மார்க்க கேள்வி பதில்கள்.

🐠Question no: 101🐠

   oru maatrumadha sahodhariyin padhivay naan fb il parthn. Adhil Muslim aangalay manappazal pengal thuyar adaywar endrum azatku awarsonna kaaranangalah palathaaramanam ,adimayppengalidam vendiya urimay aangal kollalam edrum sollirundhar. Idhanay andha sahodharikku vilakki solvazu eppadi?

🐠கேள்வி எண்:101🐠

இஸ்லாம் பலதாரமணத்தை அங்கீகரித்தது பற்றியும்,அடிமைப்பெண்களிடம் ஆண்களின் உரிமை பற்றியும் மாற்றுமத சகோதரியின்  கருத்துக்கு எப்படி விளக்கமளிப்பது?

🌀பதில்🌀

  இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கிறது. அல்லாஹ் தன் திருக்குரானில் நான்கு மனைவியர் வரை மணக்க அனுமதியளித்துள்ளான்.
இது பெண்களுக்கான அநீதி என பரவலாக பேசப்படுகிறது. இதை சரியான முறையில் விளங்கி மாற்றுமதத்தவருக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளோம்.

முதலில் இதற்கான அடிப்படை காரணங்களை பார்ப்போம்

1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விட எண்ணிக்கையில் பலமடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் ஆண்களை விட பெண்கள் 10 வருடத்திற்கு முன்பே திருமணத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

2. ஆண்களை விட பெண்கள் மக்கள் தொகையில் அதிகமாக உள்ளனர்.

3. போர்களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.

4. இறப்பு விகிதத்தில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர்.

5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மணவாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

6. பெண்களுக்கு திருமணம் செய்ய ஒரு பெரிய தொகை வரதட்சணை கொடுக்க படுகிறது.

7. இதனால் பெண் சிசுக் கொலை நடைபெறுகிறது.

8. திருமணம் வேண்டாம் என பிரம்மச்சரியம் மேற்கொள்வதால் ஆண்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

9. பெற்றோரால் திருமணம் முடித்து வைக்க இயலாது என நினைக்கும் பெண்கள் தாமாகவே வாழ்வை தேடி ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

10. திருமணம் தனக்கு நடக்காது என நினைக்கும் பெண்கள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலும்,ஆண்கள் விபச்சாரத்தில் விழுவதை தடுப்பதற்கும் தான் இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.

இதை ஆதரிப்பதால் தவறான தொடர்பு பெரும்பாலும் தடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மைநிலை.

இப்படி வியாக்கியானம் கூறுபவர்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். பலதார மணம் என்பதை இஸ்லாம் முதன் முதலில் வகுக்கவில்லை.
இதன் மூலம் இஸ்லாம் இஸ்லாம் சமுதாயத்தை ஒழுங்கு படுத்தியுள்ளது.

இந்த கட்டளை அல்லாஹ்விடத்திலிருந்து வரும் முன்பு இஸ்லாம் அல்லாத அரபியர் மத்தியிலும்,உலகெங்கும் பலதாரமணம் ஒரு முறையின்றி பரவலாக இருந்தது.
இவ்வளவு ஏன்? இவர்கள் வழிபடும் பெரும்பாலான கடவுள்கள் இரண்டு மனைவியரை வைத்திருந்து இன்றும் அவர்கள் அதை ஏற்று பூஜிப்பதை பார்க்கிறோம்.
அவ்வளவு ஏன்? இன்றும் பல அரசியல் தலைவர்கள் பல மனைவியரை திருமணம் செய்வதை நடப்பில் பார்த்து வருகிறோம்.
ஒரு ஆய்வரிக்கையின் படி முஸ்லிம்களை விட,முஸ்லிமல்லாதவர்கள் இரண்டாம், மூன்றாம் மணமுடிப்பதுதான் அதிகம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இன்று இன்னொரு திருமணம் செய்வது பாவம் என போராடும் அமைப்புகள் விபச்சாரத்தையும்,ஆணகளின் கள்ளத்தொடர்பையும் ஒன்றுமே கூறுவதில்லை.

இப்படி கணவன் செய்யும் கள்ளத்தொடர்பை மறைமுகமாக ஏற்கின்றனர். விபச்சாரத்தையும் லைசன்ஸ் கொடுத்து நடத்துவதற்கு தடை செய்வதில்லை.

இந்த பலதாரமணம் இப்படிப் பட்ட இழிசெயல்களிலிருந்து காப்பாற்றுகிறது என்று எடுத்துரைக்க வேண்டும்.

