakkavum..

🍇 கேள்வி எண்:89 🍇

     முகம்மது நபி(ஸல்) அவர்கள் மறுமையில் மரியம் (அலை) அவர்களையும், ஆஸியா அம்மையாரையும்,திருமணம் செய்வார்கள் என்று ஒரு உரையில் கேட்டேன்…இது ஆதாரப்பூர்வமானதா?
இல்லை தவறான செய்தியா? என்று விளக்கவும்.

🍂பதில்🍂

முகம்மது நபி (ஸல்) அவர்கள் மரியம்(அலை) அவர்களையும்,ஃபிர் அவ்னின் மனைவி ஆஸியா அம்மையாரையும் மணமுடிப்பாளர்கள் என,
இமாம் தப்ரானி,இமாம் அபூயஃலா,இமாம் இப்னு அஸாகிர்,இமாம் இப்னு ஜஃபர் ஆகியோர் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

எனினும் அவர்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர் வரிசையில் பல குளறுபடிகளும்,குறைபாடும் இருப்பதால் இந்த ஹதீஸ்கள் நம்ப தகுந்தது இல்லை என வல்லுனர்கள் ஆராய்ந்து நிராகரித்துள்ளனர்.

மேலும்,இதற்கு ஆதாரப்பூர்வமான குறிப்புகள் இல்லையாதலால்,இந்த செய்தி நம்ப தகுந்தது இல்லை.
__________________________________

🍇Question no:90🍇

hajjin podhu thalaimudi neekuvadhu hindhukkal thirupadhi pondra kovilgalukku poi mottai adippadhu pandradhu dhaana endru oru matru madha sagodhari ketkiraar.islaamiyargalum Allah vukku kanikkaiyaga thalaimudi mudiyai tharugireergala endru ketkiraar.?enna badhil solvadhu?

🍇கேள்வி எண்;90🍇

    ஹஜ்ஜின் போது தலைமுடி நீக்குவது, இந்துக்கள் திருப்பதி போன்ற கோவில்களுக்கு போய் மொட்டை அடிப்பது போன்றதுதானா?என்று ஒரு மாற்றுமத சகோதரி கேட்கிறார். இஸ்லாமியர்களும் அல்லாஹ்வுக்கு காணிக்கையாக முடியை தருகிறீர்களா? என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது?

🍂பதில்🍂

    இஸ்லாமியர்களுக்கு ஹஜ்ஜின் போது தலை மழிக்க நபி(ஸல்) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி நமக்கு காட்டித்தந்துள்ளார்கள். இது ஹஜ் கிரியைகளில் ஒன்றாகும். இது கஃபாவில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டியது. இங்கு செய்யும் இந்த முடி மழிக்கும் செயல் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. மூடநம்பிக்கையாக செயல் படுவதில்லை.
இது காணிக்கை என்ற ரீதியில் வராது.

ஏனெனில் காணிக்கை என்பது நான் மொட்டை அடிக்கிறேன், காசு உண்டியலில் செலுத்துகிறேன், நீ எனக்கு இதை நிறைவேற்று என்று இறைவனிடம் கோரிக்கை வைப்பதாகும். ஆனால் நாம் ஹஜ்ஜில் மொட்டை அடிப்பது வேண்டுதலோ,கோரிக்கையோ கிடையாது. ஹஜ்ஜின் செயல்களில் ஒன்று.
இதை செய்தால் இதை நிறைவேற்று என்று கூறும் அளவுக்கு அல்லாஹ் மனிதர்களிடம் எந்த வித தேவையும் இல்லாதவன்.

இந்துக்கள் செய்வது அவர்கள் ஒரு கோரிக்கையை,அவர்கள் கடவுளாக நினைக்கும் ஒன்றிடம் வைத்து, அது நிறைவேரினால் அல்லது நிறைவேற கேட்டு காணிக்கையாக தலையை மொட்டை அடிப்பார்கள்.

நம்முடைய தலை மழிக்கும் செயல் அதுபோன்றதல்ல. நாம் அழகை குறைத்து இறைவனின் முன் ஏழை,பணக்காரன்,அரசன்,வெள்ளயர்,கருப்பர்,உயர்ந்தவன், தாழ்ந்தவன்…போன்ற அனைவரும் ஒன்று,அனைவரும் இறைவனின் முன் தாழ்ந்தவர்கள்,அனைவரும் சமம் என்று உணர்த்தும் விதமாக இந்த கிரியையை நபி(ஸல்) கற்றுத்தந்துள்ளார்கள்.
எனவே அதுவும்,இவர்கள் செய்யும் காணிக்கையும் சமமாகாது.

உதாரணத்திற்கு,ஒரு சாதாரண அலுவலக நிர்வாகி அலுவலகம் இப்படியான அமைப்பில் இருக்க வேண்டும், இப்படி பணி நடக்க வேண்டும், இந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும், இந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்று கட்டளை இட்டாலே அங்கு பணிபுரியும் அனைவரும் கட்டுபடுகிறோம். ஏன் என்று கேட்க முடியாது அதன் காரணம் அவருக்குத்தான் தெரியும்.
ஒரு சாதாரண முதலாளிக்கே இப்படி ஏன் என்று கேட்கமுடியாத அதிகாரம் இருக்கும்போது, படைத்த இறைவனது சில கட்டளைகள் அல்லாஹ் மட்டுமே அறிந்த ஒன்றாகும்.

மேலும் மாற்றுமத சகோதரர்கள் செய்யும் பெரும்பாலான விஷயங்கள் இஸ்லாமியர்களுடமிருந்துதான் பரவியதாகத்தான் வரலாறுகள் உள்ளது, இதை மறைத்தும்,அழித்தும் விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே மாற்றுமத நண்பர்களிடம்,  அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன் என்பதை எடுத்து கூறவேண்டும். அவனுக்கு நாங்கள் ஒன்றை செய்து இன்னொன்றை பெறத் தேவையில்லை என்றும் புரிய வைப்போம், இன்ஷா அல்லாஹ்!

📚📖ஆதாரம்:

📙1731. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம்வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்த பின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்றும் பிறகு தலையை மழித்துக் கொள்ளவோ, முடியைக் குறைத்துக் கொள்ளவோ வேண்டுமென்றும் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 25. ஹஜ்

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””