பொருளாதரத்தில் நன்றாகவும், உடலில் சக்தி பெற்றவர்களும் தன் மனைவியிடம் ஏதேனும் குறையுள்ள சமயத்தில் இதை அனுமதிக்கவில்லையெனில் என்ன நடக்கும். நிச்சயம் விபச்சாரத்தை நாடி நோயை விலைக்கு வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம்.
இதனடிப்படையில் இன்னொரு திருமணம் நல்லதா? கெடுதலா?

மனைவிக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்மார்களை பற்றி அறியும்போது மனைவி கேட்பது என்ன? என்னை கைவிட்டுவிடாதே என் வாழ்விற்கு பதில் சொல் என்று தான். இதைத்தான் இஸ்லாம் முறைப்படி செய்து இருவருக்கும் போதுமான அங்கீகாரம் கொடுக்கிறது என்பதை விளங்கச்செய்ய வேண்டும்.

அதுவும்,இஸ்லாம் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறவில்லை. அவளுக்கு தெரியாமல் செய்வது சாத்தியமே இல்லை.

இப்படி இன்னும் பலப்பல காரணங்களை கூறிக்கொண்டே போகலாம்.
இதுவே அவர்களுக்கு எடுத்துக் கூற போதுமானதாக இருக்கும்.

◾அடுத்து அடிமைப்பெண்கள் பற்றி வைத்த குற்றச்சாட்டை பார்ப்போம்.

அடிமைப்பெண்கள் இன்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் அது ஒழிய காரணம் எது என்று தெரிந்தாலே வாதத்திற்கு வேலை இல்லை.

இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நட்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது. இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்தபோது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப்பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.

* ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

* ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினார்கள்.

* யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.

* பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள்.

தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். இது பொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்குவார்கள். அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை, அன்னிய ஆண்கள் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும்போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும்போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.

அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்குக் கணவனுக்கு நிகரான நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.

அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.

வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது. வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்லர். விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பும்போது எஜமானை மாற்ற முடியாது. 

📚📖ஆதாரங்கள்

📕
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا  ﴿4:4﴾
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

📕
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا  ﴿4:36﴾
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

📕(4:3, 4:25, 4:24, 16:71, 23:6, 24:31, 33:50, 33:52, 33:55, 70:30)

***********************************

🐠Question no: 102🐠

Allahvey peyar vaitha nabimaargal yaar?

1- Yahyaa (3:39)
أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ
2- Jesus (3:45)
يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ
3,4- Isaac & Jacob (11:71)
فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِن وَرَاءِ

idhu sariyaana badhila.. Ivargal naalvarukkum Allah than peyar sootinaana? Aadam alai avarkaluku peyar sootiyadhu Allah illaya? Thelivu paduthavum plz..

🐠கேள்வி எண்:102🐠

அல்லாஹ்வே பெயர் வைத்த நபிமார்கள்

யஹ்யா(அலை)
ஈஸா(அலை)
இஸாக்(அலை)
யாகூப்(அலை)

இது சரியானதா?
ஆதம்(அலை)நபிக்கு பெயர் வைத்தது அல்லாஹ்வா? இல்லையா? தெளிவுபடுத்தவும்.

💦பதில்💦

✒ யஹ்யா(அலை) நபி,ஈஸா(அலை)நபி,இஸ்ஹாக்(அலை)நபி மற்றும் யாகூப்(அலை) நபி இவர்களுக்கெல்லாம் பெற்றோர்கள் பெயர் வைத்திருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் இப்படிப்பட்ட நபிமார்கள் பிறப்பார்கள் என முன்னறிவிப்பு செய்துள்ளான்.  அல்லாஹ்வின் பதிவேட்டில் அனைவரின் பெயர்களுமே பதிவாகி இருக்கும். அல்லாஹ் மேற்கூறிய நபிமார்களின் வருகையை முன்கூட்டியே அறிவித்த காரணத்தினால் அல்லாஹ்தான் இவர்களுக்கான இந்த பெயர்களை வைத்தான் என்பது சரியானதே.

மேலும்,ஆதம்(அலை) பூமியில் பிறக்கவில்லை,அவர் பூமிக்கு அனுப்பப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆதம்(அலை) நபிக்கு பெயர் வைத்ததற்கான நேரடியான ஆதாரம் இல்லை எனினும் முதலில் பெற்றோர் இல்லாமல் தோற்றுவித்த நபி ஆனதால் ஆதம் நபிக்கு அல்லாஹ்தான் பெயர் சூட்டியிருப்பான் என பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது.(90:3)

அதுமட்டுமன்றி, முகம்மது நபி(ஸல்) அவர்களின் வருகையை அல்லாஹ் அதற்கு முன் அனுப்பப்பட்ட வேதங்களில் முன்னறிவுப்பு செய்துள்ளான் என்பதிலிருந்து முகம்மது நபி(ஸல்)க்கும் அல்லாஹ்தான் பெயர் சூட்டியுள்ளான் என்றும் அறிஞர்களிம் கருத்தாக உள்ளது.

📚📖ஆதாரங்கள்

📓
يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُ مِن قَبْلُ سَمِيًّا  ﴿19:7﴾
19:7. “ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).

📓
فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ الصَّالِحِينَ  ﴿3:39﴾
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.

📓இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன் வந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன் வந்தது இஸ்ஹாக்கைத் தான் என்று சிலர் கூறியுள்ளனர். அது தவறு என்பதற்கு இவ்வசனம் (11:71) சான்றாகவுள்ளது.
இஸ்ஹாக் என்ற மகன் பிறக்கப் போவதைக் கூறும் போதே, யஃகூப் என்ற பேரன் பிறக்கப் போவது பற்றியும் முன் கூட்டியே இப்ராஹீம் நபிக்குக் கூறப்பட்டதாக இவ்வசனம் (11:71) கூறுகின்றது.
பேரனைப் பற்றி நற்செய்தி கூறப் பட்டதால் இஸ்ஹாக் சிறு வயதில் மரணிக்க மாட்டார் என்பதும், அவர் மணம் முடித்து யஃகூபைப் பெறுவார் என்பதும் இப்ராஹீம் நபிக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின் இஸ்ஹாக்கைப் பலியிடுமாறு கூறி இப்ராஹீம் நபியைச் சோதிக்க முடியாது. இஸ்ஹாக் இப்போது சாக மாட்டார் என்று இறைவனே கூறிய பிறகு இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிட முன் வந்ததில் பெரிய தியாகம் ஏதும் இருக்காது.
தன் மகன் சாகவே மாட்டான் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முன் வருவர். எனவே இஸ்மாயீலை அறுத்துப் பலியிடுமாறு கூறுவது தான் இருவரையும் சோதித்துப் பார்ப்பதாக அமைய முடியும்.

📓
وَوَالِدٍ وَمَا وَلَدَ  ﴿90:3﴾
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

📓61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.

••••••••••••••••••••••••••••••••••••••
🐠Question no:103🐠

    Marumayil kanavan manaivi uravu eppadi irukkum?

🐠கேள்வி எண்:103🐠

மறுமையில் கணவர் மனைவி உறவு எப்படி இருக்கும்?

🌀பதில்🌀

   மறுமை பற்றிய செய்திகள்  நமக்கு  குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில்.எதைபற்றிய ஞானம் கொடுக்கப்படவில்லையோ அதை பற்றி தொடரவேண்டாம் என கூறியுள்ளான்.

அல்லாஹ் கணவன் மனைவி பற்றி கூறிய விஷயங்களில் நாம் உலகில் உள்ள கணவன் மறுமையில் வேண்டும் என துவா கேட்கும்போது,இருவரும் ஈமானை பேணி,நற்கருமங்கள் செய்து இறைவன் நாடினால் சொர்க்கத்தை அடையலாம்.

அங்கு இங்குள்ளது போல் இல்லாமல் பல மடங்கு அழகுள்ளவர்களாக மாற்றப்படுவோம். பெண்கள் அழகிய முத்துக்கள் போல் இருப்பார்கள். யாருமே எதிர்பாத்திராத பல இன்பங்கள் கணவன் மனைவிக்கு கிட்டும். அங்கு மகிழ்ச்சி மட்டுமெ இருக்கும். என்றென்றும் இளமையுடன் மட்டுமே இருப்பார்கள். மரணம் இல்லை. அவர்களுக்கு பலவித கனிவகைகள் கிடைக்கும். ஆறுகள் ஓடும்.
இப்படி அல்லாஹ் கூறிய அனைத்து இன்பங்களும் சொர்க்கத்தில் கிடைக்கும்.

📚📖ஆதாரங்கள்

📗
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا  ﴿17:36﴾
17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.

📗அவரது இளமை அழிந்துபோகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல் :  முஸ்லிம் 5456

📗மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.”                             அல்குர்ஆன் 56:23

📗சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: புகாரி 6568

📗சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக்காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடைகளிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மென்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5448

📗“என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5439

📗
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا  ﴿4:124﴾
4:124. ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

📗

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ  ﴿13:23﴾
13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.

📗
ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ  ﴿43:70﴾
43:70. நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

📗

يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ  ﴿43:71﴾
43:71. பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)

📗3245. இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்:  சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும். (அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
💦Question no:104💦

  Zam zam thaneerai fridge il  vaikkalaamaa?

💦கேள்வி எண்:104💦

ஸம் ஸம் தண்ணீரை குளிரூட்டியில் வைக்கலாமா.?

💧பதில்💧

ஸம் ஸம் தண்ணீர் மிக மிக மகத்துவமிக்க பல அரிய நன்மைகளை கொண்ட ஒரு நீராகும்.

பொதுவாக மற்ற நீரினை ஒரு சில நாட்களுக்கு மேல் வைத்தால் அதன் தன்மை மாறிவிடும். ஆனால் ஸம்ஸம் நீரினை எவ்வளவு காலம் வைத்திருந்தாலும் ஒரு சிறு அளவு கூட அதன் தன்மையில் இருந்து மாறாது.

இந்த சில நூற்றாண்டுகள்தான் குளிர் பதன பெட்டிகளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. இவை எல்லாம் இல்லாத ஏன்? மின்சாரம் கண்டுபிடிக்கப் படாத காலத்தில் கூட பல நூற்றாண்டு காலம் இந்த தண்ணீர் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அது அதன் தன்மையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இன்றைய விஞ்ஞானிகள் இதில் சோடியம்,கால்சியம், மெக்னீசியம், ஃப்ளோரைடு,பொட்டாசியம், நைட்ரேட்,சல்பேட் மற்றும் பல அரிய வகை சத்துக்கள் இருப்பதாக நிரூபித்துள்ளனர்.

பொதுவாக நீர் தேங்கிய இடத்தில் பாசி படரும், ஆனால் ஸம்ஸம் நீரூற்றை சுற்றி ஒரு சிறு அளவு கூட பாசி பிடிக்காதது பல ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்நீரை வெளியில் வைத்தாலும் ஒன்றும் ஆகாது.

குளிரூட்டியிலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தவித தடையும் கிடையாது.

============================

😵Question no:105😵

     Kottaavi vandhaal audhu  billaahi minashaithani rrajeem endru koora vendumaa? Idharku aadhaaram illai endru koorugiraargal adhu unmaiya?

😵கேள்வி எண்:105😵

  கொட்டாவி வந்தால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தான் நிர்ரஜீம் என்று கூற வேண்டுமா???
இதற்க்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்ரனர்.

⚪பதில்⚪

    கொட்டாவி என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து வருவதாகும்.,என்றாலும் அதற்கு அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

கொட்டாவியை இயன்றவரை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். “ஹா” என்று சத்தமிட்டு விடக்கூடாது. ஏனெனில் அதில் ஷைத்தானின் சிரிப்பு உள்ளது.

எனவே,அதை கட்டுப்படுத்தத்தான் நபி(ஸல்)அவர்கள்  தவிர வேறு எதை ஓதுவதற்கும் கூறவில்லை.

ஆனாலும் ஷைத்தானின் எந்த வித ஊசலாட்டத்தின் போது அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடவேண்டும் எனும் பொதுவான அடிப்படையில் நாம் விரும்பினால் சொல்லி கொள்ளலாம். ஆனால் தும்மலுக்கு உள்ளது போன்று கட்டாயம் சொல்லவேண்டிய அவசியமில்லை.

📚📖ஆதாரங்கள்

📕3289.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா“ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்ற வரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), 
நூல் முஸ்லிம் (5718) 

📕6226. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்“ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (“அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக“ என) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் “ஹா“ என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.

📕
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ  ﴿7:200﴾
7:200. ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🙎🏼Question no:106🙎🏼

     Manaivi velaiku poi sambathithal athai kanavanuku koduka vendama? Kodukamal irukum patchathil iruvarukum pirachanai vanthal enna seivathu?

🙎🏼கேள்வி எண்:106🙎🏼

   மனைவி வேலைக்கு போய் சம்பாதித்தால் கணவனுக்கு கொடுக்க வேண்டுமா?கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் பிரச்சனை வந்தால் என்ன செய்வது?

🌼பதில்🌼

   இஸ்லாத்தை பொறுத்தவரை கணவன் தான் மனைவியை பாதுகாக்க,நிர்வகிக்க வேண்டும்.

மனைவிக்கு வேலைக்கு செல்வதோ,பணம் சம்பாதிப்பதோ அவசியம் கிடையாது. ஆனால் குடும்ப சூழலை பொறுத்து  வேலைக்கு செல்ல வேண்டியிருந்தால் கணவனின் சம்மதத்தோடு,இஸ்லாமிய விதிமுறைக்குட்பட்டு வேலைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை கணவனுக்கு கொடுக்க அவசியம் கிடையாது. மனைவி விரும்பி தானே கொடுத்தால் தவறில்லை. ஆனால் மனைவியிடம் பணத்தை நிர்பந்தித்து வாங்குவதற்கு கணவனுக்கு உரிமையில்லை.

இதன் மூலம் வரும் பிரச்சனைகளை ஒருவரையொருவர் பேசி,வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தெரியப்படுத்தி சுமூகமான முறையில் தீர்க்க முயற்சிக்க வேண்டும். ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கணவர் சாதாரண முறையில் கேட்கிறாரா? சொத்து போன்றவைகளுக்கா? வீண்விரயத்திற்கா? கொடுமை படுத்தும் விதமாகவா? என்பதெல்லாம் அறிந்தபின்புதான் இதற்கு எவ்வாறு தீர்வு எடுக்கலாம் என்பது பற்றி முடிவெடுக்கமுடியும்.

சாதாரணமாக கேட்டால் மனைவி விரும்புதலின் அடிப்படையில் கொடுக்கலாம்,கொடுக்காமல் இருந்தாலும் அது மார்க்கத்தின் அடிப்படையில் குற்றமாகாது. அவர் கேட்கும் வீரியத்தை பொறுத்துதான் மனைவி முடிவெடுக்க முடியும்.

இயன்றவரை கணவனுடைய சம்பாத்தியத்தை போதுமாக்கிக் கொண்டு மனைவிமார்கள் வீட்டையும்,பிள்ளைகளையும் கவனித்து வந்தாலே இவ்வாறான பிரச்சனைகலிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஆனால் சூழ்நிலை அடிப்படையில் வேலைக்கு செல்ல நேரிட்டால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

கணவர் ஞாயமான முறையில் குடும்பத்தை கவனிக்காவிட்டால் நியாயமான முறையில் அவருடைய பணத்தால் எடுக்கக்கூட இஸ்லாம் அனுமதிக்கிறது எனும்போது மனைவி கொடுக்க எவ்வித கட்டாயமுமில்லை.

📚📖ஆதாரங்கள்

📗
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ ۚ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ ۚ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا  ﴿4:34﴾
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

📗அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவி யின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),

நூல்: புகாரி 56, 1296, 4409, 5668

📗ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி),

நூல்: புகாரி 55, 4006, 5351

📗ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி),

நூல்: முஸ்லிம் 1817

📗… மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங் கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை (அல் கவ்ஸர் தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி),

நூல்: முஸ்லிம் 3723

📗முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2211, 2460, 5359, 5364, 5370, 6641, 7161, 7170

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🕌Question no:107🕌

     tholugay baathilaagakudiya vidayangal enna?

🕌கேள்வி எண்:107🕌

தொழுகையை முறிக்கும் விஷயங்கள் என்ன?

🍒பதில்🍒

   உளூவை முறிக்கும் அனைத்து விஷயங்களும் தொழுகையை முறிக்கும்.
ஸஜ்தாவையும்,ருகூவையும் முழுமைப்படுத்தவில்லையெனில் தொழுகை இல்லை.

தொழுகையில் பேசினால் தொழுகை முறிந்து விடும்.

தொழுகையில் சிரித்தால் தொழுகை முறிந்து விடும்.

தொழுகை விரிப்பு வேலைப்பாடுகள் நிறைந்து,அடர் நிறங்களில் இருந்தாலும் தொழுகை திசை திருப்பப் படும்.

தொழுகையில் உலக எண்ணம் ஏற்பட்டால் மீண்டும் நிலைக்கு வந்து தொழுது கொள்ளலாம். ஆனால் முழுவதும் உலக எண்ணமாக மட்டுமிருந்தால் மீண்டும் தொழ வேண்டும்.

தொழுகையின்போது எச்சில் வந்தால் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் சளித்தொந்தரவின் போது அடக்கமுடியாதபோது வலப்புறமோ,நேராகவோ இல்லாமல் இடப்புறமாக துப்பி மண்போட்டு விடவேண்டும்.

நாம் எத்தனை ரக்காயத்துகள் தொழுதோம் என மறதி ஏற்பட்டால் சஜ்தா ஸஹ்வு செய்து ,தொழுகையை நிறைவு படுத்தலாம். இதனால் தொழுகையை மீண்டும் தொழத் தேவையில்லை.

எனவே,தொழுகையை மிகவும் உள்ளச்சத்துடன் அல்லாஹ்வுடன் உரையாடுகிறோம் என்பதை நினைவில் வைத்து தொழவேண்டும்.

📚📖ஆதாரங்கள்

📘நபி(ஸல்) அவர்கள் கிராமவாசி ஒருவர் தொழுகையை முறைப்படி தொழாது, நிலை, ருகூஃ, ஸுஜூது முதலிய தொழுகையில் பர்ளாயுள்ளவற்றை அரைகுறையான வகையில் செய்து தொழுத போது அவரை நோக்கி மீண்டும் நீர் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவில்லை என்று கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

📗அப்போது அவர்கள் என்னை நோக்கி, நிச்சயமாக இத்தொழுகையானது இதில் மனிதர்களின் பேச்சுக்கும் இடமில்லை தொழுகை என்றால் ”தஸ்பீஹ்” செய்தல், தக்பீர் கூறல், குர்ஆன் (முஆவியத்துப்னில் ஹக்கம்(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

📗ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரையோ அல்லது அஸ்ரையோ தொழ வைத்தபோது இரண்டாவது ரகாஅத்தில் ”ஸலாம்” கொடுத்து விட்டார்கள். அப்போது ”துல்யதைன்” என்பவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் தான் மறந்து விட்டீர்களா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”தொழுகை குறைக்கப்படவுமில்லை, நான் மறந்து விடவுமில்லை” என்றார்கள். அதற்கு மீண்டும் அவர் அல்லாஹ்வின் தூதரே!” இல்லை நீங்கள் தாம் மறந்து விட்டீர்கள்” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ”துல்யதைன் கூறுவது உண்மையா?” என்று கேட்டார்கள். அனைவரும் ”ஆமாம்” என்றனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் (விடுபட்டுள்ள) இரண்டு ரகாஅத்துகளையும் தொழுதுவிட்டு 2 ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

📗
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ  ﴿2:238﴾
2:238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

📗நாங்கள் தொழுகையில் பேசுபவர்களாயிருந்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தமக்கு அடுத்துள்ள நபரிடம் தொழும்போது (சாதாரணமாகப்) பேசிக் கொண்டிருப்பார். இந்நிலையில் தான் ”அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்” (2:238) எனும் வசனம் அருளப்பட்டது. அப்போது நாங்கள் (தொழுகையில்) மௌனமாக இருக்கும்படி ஏவப்பட்டு பேசக்கூடாது என தடை விதிக்கப்பட்டோம். (ஜைதுபின் அர்க்கம்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

📗நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்கும்போது, பார்வைக் கோளாறினால் பள்ளியில் பிரவேசித்த ஒருவர் பக்கத்திலிருந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களோடு தொழுது கொண்டிருந்தோரில் அநேகர் தாம் தொழும் போதே (அவர் விழுந்ததைப் பார்த்து) சப்தமிட்டுச் சிரித்து விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சிரித்தவர்களை நோக்கி அவர்கள் ஒளூவையும் மீட்ட வேண்டும். தொழுகையையும் மீட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அபூமூஸா(ரழி), தப்ரானீ)

📗ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். (19:58)

📗373 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும்,எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு,அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.

📗135. ”சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோதுஇ ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ”அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ”சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது” என்றார்கள்” ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🍋Question no: 108🍋

  Khaala vudaiya mahan thambi murai aagirathu,  (avar vayathil migavum siriyavar) avaruku islam koorum maslaah enna? Avaruku kosa murai avarudan payanam seiyalama?
ithu erandum oru vithavaiyana pennuku eppidi ?

🍋 கேள்வி எண்: 108🍋

    ஒரு விதவைப்பெண் தன் சிறிய தாயார் மகனுடன் தனித்து பயணம் செல்லலாமா? தம்பி முறையில் இருக்கும் அவருடன் ஹிஜாபை பேண வேண்டுமா?
அவர் சிறிய வயதுடையவர்தான். இதற்கான விளக்கம் தரவும்.

☘பதில்☘

அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களை மிகத்தெளிவாக கூறியுள்ளான்.

அதில்,உங்கள் தாய்மார்களும்,உங்கள் புதல்வியரும்,உங்கள் சகோதரிகளும்,உங்கள் தந்தையின் சகோதரிகளும்;உங்கள் தாயின் சகோதரிகளும்,உங்கள் சகோதரனின் புதல்வியரும்,உங்கள் சகோதரியின் புதல்வியரும்,உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும்,உங்கள் பால்குடி சகோதரிகளும்,உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்;

இந்த வரிசையில் அந்த பையனின் பெரியம்மாவின் மகள் மஹ்ரமான உறவின் அடிப்படையில் வரமாட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் அந்த பெண் நிச்சயமாக ஹிஜாபை பேண வேண்டும்.

அந்நிய ஆணிடத்தில் நடந்து கொள்ளும் அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

மஹ்ரமில்லாத ஆணுடன் தனியே பயணிப்பது கூடாது எனும் இதே விதிமுறைதான் தன் தம்பி முறையில் இருக்கும் இவருடன் பயணிப்பதும்.

அவரும் அந்நிய பெண்களி டம் கடைபிடிக்கும் விதி முறைகளைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

இதில் வயது என்பது முக்கியமல்ல,பருவமடைந்தது முதல் வயதானவர்கள் வரை எல்லாருக்கும் ஒன்றுதான். ஏனெனில் இத்தனை வயதுவரை என்ற வரைமுறை மார்க்கத்தில் இல்லை.

விதவைப்பெண்ணுக்கு என்று தனியே சலுகை கிடையாது. அனைத்து பெண்களுக்கும் உள்ள பொதுவான சட்டங்கள் தான் இவர்களுக்கும்.

📚📖ஆதாரங்கள்

📘4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது – இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

📘5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்““ என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்““ என்று கூறினார்கள். 162
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

📘2611. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ”ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கவேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும்போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ”அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ”ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர” எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🈯Question no: 109🈯

    Tatoos pantrathu haram ah ethukku explain?

🈯கேள்வி எண்: 109🈯

பச்சை குத்துவது ஹராமா? விளக்கம் தேவை.

❇பதில்❇

பச்சை குத்தி கொள்வது என்பது அல்லாஹ் படைத்த இயற்கையான உருவத்தை மாற்றும் ஒரு செயலாகும்.
அல்லாஹ் நம்மை எப்படி நம்மை படைத்தானோ அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மாற்றுவது இஸ்லாத்தை பொறுத்தவரை பெரும் குற்றமாகும்.

அதுமட்டுமன்றி இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். ஒரு அற்ப அழகிற்காக ஆசைப்பட்டு படைத்த இறைவனது சாபம் வாங்க வேண்டுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

சொர்க்கத்தின் நறுமணம் பல பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலேயே வீசத் தொடங்கிவிடும். பச்சைகுத்துவது போன்ற செயல்கள் செய்வதால் சொர்கத்தின் வாடையை கூட நாம் நுகர முடியாது.

நமக்கு வழிகாட்டியாக வந்த நபி(ஸல்) அவர்கள் ஒன்றை தடுத்தால்  அதை எந்த சந்தர்ப்பத்திலும் செய்யக்கூடாது.

அல்லாஹ்வின் கருணை என்பது மிகப்பெரிய பொக்கிஷம். இது போன்ற சாதாரண அல்ப விஷயன்களுக்காக அல்லாஹ்வின் கருணையை இழக்க நேரிடும். எனவே,இது போன்ற செயல்களிலிருந்து நாம் முற்றிலும் விலகிவிட வேண்டும்.

அல்லாஹ் நம்மை படைத்த இயற்கை அழகிற்கும்,ஆராக்கியத்திற்கும் நன்றி கூறி இந்த தற்காலிக அழகில் மனம் செல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய விஞ்ஞான ஆய்வுகளும் பச்சை குத்துவது, புருவம் வடிவமைப்பது போன்ற செயல்களால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அறிவித்திருக்கிறது. எனவே இதை தவிர்த்துக் கொண்டு இம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற வேண்டும்.

📚📖ஆதாரங்கள்:

📙5931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்  பச்சை குத்திவிடும், பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! “இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்“ (என்பதே அந்த (திருக்குர்ஆன் 59:7 வது) வசனம்).120
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

📙5933. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

📙…… மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

=============================

👰Question no:110👰

    Pattaadai aangalukku haraam aa? illai pengalukkumaa?

👰கேள்வி:110👰

பட்டாடை ஆண்களுக்கு ஹராமா? இல்லை பெண்களுக்குமா?

🌷பதில்🌷

   பட்டாடை ஆண்களுக்கு தடுக்கப்பட்ட ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியும் ஆண்களை மிகவும் கண்டித்தார்கள். ஆண்கள் பட்டாடை அணிவது மிகவும் வெறுக்கக்கூடிய செயல் என எச்சரித்தார்கள். யாருக்கு மறுமையில் நற்பேறு வேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்கள் உலகில் அணியட்டும் என கூறினார்கள். இதிலிருந்து ஆண்களுக்கு பட்டாடை ஹராம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் பெண்கள் பட்டாடையை தாராளமாக அணிந்து கொள்ளலாம். இஸ்லாம் பெண்களுக்கு அதை தடை செய்யவில்லை.
நபி(ஸல்)அவர்கள் அன்பளிப்பாக வந்த பட்டாடைகளை பெண்களுக்கு பங்கிட்டு கொடுக்க சொன்னார்கள் என்பதிலிருந்தும், பட்டாடை வியாபாரத்தை தடுக்கவில்லை என்பதிலிருந்தும் இது பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டது என தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் ஆண்கள் அணிவதற்கு தடை செய்து பெண்களுக்கு அனுமதி உள்ளது போன்று,பட்டு ஆண்களுக்கு தடை செய்து பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. எனவே, பெண்கள் அணிவதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.

📚📖ஆதாரங்கள்:

📓4071. ஸஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) அறிவித்தார்.
மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் இப்னு கத்தாப்(ரலி) பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர்(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர்இ ”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினர். அலீ(ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர்(ரலி)இ ”உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும்இ உம்மு சலீத் அவர்கள்இ இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.” என்று கூறினார்கள். (மேலும்) ”அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோலினால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்” என்றும் உமர்(ரலி) கூறினார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

📓5981. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
(என் தந்தை) உமர்(ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டுஇ ”இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக்கிழமையிலும்இ தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ ”எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்” என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர்(ரலி)இ ”நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இ ”இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாகஇ இதை நீங்கள் விற்றுவிடலாம்; (பெண்களுக்கோஇ மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்” என்று கூறினார்கள்.
எனவேஇ உமர்(ரலி) அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

📓4198. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
”தமீம்” குலத்தைச் சேர்ந்த உத்தாரித் (பின் ஹாஜிப்) என்பவர் கடைத்தெருவில் நின்றுஇ கோடுபோட்ட பட்டு அங்கி விற்பதை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள்.
-உத்தாரித் (பன்னாட்டு) மன்னர்களுடன் தொடர்புள்ளவராகவும்இ அவர்களிடமிருந்து (பல்வேறு பொருட்களைப்) பெற்றுவருபவராகவும் இருந்தார்.-
பிறகு உமர் (ரலி) அவர்கள்இ ”அல்லாஹ்வின் தூதரே! கடைத்தெருவில் நின்றுஇ கோடு போட்ட பட்டு அங்கியை உத்தாரித் விற்பதைக்கண்டேன். அதைத் தாங்கள் வாங்கிஇ அரபுத் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போது தாங்கள் அணிந்துகொண்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னார்கள். ”வெள்ளிக்கிழமையின்போதும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்குமே” என்றும் அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”மறுமையில் எந்த நற்பேறும் இல்லாதவரே இம்மையில் இந்தப் பட்டாடைகளை அணிவார்” என்று சொன்னார்கள்.
பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோடு போட்ட பட்டாடைகள் சில கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றில் ஓர் பட்டாடையை உமர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். இன்னொன்றை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்துஇ ”இதை முக்காடுகளாக வெட்டி உங்கள் பெண்களிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் தமது பட்டாடையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துஇ ”அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். ஆனால்இ உத்தாரித் விற்ற பட்டாடை குறித்து நேற்று தாங்கள் வேறுவிதமாகக் கூறினீர்களே?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாகஇ இதை நீங்கள் (விற்றுப் பணம்) பெறுவதற்காகவே கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.
உசாமா (ரலி) அவர்களோ அதை அணிந்துகொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உசாமாவை உற்றுப் பார்த்தார்கள். (அவர்கள் பார்த்த பார்வையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தாம் (இவ்வாறு) செய்தது பிடிக்கவில்லை யென்பதை உசாமா உணர்ந்து கொண்டார்.
உடனே ”அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இப்படி) என்னை உற்றுப் பார்க்கிறீர்கள்? தாங்கள் தாமே இதை எனக்குக் கொடுத்தனுப்பினீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”இதை நீ அணிந்துகொள்வதற்காக உனக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாகஇ இதை முக்காடுகளாக வெட்டிஇ உன் (வீட்டுப்) பெண்களுக்குப் பங்கிடுவதற்காகவே உனக்குக் கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

📓4873. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான மேலங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள்இ பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள். மக்களோ அந்த மேலங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிட அழகானவை ஆகும்” என்று சொன்னார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ”தூமத்துல் ஜந்தல்” பகுதியின் அரசர் ”உகைதிர்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாகத் தந்தார்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அதில் ”அவர்கள்  பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்

📓”பட்டாடை அணிவதும்,  தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண் களுக்கு ஹலால் (அனுமதிக்கப் பட்டது) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: திர்மிதி 1642

📓”சாதாரண பட்டோ, அலங்காரப் பட்டோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் (காஃபிர்களாகிய) அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர் களான) நமக்கும் உரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)

நூல்: புகாரி 5426

📓நபி (ஸல்) அவர்கள் “இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5830

📓”அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கு இருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2919

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Leave a comment